Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..! எப்படி விண்ணப்பிப்பது..? | How to Apply CUET UG 2023 Exam

Gowthami Subramani Updated:
தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..! எப்படி விண்ணப்பிப்பது..? | How to Apply CUET UG 2023 ExamRepresentative Image.

ஆண்டுதோறும், இந்தியாவில் உள்ள பல்வேறு முன்னணி பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகள் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு வைக்கப்படும். இது, யுஜிசி சார்பில், தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் படி, இந்த நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க கடந்த பிப்ரவரி 9, 2023 ஆம் நாள் விண்ணப்பப் பதிவு தொடங்கியது. இதற்கான கால அவகாசம் மார்ச் 12, 2023 ஆம் தேதி முடிவடையும் எனக் கூறப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் மார்ச் 30 ஆம் நாள் வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது.

இதனிடையே மாணவர்கள், மீண்டும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன் படி, இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று அதாவது ஏப்ரல் 11, 2023 ஆம் நாள் வரை அவகாசம் அளிக்கப்பட்டது. அதன் படி, கியூட் யுஜி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி தேதி ஆகும்.

தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..! எப்படி விண்ணப்பிப்பது..? | How to Apply CUET UG 2023 ExamRepresentative Image

CUTE UG 2023 தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

அதன் முகப்பு பக்கத்தில் உள்ள Register என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.

அதில், நீங்கள் தெரிந்து கொள்ள சில அறிவுரைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றை முழுமையாக படித்து, பின் கீழே Proceed என்பதைக் க்ளிக் செய்யவும்.

பின் உள்ளே நுழைந்தவுடன், Online Registration Form-ஐ சரியாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.

பிறகு உங்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு உங்களுக்கென புதிய Login ID மற்றும் Password உருவாகி விடும்.

பிறகு, Login செய்து, உங்கள் ID-யின் வழியாக ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யவும்.

விண்ணப்பத்தைச் சரியாகப் பூர்த்தி செய்து, பிறகு விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் வழியாக செலுத்தி Submit கொடுக்கவும்.

இவ்வாறு செய்த பிறகு, உங்கள் விண்ணப்பப் படிவத்தை Download செய்து எடுத்து வைத்துக் கொள்ளலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்