Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாணவர்கள் தொழில்முனைவோர்களாக மாற வேண்டும்..! - மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் அறிவுரை!

Baskaran Updated:
மாணவர்கள் தொழில்முனைவோர்களாக மாற வேண்டும்..! - மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் அறிவுரை!Representative Image.

வேலூர்: மாணவர்கள் அரசு வேலை மட்டும் நம்பாமல் ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டங்களிலும் தொழில்களை துவங்கி தொழில் முனைவோர்களாக வேண்டுமென மத்திய இணை அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள  திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் 17ஆவது பட்டமளிப்பு விழா, தமிழக ஆளுநரும், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என் ரவி தலைமையில் நடைபெற்றது. இதில் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர், வி.கே சிங், மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் உள்பட பலர் பங்கேற்றனர். இவ்விழாவில், 417 முனைவர் பட்டங்கள் பெற்றவர்கள்  உள்பட 564 மாணவ மாணவியர்களுக்கு நோடியாக பட்டங்களை ஆளுநர் ஆர்.என் ரவி வழங்கினார்.

மொத்தமாக 1, 13,275 மாணவ மாணவியர்கள் பட்டங்களை பெற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் வி கே சிங், பட்டங்களை பெற்றுள்ள மாணவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். கல்லூரி படிப்பை முடித்துள்ள நீங்கள் உலகில் பல சவால்களை எதிர்த்து போராட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். நம் நாட்டின் வளர்ச்சியின் பாதையில் மாணவர்களின் பங்கு அதிக அளவில் இருக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் இலக்கினை அடைய கடுமையான உழைப்பை பயன்படுத்த வேண்டும். தொழில் முனைவர்களாக மாறினால் தங்களின் வாழ்க்கை பிரகாசிக்கும்.

தொழில் முனைவோர்களாக போடும் இளைஞர்களுக்கு மத்திய அரசு பல்வேறு வகைகளில் உதவிகளை அளித்து வருகிறது அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மத்திய அரசு பெண்களின் கல்வி முன்னேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களை நம்பியுள்ளது. இந்தியா மற்ற நாடுகளை விட  சுய தொழில் துவங்குவதில் முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் 61 வகையான தொழில்களுக்கு 132 நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. இதனால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது. கொரோனா காலத்திற்குப் பின்பு இந்தியாவின் பொருளாதாரம் 6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. எனவே மாணவர்கள் தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். படித்த இளைஞர்கள் அனைவரும் அரசு வேலை நம்பி இருக்க வேண்டாம். ஒட்டு மொத்தமாக நான்கு சதவீதம் அளவிற்கு அரசு துறையில் வேலை வாய்ப்புகள் உள்ளது.

மீதமுள்ள 96 சதவீதம் தனியார் வேலை வாய்ப்புகள் உள்ளது. 2015 ஆம் ஆண்டில் இந்தியாவில் 428 சுயதொழில் நிறுவனங்களில் இருந்தன. அதன் பிறகு மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையால், தற்பொழுது 80 ஆயிரம் சுய தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளது. எனவே இளைஞர்கள் சுயதொழில் துவங்க முன்வர வேண்டும் .இதற்கு மத்திய அரசு தேவையான உதவிகளை அளித்து வருகிறது. ஸ்டார்ட் அப் இந்தியா ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டங்களிலும் தொழில்களை துவங்கி தொழில் முனைவர்களாக மாறலாம் அதற்கான நிதியினையும் மத்திய அரசு வழங்கி வருகிறது' இவ்வாறு, அவர் தெரிவித்தார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்