Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

NEET Exam Latest News: நீட் தேர்வர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட்….! தேர்வு முகமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!

Gowthami Subramani July 10, 2022 & 12:00 [IST]
NEET Exam Latest News: நீட் தேர்வர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட்….! தேர்வு முகமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!Representative Image.

NEET Exam Latest News: தேசிய தேர்வு முகமை, நீட் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி, நீட் தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பதிவில் அட்மிட் கார்டு எப்படி பெறுவது குறித்த முழு விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன (NEET Exam 2022 Admit Card Release Date).

இந்தியாவில், மருத்துவ படிப்பிற்குத் தேர்ந்தெடுக்க வைக்கப்படும் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பத்தை கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் நாள் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த விண்ணப்பத்திற்கான கடைசி நாள் மே மாதம் 20 ஆம் நாள் வரை கொடுக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, நீட் தேர்வு விண்ணப்பத்தைச் சரி செய்வதற்கான கால அவகாசமும் கடந்த ஜூன் மாதம் 16 ஆம் நாள் வரை அறிவிக்கப்பட்டிருந்தது (NEET UG 2022 Exam Admit Card).

அதன் படி, விண்ணப்பப் பதிவுக்காலமும், அதனைச் சரி செய்வதற்கான காலமும் முடிந்த நேரத்தில், தேர்வுக்கான அட்மிக் கார்டை வெளியிட தேசிய தேர்வு முகமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இவ்வாறு வரும் ஜூலை மாதம் 17 ஆம் நாள் நீட் தேர்வு வைக்கப்பட உள்ள நிலையில், தற்போது ஜூலை மாதம் 11 ஆம் நாளான நாளை அன்று அட்மிட் கார்டை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் அட்மிட் கார்டை கீழ்க்கண்ட இணையதளத்திற்குச் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அட்மிட் கார்டு பெறவேண்டிய இணையதள முகவரி: http://neet.nta.nic.in

நீட் தேர்வு எழுதுவதற்கு பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் மேலே கொடுக்கப்பட்ட முகவரியைப் பயன்படுத்தி அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்