Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

TNPSC Group 2, 2a Exam Result: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ ரிசல்ட் செக் செய்வது எப்படி? அடுத்த தேர்வு எப்போது?

Nandhinipriya Ganeshan November 09, 2022 & 12:25 [IST]
TNPSC Group 2, 2a Exam Result: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ ரிசல்ட் செக் செய்வது எப்படி? அடுத்த தேர்வு எப்போது?Representative Image.

தமிழ்நாட்டில் அரசு பணிகளுக்கான ஆட்சேர்ப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். அதன்படி, குரூப் 2, 2ஏ தேர்வுகள் டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனடிப்படையில், மொத்தம் 5413 காலி இடங்களுக்கான குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் கடந்த மே மாதம் 21-ந் தேதி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டன. 

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு மொத்தம் 11 லட்சத்து 78 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்தனர். இதில் 9.94 லட்சம் பேர் தேர்வும் எழுதினர். அதாவது சுமார் 5,000 பதவி இடங்களுக்கு சுமார் 10 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இத்தேர்வில் பெண்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்கால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.

TNPSC Group 2, 2a Exam Result: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ ரிசல்ட் செக் செய்வது எப்படி? அடுத்த தேர்வு எப்போது?Representative Image

தற்போது பெண்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதனால், முடிவுகள் வெளியாவதில் தாமதமானது. இந்நிலையில், குரூப் 2, குரூப்2ஏ தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி பிரதான தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Group 2, 2a Exam Result: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ ரிசல்ட் செக் செய்வது எப்படி? அடுத்த தேர்வு எப்போது?Representative Image

குரூப் 2 ரிசல்ட் செக் செய்வது எப்படி?

தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ள முதலில் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான https://www.tnpsc.gov.in/ என்ற பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

முகப்பு பக்கத்தில் latest results என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அங்கு Combined civil services examinations – II என்பதை கிளிக் செய்தால், புதிய பக்கத்தில் முடிவுகள் காண்பிக்கப்படும்.

அதில் உங்கள் பதிவெண் குறியிட்டு  உங்கள் முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்