Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டிஎன்-டிஆர்பி தேர்வர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு… தமிழக அரசின் அரசாணை வெளியீடு

Gowthami Subramani October 20, 2022 & 16:10 [IST]
டிஎன்-டிஆர்பி தேர்வர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு… தமிழக அரசின் அரசாணை வெளியீடுRepresentative Image.

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான உச்ச வயது வரம்பை நீட்டித்து தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஆசிரியத் தகுதித் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இவ்வாறு தேர்வர்கள் எழுதப்படும் தேர்வை TET என கூறுவர். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஆசிரியராக தகுதி உடையவர்கள் என சான்றிதழ் வழங்கப்படும். அதன் பின்னரே, வேலை நியமனத்திற்கென தனித் தேர்வு எழுத வேண்டும்.

இந்த தேர்வுகளை எழுத, தொடக்கத்தில் வயது வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இதனால், 50 வயதை தாண்டியவர்கள் கூட இந்த தேர்வை எழுதி வந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறிய கடந்த 2020 ஆம் ஆண்டு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் குறிப்பிட்டுள்ள படி, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 40 ஆண்டுகளாகவும், இதர பிரிவினருக்கு 45 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

தற்போது இதற்கான வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஆசிரியர் தேர்வு வாரிய நியமனங்களுக்கான உச்சவயது வரம்பு, பொதுப்பிரிவினருக்கு 40-ல் இருந்து 45 ஆகவும், இதர பிரிவினருக்கு 45-லிருந்து 50 ஆகவும் உயர்த்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்