Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழக அரசின் இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சிக்கு விண்ணப்பிப்பது எப்படி? | Tamil Nadu Govt Free Coaching for Competitive Exams

Nandhinipriya Ganeshan Updated:
தமிழக அரசின் இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சிக்கு விண்ணப்பிப்பது எப்படி? | Tamil Nadu Govt Free Coaching for Competitive ExamsRepresentative Image.

தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சர் தியாகராய கல்லூரியில் TNPSC, IBPS, SSC, RRB போன்ற போட்டி தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கி 6 மாதங்கள் நடைபெற உள்ளன. எனவே, TNPSC, IBPS, SSC, RRB போன்ற போட்டி தேர்வுக்கு தயாராகும் தமிழ்நாட்டை சேர்ந்த தேர்வர்கள் இலவச பயிற்சி பெற இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம். 

இது தொடர்பான வெளியியப்பட்டுள்ள செய்தி குறிப்பில்,

TNPSC மற்றும் IBPS, SSC, RRB ஆகிய போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தழிழ்நாட்டை சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 இடங்களுக்கும் மற்றும் நந்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் 300 இடங்களுக்கும் பயிற்சிகல் வழங்கப்படுகிறது.

தற்போது, மேற்படி போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு, புதிதாக இணையவழி மூலம் விண்ணப்பங்கள் பெற்று சேர்க்கை நடைபெற உள்ளது. பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை ஆறு மாத காலம் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இப்போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவு மற்றும் தங்கும் வசதிகள் இல்லை.

தமிழக அரசின் இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சிக்கு விண்ணப்பிப்பது எப்படி? | Tamil Nadu Govt Free Coaching for Competitive ExamsRepresentative Image

1. தகுதி:

அ. குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆ. 01.01.2023 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

இ. தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

2. விண்ணப்பிக்கும் முறை:

பயிற்சி பெற விரும்புவோர் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மைய இணையதளமான www.civilservicecoaching.com மூலம் இணையவழியாக மார்ச் 31, 2023 வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும், பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களை முழுமையாக சரிபார்த்த பின்னர் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இணைய வழி மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின் திருத்தம் கோரி பெறப்படும் எந்த ஒரு கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

3. அழைப்புக் கடிதம்:

பயிற்சி வகுப்புக்கான அழைப்புக் கடிதம், அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மைய இணையதளம் www.civilservicecoaching.com இல் பதிவேற்றம் செய்யப்படும். அவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட அழைப்புக் கடிதத்தினை பதிவிறக்கம் செய்து சேர்க்கையின்போது அவசியம் எடுத்துவர வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கான சேர்க்கை குறித்த நாள் மற்றும் நேரம் இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். அழைப்புக் கடிதம் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட மாட்டாது. 

4. தெரிவு செய்யும்முறை:

பத்தாம் வகுப்பு மொத்த மதிப்பெண் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட தேர்வர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் பயிற்சி மையத்தில் இனவாரியாக உள்ள இடங்களுக்கு ஏற்ப நேரடியாக பயிற்சிக்கு அழைக்கப்படுவர்.

5. உணவு மற்றும் தங்கும் வசதிகள் இப்பயிற்சி மையங்களில் இல்லை.

6. வகுப்பு நேரம்:

தேர்வர்கள் பயிற்சிக்கு தினமும் வந்து செல்லும் வகையில் பிற்பகல் 02.00 மணி முதல் 05.00 மணி வரை வாராந்திர வேலை நாட்களில் மட்டும் நடைபெறும். பயணப்படிகள் வழங்கப்பட மாட்டாது. வருகைப்பதிவு மிகவும் அவசியம்.

இப்போதே விண்ணப்பியுங்கள்:

https://www.civilservicecoaching.com/

மேலும் விவரங்களுக்கு: 

7373532999, 

9894541118, 

8667276684, 

8489334419

மின்னஞ்சல் முகவரி:

ceccchennai@gmail.com

ceccnandanam@gmail.com

விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 31, 2023


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்