Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

NEET UG 2023: நீட் தேர்வுக்கான அறிவிப்பு! இன்று முதல் விண்ணப்பம் தொடக்கம்.. எப்படி விண்ணப்பிப்பது?

Gowthami Subramani Updated:
NEET UG 2023: நீட் தேர்வுக்கான அறிவிப்பு! இன்று முதல் விண்ணப்பம் தொடக்கம்.. எப்படி விண்ணப்பிப்பது?Representative Image.

2023 ஆம் ஆண்டின் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக, இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன் படி, எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுர்வேதா மற்றும் பிஎஸ்எம்எஸ் உள்ளிட்ட இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கென தனித்தனியே நீட் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுள் குறித்த விவரங்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

இந்த தேர்வுகளை எழுதி தகுதியான நபர்கள் மட்டுமே இந்தியாவில் மருத்துவப் படிப்பில் சேர முடியும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான விவரங்களைப் பற்றி இதில் காணலாம்.
 

NEET UG 2023: நீட் தேர்வுக்கான அறிவிப்பு! இன்று முதல் விண்ணப்பம் தொடக்கம்.. எப்படி விண்ணப்பிப்பது?Representative Image

நீட் தேர்வு 2023 விண்ணப்பிப்பது எப்படி?

✤ விண்ணப்பதாரர்கள் தேசிய தேர்வு முகமையின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.

✤ அதன் படி, nta.ac.in அல்லது neet.nta.nic.in போன்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

✤ பிறகு, அதில் Candidate Activity என்பதைக் க்ளிக் செய்து கொள்ள வேண்டும்.

✤ அதில் NEET UG 2023 Registration Link என்ற இணைப்பைக் க்ளிக் செய்யலாம்.

✤ அதன் பிறகு, அதில் கேட்கப்படும் தேர்வர்களின் விவரங்களைப் பூர்த்தி செய்து, அதில் கேட்கப்பட்ட ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

✤ பின், விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நீட் 2023 தேர்வு தேதி

இந்த 2023 ஆம் ஆண்டிற்கான இளநிலை நெட் தேர்வு வரும் மே மாதம் 7 ஆம் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு இன்று முதலேயே தொடங்குகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்