Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Post Office Recruitment 2022 Apply Online Last Date: 10 ஆம் வகுப்பு பாஸா..? தேர்வே இல்லாமல் அஞ்சல் துறையில் அருமையான வேலை..! தேர்வு கிடையாது…..

Gowthami Subramani May 19, 2022 & 13:40 [IST]
Post Office Recruitment 2022 Apply Online Last Date: 10 ஆம் வகுப்பு பாஸா..? தேர்வே இல்லாமல் அஞ்சல் துறையில் அருமையான வேலை..! தேர்வு கிடையாது…..Representative Image.

Post Office Recruitment 2022 Apply Online Last Date: இந்திய அஞ்சல் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. அஞ்சல் துறையில் நாடு முழுவதும் கிராம் டெக் சேவக்ஸ் என்ற கிராம தபால் ஊழியர் பதவிக்கும், உதவி கிராம தபால் ஊழியர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மொத்த காலிப்பணியிடங்கள் 38,926 ஆகும். குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள காலிப் பணியிடங்கள் 4,310 ஆகும் (Post Office Recruitment 2022 Apply Online Last Date).

இதற்கான பணிக் காலியிடங்கள், கல்வித் தகுதி, ஊதியத் தொகை மற்றும் இன்னும் சில விவரங்கள் இந்தப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

அஞ்சல் துறை

பணியின் பெயர்

கிராம தபால் ஊழியர் மற்றும் உதவி கிராம தபால் ஊழியர்

காலிப்பணியிடங்கள்

4,310

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூன் 5, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

கிராம தபால் சேவை

பணி விவரம்

கிராம தபால் ஊழியர் அல்லது Gramin Dak Sevaks பதவிகளுக்குக் கீழ்க்காணும் அளவில் காலிப்பணியிடங்கள் உள்ளன (Indian Post Office Recruitment).

துறை

காலிப்பணியிடங்கள்

கிராம தபால் ஊழியர் மற்றும் உதவி கிராம தபால் ஊழியர்

4,310

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

கிராம தபால் ஊழியர் (BPM)

ரூ. 12,000

உதவி கிராம தபால் ஊழியர் (ABPM / Dak Sevak)

ரூ. 10,000

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் (BPM Post Office Recruitment).

இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

இதில் பங்கு பெறும் விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

கிராம தபால் ஊழியர் மற்றும் உதவி கிராம தபால் ஊழியர்

குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 40 வயதைக் கொண்டிருக்கலாம்.

 

தேர்வு செய்யப்படும் முறை

மேற்கூறிய பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள், அவர்கள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயேத் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்வு எதுவும் கிடையாது.

விண்ணப்பக் கட்டணம்

மேற்கூறிய பதவிகளுக்கு விண்ணப்பிக்க நினைக்கும் நபர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

பிரிவு

விண்ணப்பக் கட்டணம்

பொதுப்பிரிவினர்

ரூ. 100

SC/ST, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் திருநங்கைகள்

விண்ணப்பக் கட்டணம் கிடையாது

 

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

  • முதலில் விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • பின், அதில் உள்ள அஞ்சல் துறைக்கான அறிவிப்பைப் பார்த்து, அதில் விண்ணப்பிக்கவும்.

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

மேற்கூறிய முறைகளைப் பயன்படுத்தி, இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்