Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Apply for Group 2 Exam: டிஎன்பிஎஸ்சி-க்கு எப்படி விண்ணபிக்கிறதுனு தெரியலயா..? இப்படி பண்ணுங்க.

Gowthami Subramani [IST]
How to Apply for Group 2 Exam: டிஎன்பிஎஸ்சி-க்கு எப்படி விண்ணபிக்கிறதுனு தெரியலயா..? இப்படி பண்ணுங்க.Representative Image.

How to Apply for Group 2 Exam: தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்குத் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பணிக்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்படும். இவ்வாறு அரசின் கீழ் இயங்கக் கூடிய பல்வேறு துறைகளுக்கு, தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் (TNPSC Group 2 Exam).

இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தேர்வில், பல்வேறு வகையான குரூப் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் கீழ் இயங்கக் கூடிய பதவிகளுக்கு தகுதியானவர்கள் நியமிக்கப்படுவார்கள்.

அதன் படி, இந்தப் பதிவில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளைக் காண்போம். தேர்வு எழுத விரும்புவோர்கள், கீழ்க்கண்ட முறைகளைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் (TNPSC Group 2 Apply Online).

விண்ணப்பிக்கும் முறை

படி 1: டிஎன்பிஎஸ்சி தேர்வில் விண்ணப்பிக்க நினைக்கும் நபர்கள், முதலில் அதிகாரப்பூஒர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

படி 2: முதலில் விண்ணப்பதாரர்கள் ஒரு முறை ஆன்லைன் பதிவு செய்ய வேண்டும். இந்தப் பதிவு, அடுத்த ஐந்து ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். மேலும், இதனை உறுதிப்படுத்த ரூ. 150 தொகையைச் செலுத்த வேண்டும். அதன் பின், தனி நபருக்கான பதிவு ஐடி மற்றும் கடவுச்சொல் (Password) வழங்கப்படும். இதை நாம் எதிர்காலப் பயன்பாட்டிற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

படி 3: டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அவர்களின் சமீபத்தில் எடுத்த புகைப்படம் மற்றும் கையொப்பம் போன்றவற்றை குறிப்பிடப்பட்ட அளவு கோலில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

படி 4: விண்ணப்பதாரர்கள், அவர்களின் பெயர், கல்வித்தகுதி, பிறந்த தேதி, முகவரி, மின்னஞ்சல் முகவரி, தேர்வுக்கான மையம் மற்றும் இன்னும் பிற தகவல்களை விண்ணப்பப் படிவத்தில் நிரப்ப வேண்டும்.

படி 5: பின்னர், விண்ணப்பப் படிவத்தை ஒரு முறைக்கு இரு முறை சரிபார்த்து, விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், பூர்த்தி செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை எதிர்கால பயன்பாட்டிற்காக நகலாக எடுத்துக் கொள்ள வேண்டும் (TNPSC Jobs).

படி 6: இந்தப் பதிவு செயல்முறையை வைத்து, டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிப்பதை ஏற்றுக் கொள்ளலாம்.

மேற்கூறிய படிகளைப் பயன்படுத்தி, டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்