Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Yesterday Current Affairs in Tamil: ஜூலை 11, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்….!

Gowthami Subramani [IST]
Yesterday Current Affairs in Tamil: ஜூலை 11, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்….!Representative Image.

Yesterday Current Affairs in Tamil: ஜூலை 11, 2022 ஆம் நாளிற்கான நடப்பு நிகழ்வுகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம். மேலும், போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் சில வினாக்கள் மற்றும் அதற்கான பதில்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ள நமது searcharoundweb பக்கத்தில் இணைந்திருங்கள்.

பாதுகாப்பில் செயற்கை நுண்ணறிவு

பாதுகாப்பில் செயற்கை நுண்ணறிவு என்ற கருத்தரங்கு மற்றும் கண்காட்சி எந்த இடத்தில் நடத்தப்பட உள்ளது?

புதுதில்லி

புதுதில்லியில் முதல்முறையாக, “பாதுகாப்பில் செயற்கை நுண்ணறிவு” என்ற கருத்தரங்கு மற்றும் கண்காட்சி பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

இது தொழில்துறை மற்றும் துளிர் நிறுவல்கள் மற்றும் சந்தைக்கு AI தயாரிப்புகள் அறிமுகப்படுத்துவதற்காக நடுவண் பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ உற்பத்தி துறையால் இந்த தொழில்துறை ஏற்பாடு செய்யப்பட்டது. இது ‘GenNext AI’ தீர்வுகள் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டது.

தடைசெய்யப்பட்டவற்றை வெளியிடுதல்

பிரிட்டிஷ் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட கவிதைகள், எழுத்துக்கள், மற்றும் வெளியீடுகளை அடையாளங்கண்டு வெளியிட்ட நடுவண் அமைச்சகம்?

கலாச்சார அமைச்சகம்

கலாச்சார அமைச்சகம் 75 வார கால ‘அமுதப்பெருவிழா’ கொண்டாட்டங்களை நடத்தும் அமைச்சகமாக உள்ளது. இது பிரிட்டிஷ் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட எழுத்துக்கள், கவிதைகள் மற்றும் வெளியீடுகளை அடையாளங்கண்டு அவற்றைத் தொகுத்து, இந்தியாவின் தேசிய ஆவணக் காப்பகத்தின் இணையதளத்தில் வெளியிட்டது. மேலும், இந்தப் படைப்புகள் தமிழ், பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி, மராத்தி, கன்னடம், ஒடியா, பஞ்சாபி, சிந்தி, தெலுங்கு, மற்றும் உருது உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் பிரதமராக ஷின்சோ அபே

அண்மையில் படுகொலை செய்யப்பட்ட ஷின்சோ அபே, எந்த நாட்டின் முன்னாள் பிரதமராவார்?

ஜப்பான்

ஜப்பானின் முன்னாள் பிரதமராக ஷின்சோ அபே இருந்தார். நாரா நகரத்தில் நடந்த ஓர் அரசியல் பிரசார நிகழ்ச்சியின் போது, துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார். ஜப்பானின் மேலவைத் தேர்தல்கள் இந்த வாரத்தில் நடைபெற உள்ள நிலையில் ஷின்சோ அபே அவரது முன்னாள் கட்சியான லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது சுடப்பட்டு இறந்தார்.

இந்திய தேசிய கொடி விற்பனைக்கான GST

சமீபத்தில் நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின் படி, இந்திய தேசியக் கொடியின் விற்பனைக்கான GST எவ்வளவு எனக் குறிப்பிடப்பட்டிருந்தது?

0 சதவீதம்

நிதியமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின் படி, இந்திய தேசிய கொடி விற்பனைக்கு GST-ல் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இயந்திரத்தால் செய்யப்பட்டதா, பாலியஸ்டரால் செய்யப்பட்டதா என்பதைப் பொருட்படுத்தாமல், இதற்கு GST விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு முன்னரே பருத்தி, பட்டு, கம்பள் அல்லது காதி உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட கையால் நெய்யப்பட்ட தேசியக்கொடிகளுக்கு GST விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மந்தாணி ஆறு

எந்த ஆற்றின் துணையாறாக மந்தாணி ஆறு கருதப்படுகிறது?

அலக்னந்தா ஆறு

உத்தரகாண்டில் பாயும் மந்தாகினி ஆறு, கங்கை ஆற்றின் இரண்டு பிரதான நீரோடைகளில் ஒன்றாக விளங்கும் அலக்னந்தா ஆற்றின் துணை ஆறாக கருதப்படுகிறது. இது கர்வால் இமயமலைப் பகுதியில் உள்ள சோராபரி பனிப்பாறையிலிருந்து உருவாகிறது எனக் கூறப்படுகிறது. மேலும், இந்த ஆறு கங்கையில் கலக்கக் கூடிய அலக்னந்தா ஆற்றில் கலக்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Current Affairs in Tamilnadu | Today Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | Current Affairs 2022 in Tamil | Yesterday Current Affairs in Tamil | Current Affairs 2022 in Tamil | Exam Daily Current Affairs Tamil | Daily Current Affairs TNPSC | TN Current Affairs | Today Current Affairs in Tamilnadu | Current Affairs for TNPSC Group 4 | Exams Daily Current Affairs in Tamil | TNPSC Group 4 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்