Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. உங்க மதிப்பெண்ணை எப்படி சரிபார்ப்பது? | TN SSLC 10th Results 2023 How to Check

Nandhinipriya Ganeshan Updated:
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. உங்க மதிப்பெண்ணை எப்படி சரிபார்ப்பது? | TN SSLC 10th Results 2023 How to CheckRepresentative Image.

தமிழ்நாட்டில் 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 முதல் 20 வரை நடைபெற்றது இதில் சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்தநிலையில், மே 19 இன்று காலை 10 மணிக்கு 10ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் முடிவுகளை தமிழ்நாடு அரசுத் தேர்வு இயக்குநரகம்  வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு, 91.39% தேர்ச்சி சதவீதம் மற்றும் 8,35,614 மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தமிழ்நாடு 10வது பொதுத்தேர்வு முடிவுகள் 2023 அதிகாரப்பூர்வ இணையதள போர்ட்டல் tnresults.nic.in இல் ஆன்லைன் பயன்முறையில் பதிவேற்றப்படும். எனவே, மாணவர்கள் தேவையான விபரங்களை உள்ளிட்டு தங்களது மதிப்பெண்களை  சரிபார்த்து கொள்ளலாம்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. உங்க மதிப்பெண்ணை எப்படி சரிபார்ப்பது? | TN SSLC 10th Results 2023 How to CheckRepresentative Image

உங்க மதிப்பெண்ணை எப்படி சரிபார்ப்பது?

மாணவர்கள் முதலில் தமிழ்நாடு வாரியத்தின் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.

இப்போது, முகப்புப் பக்கத்தில் மாணவர்கள் தமிழ்நாடு 10ம் வகுப்பு முடிவுக்கான இணைப்பைப் பார்க்க முடியும்.

சில நொடிகளுக்குப் பிறகு, மாணவர்களின் திரையில் ஒரு புதிய டேப் திறக்கப்படும்.

அதில் மாணவர்கள் தங்களுடைய ரோல் எண் மற்றும் பிறந்த தேதியை பிழையில்லாமல் உள்ளிட வேண்டும்.

சமர்ப்பிக்கும் (Get Marks) பட்டனை கிளிக் செய்த பிறகு சில நொடிகள் காத்திருக்க வேண்டும்.

பின்னர், மதிப்பெண் பட்டியல் திரையில் தோன்றும். மேலும் மாணவர்கள் அதை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

அதிகாரப்பூர்வ இணையதளம்:

tnresults.nic.in 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்