Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Prime Minister Sree Schools: மாணவர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்தும் பிஎம் ஸ்ரீ பள்ளிகள்….! இதன் முக்கிய நோக்கமே வேற..!

Gowthami Subramani June 03, 2022 & 13:05 [IST]
Prime Minister Sree Schools: மாணவர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்தும் பிஎம் ஸ்ரீ பள்ளிகள்….! இதன் முக்கிய நோக்கமே வேற..!Representative Image.

Prime Minister Sree Schools: பிரதமர் ஸ்ரீ பள்ளிகள் அமைக்கப்படும் என கல்வி மந்திரிகள் மாநாட்டில் மத்திய அரசு அறிவித்துள்ளது.

கல்வி மந்திரிகளின் மாநாடு

குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திநகரில், கல்வி மந்திரிகளின் மாநாடு கடந்த ஜூன் மாதம் 1 ஆம் நாள் தொடங்கியது. இது இரண்டு நாள்கள் நடைபெறக் கூடிய மாநாடு ஆகும். இதில், மத்திய கல்வி மந்திரியாக விளங்கும் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார்.

அதன் படி, ஜூன் 2 ஆம் தேதி மாநாட்டில் மத்திய கல்வி மந்திரி பிரதமர் ஸ்ரீ பள்ளிகள் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார் (National Education Conference).

அந்த மாநாட்டில் அவர் பேசியதாவது,

தேசிய கல்விக் கொள்கையின் படி, மழலையர் வகுப்பு முதல் மேல்நிலைக் கல்வி வரை இடம் பெற்று படித்துக் கொண்டு வருகின்றனர். மேலும், இதனுடன், ஆசிரியர்களுக்கான பயிற்சி, வயது வந்தோருக்கான கல்வி, பள்ளிக் கல்வியுடன் திறனை மேலடையச் செய்வது, மர்றும் தாய்மொழி வழிக் கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது போன்ற பல்வேறு செயல்முறைகள் உள்ளன.

இவை அனைத்தையும், 21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ப குடிமக்களை நாம் தயார்படுத்தி கொள்வதும் அவசியமாகிறது (Benefits of PM Sree Schools).

நமது நாட்டை அறிவு சார்ந்த பொருளாதாரமாக மாற்றுவதில், பள்ளிக் கல்வி தான் அடித்தளமாக விளங்கும். எனவே, மக்களின் நலனுக்காகவும், மாணவர்களின் நலனுக்காகவும், “பிரதமர் ஸ்ரீ பள்ளிகள்” என்ற பெயரில் பள்ளிகளை அமைக்க மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

நாட்டின் நலனுக்காக

இந்தப் பள்ளிகளில், மாணவர்களின் எதிர்காலத்தை நல்முறையில் கொண்டு வரவும், எதிர்காலத்திற்கு ஏற்றபடி மாணவர்களை தயார்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டதாகும். மேலும், இந்தப் பள்ளிகள் அனைத்து நவீன வசதிகளையும் கொண்டிருக்கும் எனவும், தேசிய கல்வி கொள்கைக்கான ஆய்வுக் கூடமாகவும் விளங்கும் என்று கூறினார் (PM Shree Schools Importance).

நமது நாட்டின் வருங்கால புதிய தலைமுறைகளுக்கு 21 ஆம் நூற்றாண்டிற்கான அறிவு மற்றும் திறன்களைக் கிடைக்கச் செய்ய வேண்டும். இதற்காக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்களிடம் உள்ள யோசனைகளைக் கூற வேண்டும். நாட்டை மேம்படுத்துவதற்காக அமைக்கப்படும் இந்த “பிரதமர் ஸ்ரீ பள்ளிகள்” எதிர்காலத்திற்கான மாதிரி பள்ளியாக இருக்கும்.

மேலும், பல்வேறு மாநிலங்களில் உள்ள கல்வியில் பின்பற்றக்கூடிய நல்ல நடைமுறைகளும் மாணவர்களை சர்வதேச குடிமக்களாக மாற்ற உதவும். அது மட்டுமல்லாமல், கர்நாடகா, ஒரிசா மற்றும் இன்னும் சில மாநிலங்களில் உள்ள கல்வி மாதிரிகள் மாணவர்களுக்குச் சிறந்த நலனை அளிக்கும் என்று கூறியுள்ளார்.

இந்தப் பள்ளிகள் தமிழகத்திலும் இயக்கப்படுமா என்ற கேள்வி தற்போது அனைவரின் மத்தியிலும் எழுகிறது (PM Sree Schools in Tamilnadu).

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்