Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

TNPSC Exam Questions 2022: டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் – பாகம் 8

Gowthami Subramani July 12, 2022 & 20:00 [IST]
TNPSC Exam Questions 2022: டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் – பாகம் 8Representative Image.

TNPSC Exam Questions 2022: டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான வினாக்கள் மற்றும் விடைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், தினசரி நடப்பு நிகழ்வுகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு வினாக்கள் மற்றும் விடைகள்

1. அறிவியல் சிந்தனையின் கொள்கைகள்

a. அனுபவவாதம்                            b. பகுத்தறிவுவாதம்

c. சந்தேகம் 

அ. a மட்டும்                                     ஆ. b மட்டும்

இ.  a, b மட்டும்                                 ஈ. a, b, மற்றும் c

விடை: ஈ) a, b, மற்றும் c

2. பின்வருவனவற்றில் பூதலிங்கம் ஆய்வுக்குழு எதனுடன் தொடர்புடையது?

அ. தொழிற்சங்கங்கள்                 ஆ. வேலைநிறுத்தம்

இ. பூட்டுதல்கள்                              ஈ. ஊதியங்கள்

உ. விடை தெரியவில்லை

விடை: ஈ. ஊதியங்கள்

3. “14 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் யாரும் தொழிற்கூடம் அல்லது அபாயகரமான இடங்களில் வேலை பார்க்கக் கூடாது” – இதைக் கூறும் சட்டப்பிரிவு எது?

அ. சட்டப்பிரிவு 27                         ஆ. சட்டப்பிரிவு 26

இ. சட்டப்பிரிவு 24                          ஈ. சட்டப்பிரிவு 25

உ. விடை தெரியவில்லை

விடை: இ. சட்டப்பிரிவு 24

4. அரசியல் சாசன பகுதி V-ன் V-ம் அத்தியாயம் மக்களின் (பொது) பணத்தை கண்காணிக்க நாடாளுமன்றத்தின் ஒரு உயர் அதிகாரியை நியமனம் செய்கிறது.

அ. இந்திய தலைமை தணிக்கை மற்றும் கணக்காளர்

ஆ. நிதி அமைச்சர்

இ. தலைமை தணிக்கையாளர்

ஈ. பிரதம மந்திரி

உ. விடை தெரியவில்லை

விடை: அ. இந்திய தலைமை தணிக்கை மற்றும் கணக்காளர்

5. வண்டல் மண் எந்த மூலத்தின் மூலம் வளமானதாக உள்ளது.

அ. மக்கிய, பாஸ்பரிக் அமிலம், சுண்ணாம்பு, கரிமப்பொருள்

ஆ. இரும்பு, சுண்ணாம்பு, கால்சியம், பொட்டாஷியம், அலுமினியம் மற்றும் மக்னீஷியம் கார்பனேட்

இ. இரும்பு மற்றும் அலுமினியம்

ஈ. மிகுந்த உப்புத் தன்மை மற்றும் அதிக கரிமப்பொருள்கள்

உ. விடை தெரியவில்லை

விடை: அ. மக்கிய, பாஸ்பரிக் அமிலம், சுண்ணாம்பு, கரிமப்பொருள்

6. கி.பி. 1931 ஆம் ஆண்டின் இரண்டாவது வட்ட மேஜை மாநாடு:

i. வெலிங்ட பிரபு இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த போது நடைபெற்றது.

ii. இந்திய தேசிய காங்கிரசின் பிரதிநிதியாக காந்தி இம்மாநாட்டில் கலந்து கொண்டார்.

மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?

அ. 1 மட்டும்                                                 ஆ. 2 மட்டும்

இ. 1 மற்றும் 2                                              ஈ. 1ம் அல்ல, 2ம் அல்ல

உ. விடை தெரியவில்லை

விடை: இ. 1 மற்றும் 2

7. பிற்காலச் சோழர் காலத்தில் ‘இறையிலி’ என்பது எதன் தொடர்புடையது.

அ. வரி வசூலிக்கப்பட்ட நிலம்               ஆ. வரி இல்லாத நிலம்

இ. கோயில் நிலத்திற்கு விதிக்கப்பட்ட வரி

ஈ. குத்தகைக்கு விடப்பட்ட நிலத்திற்கான வரி

உ. விடை தெரியவில்லை

விடை: ஆ. வரி இல்லாத நிலம்

8. உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்து விட்டாலும், திருக்குறளும், கம்பன் காவியமும் இருந்தால் போதும், மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடலாம் – எனக் கூறியவர்.

அ. ஜி.யு.போப்                                 ஆ. கால்டுவெல்

இ. எல்லீஸ்                                        ஈ. வீரமா முனிவர்

உ. விடை தெரியவில்லை

விடை: ஆ. கால்டுவெல்

9. மெட்ராஸ் மாகாணத்தில் உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு சிறைக்குச் சென்ற பெண்மணி யார்?

அ. துர்காபாய்                                 ஆ. ஸ்வரூப் ராணி

இ. ருக்மிணி லட்சுமிபதி              ஈ. சத்யாவதி

உ. விடை தெரியவில்லை

விடை: இ. ருக்மிணி லட்சுமிபதி

10. அலாவுதீன் கில்ஜியின் பின்வரும் பிராந்திய வெற்றிகளை முறையான கால வரிசைப்படி எழுதுக.

I. ரன்தம்போர்

II. மால்வா

III. சித்தூர்

IV. குஜராத்

அ. I, III, IV, II                                                   ஆ. IV, III, II, I

இ. IV, I, III, II                                                    ஈ. I, II, III, IV

உ. விடை தெரியவில்லை

விடை: இ. IV, I, III, II

11. 2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நிதி ஆயோக்கின் சுகாதாரக் குறியீட்டின் படி ____, ____, மற்றும் ____ ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.

அ. உத்திரப் பிரதேசம், அஸ்ஸாம் மற்றும் பஞ்சாப்

ஆ. ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்

இ. பஞ்சாப், கர்நாடகா, மற்றும் ஹரியானா

ஈ. கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா

உ. விடை தெரியவில்லை

விடை: ஈ. கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா

12. கீழ்க்காண்பவைகளில் எது / எவை சரி?

(i) சீர்திருத்தம் என்பது மதிப்பு அமைப்பில் ஏற்படும் பகுதி மாற்றங்கள் மற்றும் உறவின் தரத்தில் ஏற்படும் விளைவு ரீதியான மாற்றங்களால் அடையாளம் காணப்படலாம்.

(ii) உருமாற்ற மாற்றங்கள் மொத்த அமைப்பில் தீவிர மாற்றங்களுடன் வகைப்படுத்தப்படுகின்றன.

அ. i) மட்டும்                                     ஆ. (ii) மட்டும்

இ. (i) மற்றும் (ii)                               ஈ. எதுவும் இல்லை

உ. விடை தெரியவில்லை

விடை: அ. i) மட்டும்

13. மக்கள் நலனை மேம்படுத்துவதற்காக ஒரு சமூக ஒழுங்கை அரசு பாதுகாக்க வேண்டும் என்று எந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு கூறுகிறது?

அ. சட்டப்பிரிவு 38                         ஆ. சட்டப்பிரிவு 39

இ. சட்டப்பிரிவு 37                          ஈ. சட்டப்பிரிவு 36

உ. விடை தெரியவில்லை

விடை: அ. சட்டப்பிரிவு 38

14. கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட சூழ்நிலையில், மாநிலங்களின் நிகர கடன் உச்சவரம்பு 2021-ல் GSDP-யின் _____-க்கு மேம்படுத்தப்பட்டது.

அ. 3.5%                                              ஆ. 4%

இ. 6%                                                 ஈ. 5%

உ. விடை தெரியவில்லை

விடை: ஈ. 5%

15. 2021-ல் நீதியரசர் D. முருகேசன் குழு _____ காரியத்தை ஆராய அமைக்கப்பட்டது.

அ. பொதுத் துறை நிறுவனங்களில் இட ஒதுக்கீடு

ஆ. நீட் தேர்வு

இ. அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தமிழ்நாடு காவல் துறையில் இட ஒதுக்கீடு

ஈ. தொழிற்கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம்

உ. விடை தெரியவில்லை

விடை: ஈ. தொழிற்கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

TNPSC Group 4 Questions | TNPSC Questions with Answers | TNPSC Questions with Answers in Tamil | TNPSC Exam Questions 2022 | TNPSC exams 2022 | TNPSC Questions | TNPSC Group 2 & 2a Questions & Answers | TNPSC Practice Test | TNPSC Group 4 Practice Test | TNPSC Daily Current Affairs | Daily Current Affairs for TNPSC | Daily Current Affairs TNPSC | TNPSC Daily Current Affairs in Tamil 2022 | TNPSC Daily Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | TNPSC Today Current Affairs in Tamil | TNPSC Current Affairs in Tamil | exam Daily Current Affairs Tamil | TNPSC 2022 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்