Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம்.. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

Gowthami Subramani October 27, 2022 & 13:05 [IST]
மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம்.. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!Representative Image.

புதுமைப் பெண் திட்டத்தின் மூலம், மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மாணவிகளின் நலன் கருதி, அவர்களின் மேற்படிப்பு, தொழில்நுட்ப படிப்புக்கு உதவும் வகையில், மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன் படி, இந்த திட்டம் குறித்து, தேனி மாவட்ட ஆட்சியரான முரளிதரன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து, தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் கூறியதாவது, அரசுப் பள்ளிகளில் 6 முதl 12 ஆம் வகுப்பு படித்து, மேற்படிப்பு மற்றும் தொழில்நுட்ப படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு, மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் கடந்த செப்டம்பர் 5 ஆம் நாள் தொடங்கி வைக்கப்பட்டது.

இதில், கல்லூரிகளில் 2,3 மற்றும் 4 ஆம் ஆண்டு பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் இந்த திட்டத்தில் இணைந்து உதவித் தொகையைப் பெற்று பயனடைந்துள்ளனர். தற்போது, இந்த திட்டத்தில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

அதன் படி, இதில் கொடுக்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் சென்று, அதில் மாணவிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். இதில், குறிப்பிட்டுள்ளதன் படி, அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இந்த திட்டத்தில் மூலம் பயன்பெற முடியும். மேலும், மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் வாயிலாக மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். நேரடியாக விண்ணப்பிக்க அனுமதி இல்லை.

இதற்கான சிறப்பு முகாம்கள், வரும் 11 ஆம் தேதி வரை நடைபெறும். இதில், மாணவிகள் பங்குபெற ஆதார் கார்டு மற்றும் மாற்றுச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல், தற்போது 2,3 மற்றும் 4 ஆண்டு பயிலும் மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறி இருப்பின், தற்போது அவர்களும் விண்ணப்பிக்கலாம்.

அதே போல, விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் இருப்பின், அதனை திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை சமூக நல இயக்குநரக அலுவலகத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அதன் படி, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, கீழே கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்களின் வாயிலாக சமூக நல இயக்குனரக அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

91500 56809, 91500 56805, 91500 56801, 91500 56810

இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி, மாணவிகள் பயன்பெறலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்