Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மருத்துவக் கல்விப் படிப்புக்கான விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம்…!

Gowthami Subramani September 22, 2022 & 10:25 [IST]
மருத்துவக் கல்விப் படிப்புக்கான விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம்…!Representative Image.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

2022-23 ஆம் கல்வியாண்டுக்கான மருத்துக் கல்வி படிப்புகளான, எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. அதன் படி, MBBS, BDS உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர நினைக்கும் மாணவர்கள், இன்று முதல் வரும் அக்டோபர் 3 ஆம் நாள் வரை விண்ணப்பிக்கலாம்.

MBBS & BDS படிப்புகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது?

முதலில் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

பின், அந்த பக்கத்தில் MBBS BDS 2022-23 ஆம் அமர்வு ஆன்லைன் பயன்பாட்டுக்கான சேர்க்கை என்பதைக் க்ளிக் செய்யவும்.

பிறகு நீங்கள் தேர்வு செய்ததன் படி, “அதிகாரிகள் ஒதுக்கீடு” அல்லது “நிர்வாகம் / என்ஆர்ஐ ஒதுக்கீடு” என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதன் பின், அதில் குறிப்பிட்ட அறிவுரைகளின் படி ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.

முக்கிய தேதிகள்

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: செப்டம்பர் 21, 2022

ஆன்லைன் பதிவு தொடங்கப்பட்ட நாள்: செப்டம்பர் 22, 2022

பதிவு செய்வதற்கான கடைசி நாள்: அக்டோபர் 03, 2022


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்