Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tamil Paper Exemption: இனி போட்டித்தேர்வுகளில் கட்டாயத் தமிழ்த்தேர்வு இல்லை…? தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு….!

Gowthami Subramani May 27, 2022 & 12:10 [IST]
Tamil Paper Exemption: இனி போட்டித்தேர்வுகளில் கட்டாயத் தமிழ்த்தேர்வு இல்லை…? தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு….!Representative Image.

Tamil Paper Exemption: போட்டித்தேர்வு எழுதும் நபர்களுக்கு, தமிழக அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு, அதன் கீழ் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக, தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்களுக்கு பனி வழங்குகிறது. அதன் படி, குரூப் 1, குரூப் 2/ குரூப் 2A என இரண்டு நிலைகளைக் கொண்ட தேர்வுகளில் கட்டாய தமிழ்மொழித் தாள் திட்டத்தை அறிவித்தது. அதன் படி, முதன்மை எழுத்துத் தேர்வாக நடத்தப்படும் இந்தத் தேர்வில், குறைந்தபட்சம் 40 மதிப்பெண்களைப் பெற வேண்டும் என தமிழக அரசு தெரிவித்தது.

இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் தகுதித் தேர்வு எழுதக் கூடிய மாற்றுத் திறனாளிகளுக்கு இந்தத் தேர்வில் இருந்து விலக்கு அளித்துள்ளது. அதன் படி, TNPSC Exams, TRB Exams, காவலர் தேர்வு போன்ற அனைத்து வகையான போட்டித் தேர்வுகளிலும் கலந்து கொள்ளும் மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த கட்டாய தமிழ்மொழித் தேர்விலிருந்து விலக்கு அளித்துள்ளது. மேலும், இதில் 40%-ற்கும் குறைவான குறைபாடுகளைக் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கும், இந்த விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும், இந்த அறிவிப்பின் படி, விலக்கு பெற விரும்புவோர், உரிய மாற்றுத் திறனாளிகளின் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது. அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்