Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Yesterday Current Affairs in Tamil: ஜூலை 16 & 17, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்....!

Gowthami Subramani July 18, 2022 & 16:30 [IST]
Yesterday Current Affairs in Tamil: ஜூலை 16 & 17, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்....!Representative Image.

Yesterday Current Affairs in Tamil: ஜூலை மாதம் 16 மற்றும் 17 ஆகிய இரு நாள்களின் நடப்பு நிகழ்வுகளைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம். மேலும், டிஎன்பிஎஸ்சி மற்றும் போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்களைப் பற்றித் தெரிந்து கொள்ள நமது searcharoundweb என்ற பக்கத்தில் இணைந்திருங்கள்.

குரங்கம்மை பாதிப்பு

இந்தியாவில் எந்த மாநிலம் அல்லது உத்திரப் பிரதேசம் குரங்கம்மை பாதிப்பைப் பதிவு செய்துள்ளது?

விடை: கேரளா

இந்தியாவில் முதன்முறையாக குரங்கம்மை பாதிப்பு கேரள மாநிலத்தில் பதிவாகியுள்ளது. புனேவில் உள்ள தேசிய தீநுண்மவியல் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட 35 வயது ஆணின் மாதிரி பரிசோதனையில் நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த நபர் 3 நாட்களுக்கு முன்னர், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த குரங்கம்மை பெரியம்மை போன்ற நோயாகும். இது வைரஸ் மூலம் பரவுகிறது.


ஜூலை 15, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்....!

 


RoSCTL உடன் தொடர்புடைய நடுவண் அமைச்சகம்

மாநில மற்றும் ஒன்றிய வரிகள் மற்றும் தீர்வைகள் தள்ளுபடி (RoSCTL) திட்டத்துடன் தொடர்புடைய நடுவண் அமைச்சகம் எது?

விடை: வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

மாநில மற்றும் ஒன்றிய வரிகள் மற்றும் தீர்வைகள் (RoSCTL) தள்ளுபடிக்கானது திட்டத்தைத் தொடர்வதற்கு வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகமானது, ஜவுளி அமைச்சகம் அதே விகிதங்களுடன் கூடிய ஆடைகள் மற்றும் ஒப்பனைப் பொருள்களின் ஏற்றுமதிக்கு மார்ச் 34, 2024 ஆம் நாள் வரை அங்கீகாரம் அளித்துள்ளது. மேலும், ஏற்றுமதியை அதிகரிப்பது மற்றும் ஜவுளித் தொழிலில் வேலைவாய்ப்பை உருவாக்குவது இதன் முக்கிய நோக்கம் ஆகும்.

அரசுத் தலைமை வழக்கறிஞர்

2022 நிலவரப்படி, இந்தியாவின் அரசுத் தலைமை வழக்கறிஞர் யார்?

விடை: K K வேணுகோபால்

நடுவண் சட்டத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின் படி, இந்திய அரசுத் தலைமை வழக்கறிஞராக K K வேணுகோபால் அவர்களின் பதவிக் காலத்தை 3 மாதங்களுக்கு நீட்டித்து நடுவணரசு உத்தரவிட்டுள்ளது. இவரின் வயது 91. இவர் இந்திய அரசுத்தலைமை வழக்கறிஞராகப் பணியாற்றும் 15 ஆம் நபராக, கடந்த ஜூலை 01, 2017 ஆம் நாள் நியமிக்கப்பட்டார். மேலும், 2014 ஜூன் முதல் 2017 ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்திய அரசுத்தலைமை வழக்கறிஞராக முகுல் ரோகத்கி இருந்தார்.


டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் – பாகம் 12

 


டைம் இதழ்

டைம் இதழின் “2022 ஆம் ஆண்டின் உலகின் 50 சிறந்த இடங்கள்“ பட்டியலில் சேர்க்கப்பட்ட மாநிலம் எது?

விடை: கேரளா

கடவுளின் சொந்த நாடு என கேரளா அழைக்கப்படுகிறது. டைம் இதழின் 2022-ன் உலகின் 50 சிறந்த இடங்கள் பட்டியலில் கேரளா இடம்பிடித்துள்ளது. டைம் இதழ், கேரளாவை இந்தியாவின்மிகவும் அழகான மாநிலங்களுள் ஒன்று என விவரித்துள்ளது. இந்தியாவின் முதல் UNESCO உலகப் பாரம்பரிய நகரமான ஆமதாபாத், 2022 ஆம் ஆண்டின் உலகின் 50 சிறந்த இடங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

செலவுமிகு நகரம்

மெர்சரின் 2022 ஆம் ஆண்டிற்கான, நகரங்களில் வாழ்க்கைச் செலவினம் குறித்த தரவரிசையின் படி, அயல்நாட்டு ஊழியர்களுக்கு இந்தியாவில் மிகவும் செலவுமிகு நகரம் எது?

விடை: மும்பை

மெர்சரின் 2022 ஆம் ஆண்டுக்கான, நகரங்களில் வாழ்க்கைச் செலவினம் குறித்த தரவரிசையின் படி, அயல்நாட்டு ஊழியர்களுக்கு இந்தியாவில் மிகவும் செலவுமிகுந்த நகரமாக மும்பை உள்ளது. இது உலகளவில் 127 ஆவது இடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து புது தில்லி 155 ஆவது இடத்திலும், புனே 201 ஆவது மற்றும் கொல்கத்தா 203 ஆவது இடங்களில் உள்ளன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Current Affairs in Tamilnadu | Today Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | Current Affairs 2022 in Tamil | Yesterday Current Affairs in Tamil | Current Affairs 2022 in Tamil | Exam Daily Current Affairs Tamil | Daily Current Affairs TNPSC | TN Current Affairs | Today Current Affairs in Tamilnadu | Current Affairs for TNPSC Group 4 | Exams Daily Current Affairs in Tamil | TNPSC Group 4 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்