Tue ,Mar 19, 2024

சென்செக்ஸ் 72,156.06
-592.36sensex(-0.81%)
நிஃப்டி21,856.15
-199.55sensex(-0.90%)
USD
81.57
Exclusive

School Shutdown ஸ்கூல் லீவுதான்! ஆனா இவங்கள்லாம் கண்டிப்பா போகணும்

Udhayakumar January 11, 2022 & 09:05 [IST]
School Shutdown ஸ்கூல் லீவுதான்! ஆனா இவங்கள்லாம் கண்டிப்பா போகணும்Representative Image.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் மாணவர்கள் சற்று நிம்மதியாக உள்ளனர். 

கொரோனா பரவலின் 3வது அலை வேகமெடுத்துள்ளது. முதல் இரு அலைகளைப் போலவே இந்த அலையும் வீரியமாக மாறும் தன்மை கொண்டதாக பார்க்கப்படுகிறது. எனினும் இந்தமுறை உயிர் பலி அந்த அளவுக்கு இல்லை என்பது சற்று ஆறுதல். ஆனாலும் ஓமிக்ரான், டெல்ட்ராக்ரான் என வைரஸ் உருமாறிக்கொண்டே இருப்பதால் பள்ளி செல்லும் குழந்தைகளின் பெற்றோர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். தங்கள் பிள்ளைகளை கல்விக்கூடங்களுக்கு அனுப்ப அச்சப்படுகின்றனர்.

இதைத்தொடர்ந்து, தமிழக அரசு, தமிழகத்தில் வரும் ஜனவரி 31 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. அன்றைய தினம் வரைக்கும் பள்ளிகளில் நேரடி வகுப்புகளோ, சிறப்பு வகுப்புகள் எனக் கூறி மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைப்பதோ கூடாது எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில்1 முதல் 9ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டாலும், அவர்களின் எதிர்காலம் கருதி, பாடங்களை ஆன்லைன் மூலம் நடத்தலாம் எனவும் கூறியுள்ளது அரசு.  மேலும் கல்வித் தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடைபெறும் எனவும் அதன்மூலம் வீட்டிலிருந்தே மாணவர்கள் பலன் பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 1 முதல் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜனவரி 31 வரை பள்ளிகள் விடுமுறை என்றாலும் இந்த உத்தரவு, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொருந்தாது.  ஏனென்றால் அவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்ள இருப்பதால், சுழற்சி முறையில், வழக்கம் போல் அவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்