அன்பு மாணவச் செல்வங்களே! உங்களுக்கு அனைவருக்கும் டாக்டராகி ஊசி போட தான் ஆசையா? ஆனால், அந்த வாய்ப்பு எத்தனை பேருக்கு கிடைக்கும் என்று நம்மால் உறுதியாக சொல்ல முடியாது. அதைவிட அற்புதமான வேலைகள், படிப்புகள் நிறைய இருக்கின்றன. அதை தேர்ந்தெடுக்கலாமே? அதே மனநிறைவான வேலை, குறைவான கட்டணத்தில் படிப்பு கிடைக்கும். என்னனு தெரிந்துக்கொள்ள விருப்பமா? இதோ தெரிந்துக் கொள்ளுங்கள். தற்போது 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கும், படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் நிச்சயம் உபயோகமாக இருக்கும்.
இந்திய மத்தியப் பல்கலைக்கழகங்கள்:
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் மத்திய அரசால் மாநிலத்திற்கொரு மத்திய பல்கலை கழகம் என்ற பெயரில் 13 பல்கலை கழகங்கள் [Central Universities] செயல்பட்டு வருகின்றன. அதுபோக, அஸ்ஸாம் பல்கலைக் கழகம் [சில்சார் அஸ்ஸாம் மாநிலம்], பாபா குலாம் ஷா பாதுஷா பல்கலைக் கழகம் ராஜோரி [ஜம்மு காஷ்மீர் மாநிலம்], டாக்டர் அம்பேத்கார் ஸ்கூல் ஆஃப் எக்கானமிக்ஸ் யூனிவர்ஸிடி [பெங்களூரு], காலிக்கோட் பல்கலைக் கழகம் [பேரம்பூர் ஒடிஸா மாநிலம்], சர்தார் படேல் யூனிவர்ஸிடி ஆஃப் போலீஸ் செக்யூரிட்டி மற்றும் கிரிமினல் ஜஸ்டிஸ் [ஜோத்பூர்] என பிற 5 யூனிவர்ஸிட்டிகளும் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நடத்தப்படுகின்றன.
எப்படி இந்த பல்கலை கழகங்களில் சேர்வது?
மேலே கூறிய 18 மத்திய பல்கலை கழகங்களில் எந்த பல்கலை கழகத்தில் வேண்டுமானாலும் சேர்ந்து படிக்கலாம். அதற்கு மொத்தமாகவே ஒரே ஒரு நுழைவுத் தேர்வு [cucetexam - Central University common entrance exam] தான் நடத்தப்படுகிறது.
இந்த நுழைவு தேர்வை எழுத 12ஆம் வகுப்பு முடித்து 50% மதிப்பெண் பெற்றிருந்தாலே போதுமானது. மேலும், நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு 'கவுன்ஸிலிங்' மூலம் மாணவர்கள் விருப்பத் தேர்வுகளுக்கு தக்க அட்மிஷன் வழங்கபடுகின்றன.
மேலும் எல்லா விவரங்களும் www.cuet.samarth.ac.nic.in என்ற தளத்தில் இருக்கின்றன. எந்தெந்த பல்கலை கழகங்களில் என்னென்ன கோர்ஸூகள் நடத்துகிறார்கள் என்பதை அறிய அந்தந்த பல்கலைக் கழகத்தின் இணைய தளத்தில் சென்று பார்க்கலாம். பல்கலைக் கழகங்களின் பெயர்களும் இணைய தள முகவரியுடன் மேற் சொன்ன தளத்திலேயே விவரங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
CUCET 2023 நுழைவுத் தேர்வு:
தற்போது இந்த பல்கலை கழகங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கான அட்மிஷன் 09 பிப்ரவரி 2023 அன்று தொடங்கப்பட்டுள்ளது. www.cuet.samarth.ac.nic.in என்ற தளத்தில் உடனே விண்ணப்பியுங்கள். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 12 மார்ச் 2023.
மத்திய பல்கலைக் கழக நுழைவுத் தேர்வுகள் குறித்த கூடுதல் விவரங்களை அறிய விண்ணப்பிப்பது தொடர்பான தொழில்நுட்பப் பிரச்னைகளுக்கு 011- 40759000 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம். படிப்புகள், கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்கு அசாம் - 9476897510, 9401847943, ஆந்திரப்பிரதேசம் - 9640884806, 7598413970, குஜராத் - 079 23977446, அரியானா - 9212884894, ஜம்மு - 8082197957, 9796665505, 8178118948, ஜார்கண்ட் - 7070630510, கர்நாடகா - 9972191661, 9242355484, கேரளா - 0467 2309467, 0467 2309460, பஞ்சாப் - 9464269330, இராஜஸ்தான் - 7014588311, தெற்கு பீகார் - 0631 2229514, 2229518, தமிழ்நாடு - 04366 277337 எனும் மத்திய பல்கலைக்கழகங்களின் தொலைபேசி எண்களில் அலுவலக நாட்களில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். [email protected] எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டும் தகவல்களைப் பெறமுடியும்.
தமிழ்நாட்டில் எங்கு இருக்கிறது?
பொதுவாக இந்த பல்கலைகழகங்கள் பற்றி தமிழ்நாட்டில் நிறைய மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரியவே இல்லை. தமிழ்நாட்டில் இந்த பல்கலைக்கழகம் 'திருவாரூர்' அருகே இருக்கிறது. இந்த பல்கலைக்கழகம் ஒவ்வொரு வருடமும் 200 மாணவர்களுக்கு இண்டக்ரேட்டட் கோர்ஸூகளுக்கான அட்மிஷன் தருகிறது. Integrated MSc (Chemistry, Physics, Maths , Life Sciences) , Integrated MA EXONOMICS. இது போக மாஸ்டர்ஸ் டிகிரி கோர்ஸூகளும் எம்பிஏ கோர்ஸுகளும் பிஎச்டி கோர்ஸுகளும் தனித்தனியே நடத்தப்படுகின்றன. இங்கு படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் கேராளவையும், மீதிப்பேர் மற்ற மாநிலத்தவர்களையும் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர்.
கட்டணம் எவ்வளவு?
இந்த கல்லூரியில் படிக்க ஒரு செமஸ்டருக்கு பீஸ் என்று பார்த்தால் 3000 லிருந்து 8000 வரை தான் ஆகும். அதுபோக, ஆண்கள் பெண்களுக்கு என்று தனித்தனி ஹாஸ்டல் வசதியும் இருக்கிறது. ஹாஸ்டல் கட்டணங்களும் மிக மிக குறைவே.
இப்பல்கலைகழத்தில் பயின்றால், மேற்படிப்பிற்காக நீங்கள் வெளிநாடுகளில் உள்ள யூனிவர்ஸிடி சென்றால் எவ்வித நுழைவுத் தேர்வும் எழுத வேண்டிய அவசியம் இருக்காது.
பயனுள்ள குறிப்புகள்:
தமிழ்நாட்டிலேயே வெறும் 05 கல்லூரிகளில் மட்டுமே B.A. டிபென்ஸ் என்னும் படிப்பு உள்ளது. இதைப் படித்தால் Group of 1 examல் எளிதில் வெற்றியடைந்து Sub Registrar, RTO, DSP, நகராட்சி கமிஷனர் போன்ற நல்ல வேலைகளில் சேரலாம்.
சென்னையிலுள்ள CMI ல் B.Sc. Maths or Physics பயின்றால் உங்களுக்கு மாதம் ரூ. 5000/- உதவித் தொகையும், மேலும் கூடுதலாக வருடத்திற்கு ரூ. 20,000/- உங்களுக்குத் தேவையான பாட சம்மந்தமான பொருட்கள் வாங்குவதற்கும், ஆகமொத்தம் ஒரு வருடத்திற்கு ரூ. 65,000/- உதவித் தொகை கிடைக்கும்.
அக்ரி(விவசாயம்) பாடம் பயில விரும்புபவர்கள் திருச்சி அருகிலுள்ள கல்லூரிகளில் சேர முயற்சி செய்யலாம். ஏனெனில், இக்கல்லூரிகளில் டொனேஷன் கிடையாது.
பகிர்ந்து பயனடையுங்கள் !!!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…