Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

TNPSC Exam Questions 2022: டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் – பாகம் 9

Gowthami Subramani July 13, 2022 & 19:15 [IST]
TNPSC Exam Questions 2022: டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் – பாகம் 9Representative Image.

TNPSC Exam Questions 2022: டிஎன்பிஎஸ்சி தேர்வு மற்றும் இன்னும் சில போட்டித் தேர்வுகளுக்குக் கேட்கப்படும் கணிதம் பாடம் தொடர்பான வினாக்கள் மற்றும் விடைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தினசரி நிகழ்வுகள் பற்றிய விவரங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் நமது searcharoundweb பக்கத்தில் இணைந்திருங்கள்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு வினாக்கள் மற்றும் விடைகள்

1. வில்சன், மதன், குணா ஆகியோர் ஒரு வட்ட வடிவிலான ஓடுபாதையின் ஒரு சுற்றை முறையே 10, 15 மற்றும் 20 நிமிடங்களில் சுற்றி முடிக்கின்றனர். அவர்கள் தொடக்கப் புள்ளியில் காலை 7 மணிக்கு ஒன்றாகச் சுற்றத் தொடங்கினால், அவர்கள் மீண்டும் எப்போது தொடக்கப் புள்ளியில் ஒன்றாகச் சந்திப்பார்கள்?

அ. முற்பகல் 8 மணி                                  ஆ. பிற்பகல் 8 மணி

இ. பிற்பகல் 5 மணி                                   ஈ. முற்பகல் 9 மணி

உ. விடை தெரியவில்லை

விடை: அ. முற்பகல் 8 மணி

2. இரு எண்களின் மீ.பொ.வ. மற்றும் மீ.பொ.ம முறையே 16 மற்றும் 240 ஆகும். அவ்விரு எண்களில், ஒரு எண் 48 எனில்,மற்றொரு எண்ணைக் காண்க.

அ. 60                                      ஆ. 70

இ. 80                                      ஈ. 90

உ. விடை தெரியவில்லை

விடை: இ. 80

3. ஒரு நகரத்தின் மக்கள் தொகை ஓர் ஆண்டில் 20,000-லிருந்து 25,000 ஆக அதிகரித்துள்ளது எனில் மக்கள் தொகை அதிகரிப்பு சதவீதத்தைக் காண்க.

அ. 25%                                   ஆ. 75%

இ. 100%                                 ஈ. 50%

உ. விடை தெரியவில்லை

விடை: அ. 25%

4. A,B,C என்ற வேட்பாளர்கள் பள்ளி தேர்தலில் பெற்ற வாக்குகள் முறையே 153, 245, மற்றும் 102 எனில் வெற்றி பெற்ற வேட்பாளரின் வாக்கு சதவீதத்தைக் காண்க.

அ. 50%                                   ஆ. 48%

இ. 49%                                   ஈ. 55%

உ. விடை தெரியவில்லை

விடை: இ. 49%

5. 3 கிமீ-க்கும், 300 மீட்டருக்கும் இடையே உள்ள விகிதம் காண்க.

அ. 1:10                                   ஆ. 10:1

இ. 10:3                                    ஈ. 3:10

உ. விடை தெரியவில்லை

விடை: ஆ. 10:1

6. அசல் ரூ.48,000 ஆனது 2 ஆண்டுகள் 3 மாதகாலத்திற்கு பின் தனிவட்டி மூலம் மொத்தத் தொகையாக ரூ.55,560 ஆக உயர்ந்தது எனில் அதன் வட்டி விகிதம்?

அ. 7%                                     ஆ. 8%

இ. 6%                                     ஈ. 5%

உ. விடை தெரியவில்லை

விடை: அ. 7%

7. ரூ.5,000க்கு 12% ஆண்டு வட்டியில், 2 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கொருமுறை வட்டி கணக்கிடப்பட்டால் கிடைக்கும் கூட்டு வட்டியானது

அ. ரூ.1,172                            ஆ. ரூ.1,372

இ. ரூ.1,072                             ஈ. ரூ.1,272

உ. விடை தெரியவில்லை

விடை: ஈ. ரூ.1,272

8. ரூ.5,000-க்கு, 8% ஆண்டு வட்டியில் 2 ஆண்டுகளுக்கு தனிவட்டிக்கும் கூட்டு வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம்

அ. ரூ42                                  ஆ. ரூ38

இ. ரூ.32                                 ஈ. ரூ35

உ. விடை தெரியவில்லை

விடை: இ. ரூ.32

9. ஒரு குறிப்பிட்ட வேகத்தில் ஒரு புத்தகத்தைப் படிக்கும் ஒருவர் 20 பக்கங்களைப் படிக்க 2 மணி நேரமாகிறது எனில், அவர் அதே வேகத்தில் அதே புத்தகத்தில் 50 பக்கங்களைப் படிக்க எவ்வளவு மணி நேரம் எடுத்துக் கொள்வார்.

அ. 5 மணி நேரம்                ஆ. 4 ½ மணி நேரம்

இ. 4 மணி நேரம்                ஈ. 3 மணி நேரம்

உ. விடை தெரியவில்லை

விடை: அ. 5 மணி நேரம்

10. 5 நபர்கள் 5 வேலைகளை 5 நாட்களில் செய்து முடிப்பர் எனில், 50 நபர்கள் 50 வேலைகளை எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்?

அ. 7                                        ஆ. 11

இ. 9                                        ஈ. 5

உ. விடை தெரியவில்லை

விடை: ஈ. 5

11. 25 மாணவர்களின் சராசரி மதிப்பெண் 78.4 இங்கு 96 என்ற மதிப்பானது 69 எனத் தவறுதலாக எடுக்கப்பட்டது கண்டறியப்பட்டது எனில், மதிப்பெண்களுக்கான சரியான சராசரியைக் காண்க.

அ. 79.84                                 ஆ. 97.84

இ. 77.32                                  ஈ. 79.48

உ. விடை தெரியவில்லை

விடை: ஈ. 79.48

12. √3√3√3

அ. 31                                       ஆ. 33

இ. 32                                       ஈ. 34

உ. விடை தெரியவில்லை

விடை: அ. 31

13. 13 + 23 + 33 என்ற தொடரில் எத்தனை உறுப்புகளைக் கூட்டினால் கூடுதல் 1296 கிடைக்கும்?

அ. 9                                        ஆ. 7

இ. 6                                        ஈ. 8

உ. விடை தெரியவில்லை

விடை: ஈ. 8

14. ரூ. 3,600-க்கு 15% வட்டிவீதத்தில் 3 ஆண்டுகள் 9 மாதத்தில் பெறப்படும் தொகை எவ்வளவு?

அ. ரூ.6,000                            ஆ. ரூ.6,250

இ. ரூ. 5,625                           ஈ. ரூ.6,000

உ. விடை தெரியவில்லை

விடை: இ. ரூ. 5,625

15. 5 எண்களின் சராசரி 302. முதல் இரண்டு எண்களின் சராசரி 430 மற்றும் கடைசி இரண்டு எண்களின் சராசரி 213 எனில் மூன்றாவது எண்

அ. 225                                    ஆ. 224

இ. 228                                    ஈ. 230

உ. விடை தெரியவில்லை

விடை: ஆ. 224

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

TNPSC Group 4 Questions | TNPSC Questions with Answers | TNPSC Questions with Answers in Tamil | TNPSC Exam Questions 2022 | TNPSC exams 2022 | TNPSC Questions | TNPSC Group 2 & 2a Questions & Answers | TNPSC Practice Test | TNPSC Group 4 Practice Test | TNPSC Daily Current Affairs | Daily Current Affairs for TNPSC | Daily Current Affairs TNPSC | TNPSC Daily Current Affairs in Tamil 2022 | TNPSC Daily Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | TNPSC Today Current Affairs in Tamil | TNPSC Current Affairs in Tamil | exam Daily Current Affairs Tamil | TNPSC 2022 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்