Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் 15 & 16 – இன்றைய தினத்தின் நடப்பு நிகழ்வுகள்....!

Gowthami Subramani August 23, 2022 & 12:15 [IST]
Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் 15 & 16 – இன்றைய தினத்தின் நடப்பு நிகழ்வுகள்....!Representative Image.

Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் மாதம் 15 மற்றும் 16 ஆம் நாளிற்கான நடப்பு நிகழ்வுகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம். மேலும், டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்களை விடைகளுடன் தெரிந்து கொள்ள நமது searcharoundweb பக்கத்தில் இணைந்திருங்கள்.

உதராசக்தி

உதராசக்தி என்ற இரு தரப்பு விமானப் பயிற்சியை நடத்திய நாடு?

விடை: மலேசியா

மலேசியா, “உதராசக்தி” என்ற இரு தரப்பு விமானப் பயிற்சியை நடத்துகிறது. இந்தப் பயிற்சியில் நம் இந்திய வான் படையின் ஒரு குழு பங்கேற்கிறது. இப்பயிற்சியில், இரு வான்படைகளுக்கு இடையே 4 நாள்கள் நடக்கக்கூடிய பல்வேறு வான்வழிப் போர் பயிற்சிகள் அடங்கும். சுகோய் 30 போர் விமானங்களைக் கொண்டு நடத்தப்படும். இந்த இருதரப்பு வான்படை பயிற்சியானது முதன் முதலாக கடந்த 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.

பணவீக்க சதவீதம்

கடந்த 2022 ஜூலை மாதத்தில் பதிவான நுகர்வோர் விலைக்குறியீடு அடிப்படையிலான பணவீக்க சதவீதம்?

விடை: 6.71%

தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், நுகர்வோர் விலைக்குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் கடந்த ஜூலை மாதத்தில் 7.01% -லிருந்து, 6.71% ஆக குறைந்துள்ளது. இருந்தபோதிலும், தொழில்துறை உற்பத்திக் குறியீடு மே மாதத்தில் காணப்பட்ட 19.6% உடன் ஒப்பிடும் போது, ஜூன் மாதத்தில் 12.3% ஆக வளர்ந்துள்ளது.

அகத்தியர் மலை யானைகள் காப்பகம்

சமீபத்தில் கூறப்பட்ட அகத்தியர் மலை யானைகள் காப்பகம் எந்த மாநிலத்தில் உள்ளது?

விடை: தமிழ்நாடு

அகத்தியர் மலையில் உள்ள 1,197,48 சதுர கிலோமீட்டர் நிலத்தை, யானைகள் காப்பகமாக அறிவிக்கும் தமிழ்நாட்டு வனத்துறையின் பரிந்துரையை நடுவணரசு ஏற்றுக் கொண்டுள்ளது என நடுவண் சுற்றுச் சூழலமைச்சர் பூபேந்தர் யாதவ் அறிவித்துள்ளார். மேலும், நீலகிரி-கிழக்குத் தொடர்ச்சி மலை, கோயம்புத்தூரில் உள்ள நீலம்பூர் அமைதிப்பள்ளத்தாக்கு, திருவில்லிபுதூர், மற்றும் ஆனைமலை உள்ளிட்ட நான்கு யானைகள் காப்பகங்கள் தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ளது. எனவே இந்த அகத்தியர் மலை யானைகள் காப்பகம் 5-ஆவது யானைகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 31 யானைகள் காப்பகங்கள் உள்ளன.

காஸ்பர் ரூட்

சமீபத்தில் சுவிஸ் ஓபனை வென்ற காஸ்பர் ரூட் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

விடை: நார்வே

ஸ்டாடில் நடந்த சுவிஸ் ஓபன் இறுதிப் போட்டியில் நார்வேயின் காஸ்பர் ரூட் இத்தாலியின் மேத்தியா பெர்ரெத்தினி-ஐ வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றினார். இந்தப் பட்டம், காஸ்பர் ரூட் பெறக்கூடிய 9-ஆவது பட்டமாகும். அந்த வகையில், சமீபத்தில் ஒற்றையர் தரவரிசையின் பிரிவில், உலகின் நம்பர் 5 ஆவது வீரரானார். இதனால், வரலாற்றிலேயே, இந்தத் தரவரிசையில் மிக உயர்ந்த இடத்துக்குச் செல்லும் முதல் நார்வே டென்னிஸ் வீரர் ஆவார்.

ஸ்டார்ட் அப் உற்சவம்

சமீபத்தில், ‘DST Startup உற்சவத்தை’ ஏற்பாடு செய்த நடுவண் அமைச்சகம் எது?

விடை: அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

நடுவண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் DST Startup உற்சவத்தை ஏற்பாடு செய்தது. நடுவண் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சரின் கூற்றுப்படி, தற்போது 105 ஸ்டார்ட் அப்கள் உள்ளன. மேலும், இவற்றில் 49% ஸ்டார்ட்-அப்கள் அடுக்கு 2 மற்றும் அடுக்கு 3 நகரங்களைச் சேர்ந்தவையாக உள்ளன. மேலும், இந்த நிகழ்வில் ஸ்டார்ட் அப்களின் பிரிவுகளைப் பொறுத்து, அதன் சிறப்பு வாய்ந்த நூல்கள் வெளியிடப்பட்டன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Tags:

Yesterday Current Affairs in Tamil | Current Affairs in Tamilnadu | Today Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | Current Affairs 2022 in Tamil | Current Affairs 2022 in Tamil | Exam Daily Current Affairs Tamil | Daily Current Affairs TNPSC | TN Current Affairs | Today Current Affairs in Tamilnadu | Current Affairs for TNPSC Group 4 | Exams Daily Current Affairs in Tamil | TNPSC Group 4 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்