Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

TNPSC Exam Questions 2022: டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் – பாகம் 5

Gowthami Subramani [IST]
TNPSC Exam Questions 2022: டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் – பாகம் 5Representative Image.

TNPSC Exam Questions 2022: டிஎன்பிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகும் நபர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. தேர்வில் கலந்து கொள்ளும் நபர்கள், கீழ்க்காணும் வினாக்கள் மற்றும் விடைகளைப் பற்றிக் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும், Current Affairs பிரிவில் கேட்கப்படும் கேள்விகளும் நமது searcharoundweb தளத்தில் இடம் பெறுகின்றன.

டிஎன்பிஎஸ்சி தேர்வு வினாக்கள் மற்றும் விடைகள்

பொதுத் தமிழ் மற்றும் பொது அறிவு

1. அகத்திணையும், புறத்திணையும் சேர்த்துக் கூறும் எட்டுத்தொகை நூல் எது?

அ. நற்றிணை                                  ஆ. ஐங்குறுநூறு

இ. பரிபாடல்                                    ஈ. பதிற்றுப்பத்து

விடை: இ. பரிபாடல்

2. தவறான இணையத் தேர்வு செய்க.

அ. குறிஞ்சி – கபிலர்                     ஆ. முல்லை – ஓதலாந்தையார்

இ. மருதம் – ஓரம்போகியார்      ஈ. நெய்தல் – அம்மூவனார்

விடை: ஆ. முல்லை – ஓதலாந்தையார்

3. பின்வருவனவற்றுள் தவறானதைத் தேர்வு செய்க:

அ. கம்பர் தேரழுந்தூரில் பிறந்தவர்   

ஆ. கம்பரை ஆதரித்த வள்ளல் சீதக்காதி

இ. சரசுவதி அந்தாதியை இயற்றியவர் கம்பர்

ஈ. கம்பரது காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு

விடை: ஆ. கம்பரை ஆதரித்த வள்ளல் சீதக்காதி

4. எட்டுத்தொகை நூல்களுள் முதலாவது வைத்து எண்ணப்படும் நூல்

அ. அகநானூறு                               ஆ. ஐங்குறுநூறு

இ. நற்றிணை                                  ஈ. பரிபாடல்

விடை: இ. நற்றிணை       

5. குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்

றுண்டாகச் செய்வான் வினை

அ. படைகவசம்                              ஆ. படை கருவிகள்

இ. கைப்பொருள்                            ஈ. வலிமையான ஆயுதம்

விடை: இ. கைப்பொருள்

6. ‘அழக்கொண்ட எல்லாம் அழப்போம், இழப்பினும்’ – இந்த அடியில் அமைந்துள்ள எதுகையைத் தேர்க.

அ. மேற்கதுவாய் எதுகை            ஆ. கீழ்க்கதுவாய் எதுகை

இ. கூழை எதுகை                           ஈ. பொழிப்பு எதுகை

விடை: இ. கூழை எதுகை

7. செல்வச் செவிலி – இலக்கணக் குறிப்பு

அ. உவமை                                      ஆ. உருவகம்

இ. எண்ணும்மை                            ஈ. அடுக்குத் தொடர்

விடை: ஆ. உருவகம்

8. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு – எதுகை வகையைக் கண்டுபிடிக்கவும்.

அ. கூழை எதுகை                          ஆ. பொழிப்பு எதுகை

இ. கீழ்க்கதுவாய் எதுகை            ஈ. மேற்கதுவாய் எதுகை

விடை: அ. கூழை எதுகை

9. தன்வினை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்க

அ. அப்பூதி அடிகள் நான்மறை கற்கவில்லை

ஆ. அப்பூதி அடிகள் நான்மறை கற்றாரா?

இ. அப்பூதி அடிகள் நான்மறை கற்பித்தார்

ஈ. அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்.

விடை: ஈ. அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்.

10. சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம்

அ. மிகும்                                           ஆ. சில இடங்களில் வரும்

இ. மிகாது                                         ஈ.  சில இடங்களில் வராது

விடை: அ. மிகும்

11. பின்வரும் தொடரிலுள்ள நிகழ்கால வினைமுற்றைத் தேர்வு செய்க.?

அ. பழுத்த பழம்                             ஆ. பழுக்கின்றது

இ. பழுக்கும் பழம்                         ஈ. பழங்கள் பழுத்தன

விடை: ஆ. பழுக்கின்றது

12. தாழ்பூந்துறை – என்ற சொல்லுக்குரிய இலக்கண குறிப்பு தருக

அ. ஏவல் வினைமுற்று                              ஆ. பண்புத்தொகை

இ. வினைத்தொகை                                  ஈ. உரிச்சொல் தொடர்

விடை: இ. வினைத்தொகை       

13. படி என்ற வேர்ச்சொல்லில் இருந்து வினை எச்சத்தை உருவாக்குக.

அ. படித்து                                                     ஆ. படித்த

இ. படித்தல்                                                  ஈ. பாடுதல்

விடை: அ. படித்து

14. “இயல்பானது” வேர்ச்சொல்லை எழுதுக.

அ. இயல்                                                       ஆ. இய

இ. இயல்பு                                                    ஈ. இயல்பு

விடை: ஆ. நின்று

15. “கல்” என்னும் வேர்ச்சொல்லின் பதம் அறிக.

அ. கற்றல்                                                     ஆ. கற்பனை

இ. கல்லை                                                    ஈ. கண்டான்

விடை: அ. கற்றல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

TNPSC Group 4 Questions | TNPSC Questions with Answers | TNPSC Questions with Answers in Tamil | TNPSC Exam Questions 2022 | TNPSC exams 2022 | TNPSC Questions | TNPSC Group 2 & 2a Questions & Answers | TNPSC Practice Test | TNPSC Group 4 Practice Test | TNPSC Daily Current Affairs | Daily Current Affairs for TNPSC | Daily Current Affairs TNPSC | TNPSC Daily Current Affairs in Tamil 2022 | TNPSC Daily Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | TNPSC Today Current Affairs in Tamil | TNPSC Current Affairs in Tamil | exam Daily Current Affairs Tamil | TNPSC 2022 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்