Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

வெளுத்து வாங்கும் கோடை வெப்பம்.. ஏப்ரல் 16 வரை பள்ளிகள் மூடல்..

Nandhinipriya Ganeshan Updated:
வெளுத்து வாங்கும் கோடை வெப்பம்.. ஏப்ரல் 16 வரை பள்ளிகள் மூடல்.. Representative Image.

அதிக வெப்பச்சலனம் காரணமாக 10ஆம் வகுப்பு வரையிலான அனைத்துப் பள்ளிகளையும், அங்கன்வாடி மையங்களையும் ஏப்ரல் 16ஆம் தேதி வரை மூட ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வர் நவீன் பட்நாயக் ஜப்பானில் இருந்து திரும்பியவுடன் அவரது தலைமையில் கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இந்த முடிவை எடுத்துள்ளார்.

மேலும், பஞ்சாயத்து ராஜ் மற்றும் குடிநீர்த் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, எரிசக்தித் துறை ஆகியவை வெப்ப அலைச் சூழலைச் சமாளிப்பதற்கான ஆயத்தத்தைத் தொடங்குமாறும் முதலமைச்சர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் சீரான குடிநீர் விநியோகம் வழங்கப்படுவதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அவர், அதிக வெப்ப அலைகள் எழுகிற போது அத்யாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய எரிசக்தி துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்