Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

TNPSC Exam Questions 2022: டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் – பாகம் 7

Gowthami Subramani July 10, 2022 & 15:20 [IST]
TNPSC Exam Questions 2022: டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் – பாகம் 7Representative Image.

TNPSC Exam Questions 2022: டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் மற்றும் யுபிஎஸ்சி உள்ளிட்ட தேர்வுகளுக்குத் தயாராகும் நபர்கள், இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் மற்றும் விடைகளை அறிந்திருக்க வேண்டும். மேலும், தினசரி நடப்பு நிகழ்வுகளையும் தெரிந்து கொள்ள நமது searcharoundweb என்ற இணையதளத்தில் இணைந்திருங்கள்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு வினாக்கள் மற்றும் விடைகள்

பொதுத் தமிழ் மற்றும் பொது அறிவு

1. “கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல்” எனக் கூறியவர் யார்?

அ. நாஞ்சில் நாடன்                       ஆ. வண்ணதாசன்

இ. கந்தர்வன்                                  ஈ. புதுமைப்பித்தன்

விடை: ஈ. புதுமைப்பித்தன்

2. பண்ணொடு கலந்தும் தாளத்தோடு கூடியும் பாடும் கலை எது?

அ. இசைக்கலை                             ஆ. ஓவியக்கலை

இ. நாட்டியக்கலை                         ஈ. நாடகக்கலை

விடை: அ. இசைக்கலை

3. தொல்காப்பியத்தில் நாடகப் பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்த இயல்

அ. களவியல்                                    ஆ. பொருளியல்

இ. மெய்ப்பாட்டியல்                      ஈ. மரபியல்

விடை: இ. மெய்ப்பாட்டியல்

4. “இரட்டைக்கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை…” என்று பாடியவர் யார்?

அ. அப்துல் ரகுமான்                     ஆ. மு.மேத்தா

இ. தாரா பாரதி                              ஈ. சுரதா                   

விடை: ஈ. சுரதா

5. நாமக்கல் கவிஞருக்கு “பத்மபூஷண்” விருது வழங்கிச் சிறப்பித்தது யார்?

அ. மாநில அரசு                             ஆ. நடுவணரசு

இ. ஆங்கில அரசு                           ஈ. பிரெஞ்சு அரசு

விடை: ஆ. நடுவணரசு

6. ‘சட்டம் ஒரு இருட்டறை – அதில் வழக்கறிஞர்களின் வாதம் ஒரு விளக்கு’ – எனக் கூறியவர்

அ. அம்பேத்கர்                                ஆ. மு.வரதராசனார்

இ.காந்தி                                           ஈ. அண்ணா

விடை: ஈ. அண்ணா

7. பாரதிதாசனார் இயற்றிய நாடக நூல் எது?

அ. சுவரும் சுண்ணாம்பும்                       ஆ. பாண்டியன் பரிசு

இ. கண்ணகி புரட்சிக் காப்பியம்         ஈ. பிசிராந்தையார்

விடை: ஈ. பிசிராந்தையார்

8. மனோன்மணியத்தை இயற்றியவர் யார்?

அ. சுந்தர முனிவர்                        ஆ. சுந்தரர்

இ. சுந்தரம் பிள்ளை                      ஈ. சுந்தரமூர்த்தி

விடை: இ. சுந்தரம் பிள்ளை

9. ‘லிட்டன் பிரபு’ எழுதிய ‘இரகசிய வழி’ என்ற நூலைத் தழுவி வெளிவந்த நூல்

அ. முறுவல்                                      ஆ. குணநூல்

இ. அகத்தியம்                                 ஈ. மனோன்மணீயம்

விடை: ஈ. மனோன்மணீயம்

10. சித்தர்களின் ஆதி சித்தராக கருதப்படுபவர் யார்?

அ. போகர்                                        ஆ. கோரக்கர்

இ. திருமூலர்                                   ஈ. பாம்பாட்டிச்சித்தர்

விடை: ஈ. பாம்பாட்டிச்சித்தர்

11. பெரியபுராணத்திற்கு சேக்கிழாரிட்டப் பெயர்

அ. திருத்தொண்டர் புராணம்    ஆ. தொண்டச்சீர் புராணம்

இ. சிவதொண்டர் புராணம்        ஈ. சிவனடியார் புராணம்

விடை: அ. திருத்தொண்டர் புராணம்

12. செங்கீரைப் பருவம் – பிள்ளைத்தமிழில் எந்தப் பருவமாக விளங்குகிறது?

அ. ஐந்தாம் பருவம்                       ஆ. இரண்டாம் பருவம்

இ. மூன்றாம் பருவம்                    ஈ. முதற் பருவம்

விடை: ஆ. இரண்டாம் பருவம்

13. குண்டலகேசியின் கதைத் தலைவி – குண்டலகேசி, அவளின் வேறு பெயர்

அ. கையேயி                                    ஆ. சுமத்திரை

இ. பத்தரை                                      ஈ. மாதவி

விடை: இ. பத்தரை

14. பொருளறிந்து பொருத்துக:

a. தடக்கர்                 1. கரடி

b. எண்கு                   2. காட்சி

c. வள்உகிர்              3. பெரிய யானை

d. தெரிசனம்           4. கூர்மையான நகம்

            a          b          c          d

அ.       1          2          3          4

ஆ.      1          4          3          2

இ.       3          1          4          2

ஈ.        1          3          2          4

விடை: இ.     3          1          4          2

15. சுந்தரம்பிள்ளையைப் போற்று முகமாகத் தமிழக அரசு நிறுவியது யாது?

அ. பல்கலைக்கழகம்                    ஆ. அரசவைக் கவிஞர் பணி

இ. அறக்கட்டளை                          ஈ. பேராசிரியர் பணி

விடை: அ. பல்கலைக்கழகம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

TNPSC Group 4 Questions | TNPSC Questions with Answers | TNPSC Questions with Answers in Tamil | TNPSC Exam Questions 2022 | TNPSC exams 2022 | TNPSC Questions | TNPSC Group 2 & 2a Questions & Answers | TNPSC Practice Test | TNPSC Group 4 Practice Test | TNPSC Daily Current Affairs | Daily Current Affairs for TNPSC | Daily Current Affairs TNPSC | TNPSC Daily Current Affairs in Tamil 2022 | TNPSC Daily Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | TNPSC Today Current Affairs in Tamil | TNPSC Current Affairs in Tamil | exam Daily Current Affairs Tamil | TNPSC 2022 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்