Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Free IAS Coaching by Tamilnadu Government 2022: உதவித் தொகையுடன் கூடிய இலவச பயிற்சி….! தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு….!

Gowthami Subramani June 26, 2022 & 09:40 [IST]
Free IAS Coaching by Tamilnadu Government 2022: உதவித் தொகையுடன் கூடிய இலவச பயிற்சி….! தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு….!Representative Image.

Free IAS Coaching by Tamilnadu Government 2022: இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உதவித் தொகையுடன் கூடிய இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மாணவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு வகையான நலத்திட்ட பணிகளைச் செய்து வருகிறது. அதன் படி, யுபிஎஸ்சி போன்ற குடிமைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் முதல்நிலைப் பணியாளர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இலவச உதவித் தொகையுடன் பயிற்சியை வழங்குகிறது. அவ்வாறு, அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் சேர விரும்பும் நபர்கள் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் (Free IAS Coaching by Tamilnadu Government 2022).

விண்ணப்பிக்கும் நபர்கள் மற்றும் தேதி

அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில், இந்த ஆண்டு 225 பேர் தங்கி பயிற்சி பெற்றுக் கொள்ளலாம். மேலும், இந்த பயிற்சி மையத்தில் விண்ணப்பம் ஜூன் 24 ஆம் நாள் மாலை 6 மணிக்கு தொடங்கப்பட்டது. மேலும், இது வரும் ஜூன் மாதம் 27 ஆம் நாள் மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம் (All India Civil Service Coaching Centre Entrance Exam 2022 Notification).

பயிற்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

www.civilservicecoaching.com

இந்த இணையதள முகவரிக்கு சென்று பயிற்சி மையத்தில் சேர நினைக்கும் நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

வகுப்புகள் தொடங்கப்படும் நாள்

இட ஒதுக்கீட்டுப் படி, வரும் ஜூன் மாதம் 28 ஆம் நாள் மாலை 6 மணிக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும், ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்வர்களுக்கான சேர்க்கை நடைபெறும் மற்றும் வகுப்புகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது (IAS Free Coaching Entrance Exam 2022).

ஆவணங்கள் ஒப்படைப்பு

இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்களின் படி, உரிய அலுவலர்கள் அளித்த வருமானச் சான்றிதழை பயிற்சி மையத்தில் சேரும் போது ஒப்படைக்க வேண்டும். மேலும், வருமானச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்ததற்கான இணையதள ரசீதை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் (All India Civil Service Coaching Centre Entrance Exam 2022).

பொது விவரங்கள்

மத்திய அரசு தேர்வு பணியாளர் தேர்வாணையம் இந்திய ஆட்சி பணி, இந்திய வனப்பணி, இந்திய காவலர் பணி போன்ற பல்வேறு வகையான குடிமைப் பணிகளுக்கான தேர்வு நடத்தி வருகிறது (Free IAS coaching in Tamilnadu).

மேலும், இதற்கான முதல் நிலைத் தேர்வு, முதன்மை தேர்வு, நேர்காணல் தேர்வு என மூன்று தேர்வுகளின் இறுதிப்பட்டியலின் படி, தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும், முதல் நிலைத் தேர்வில் பெறக்கூடிய மதிப்பெண்கள் அடிப்படையில் முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெறுவர். முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்கள் நேர்காணல் முறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இந்த முதன்மைத் தேர்வு 1,750 மதிப்பெண்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெறும். அதன் படி, இதில் தேர்ச்சி பெற்றவர்களே நேர்காணலுக்குத் தகுதி பெறுவர். மேலும், நேர்காணல் தேர்வு 275 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இவ்வாறு, முதன்மை தேர்விலும், நேர்முகத் தேர்விலும் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதிப்பட்டியல் தயாரிக்கப்படும் (Free UPSC Coaching in Tamilnadu 2022).

அதன் படி, இந்த 2023 ஆம் ஆண்டிற்கான முதன்மைத் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் முதல் தொடங்குகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்