Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Yesterday Current Affairs in Tamil: ஜூலை 12, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்….!

Gowthami Subramani July 13, 2022 & 18:15 [IST]
Yesterday Current Affairs in Tamil: ஜூலை 12, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்….!Representative Image.

Yesterday Current Affairs in Tamil: ஜூலை மாதம் 12 ஆம் நாளின் நடப்பு நிகழ்வுகளைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம். மேலும், போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்பவர்களுக்கான வினாக்கள் மற்றும் விடைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள நமது searcharoundweb பக்கத்தில் இணைந்திருங்கள்.

சீனாவை விஞ்சும் இந்தியா

‘உலக மக்கள் தொகை தரவேடு - 2022’ அறிக்கையின் படி, எந்த ஆண்டில் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா, சீனாவை விஞ்சும் நாடு எனக் கணிக்கப்பட்டுள்ளது?

விடை: 2023

ஜூலை 11, 2022 – உலக மக்கள் தொகை நாள். அதன் படி, ‘உலக மக்கள் தொகை தரவேடு - 2022’ என்ற தலைப்பில் அதிகாரப்பூர்வ மக்கள் தொகை மதிப்பீடுகள் மற்றும் கணிப்புகளின் 27 ஆவது பதிப்பை ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்டது. அதன் படி, 2023-ல் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா சீனாவை விஞ்சும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், 2022 நவம்பர் 15-ல் உலக மக்கள் தொகை 8பில்லியன் ஆகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டில், சுமார் 8.5 பில்லியனாகவும், 2050 ஆம் ஆண்டில் 9.7 பில்லியனாகவும் வளரும் எனக் கூறப்படுகிறது.

விம்பிள்டன் மகளிர் மற்றும் ஆடவர் பட்டம்

2022 ஆம் ஆண்டின் விம்பிள்டன் மகளிர் மற்றும் ஆடவர் பட்டத்தை வென்றவர்கள் யார்

விடை: எலெனா ரைபகினா, நோகக் ஜோகோவிச்

கஜகஸ்தானின் முதல் வீராங்கனையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர் எலினா ரைபகினா. இவருக்கு வயது 23. கடந்த 2011-க்குப் பிறகு, இளம் விம்பிள்டன் சாம்பியனான பெண்ணானார். மேலும், நோவக் ஜோகோவிச் தனது 4 ஆவது விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பட்டத்தையும், ஒட்டுமொத்தமாக 21 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வெற்றார். இவர் ரபேல் நடாலைவிட (22) சரியாக ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் குறைவாகக் கொண்டுள்ளார்.

கனகனஹள்ளி

பழங்கால பௌத்தத்தலமான கனகனஹள்ளி எந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ளது.

விடை: கர்நாடகா

கர்நாடக மாநிலத்தின் கலபுராகி மாவட்டத்தில் பாயும் பீமா ஆற்றின் கரையில் உள்ள ஒரு பழமையான பௌத்தத் தலம் கனகனஹள்ளி ஆகும். இது சன்னதி தளத்தின் ஒரு பகுதியாகும். இந்த பௌத்தத்தலத்தில், தற்போது இந்திய தொல்லியல் துறை பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

எண்ணெய், எரிவாயுக் கொள்கை

OALP, HELP என்பவை எந்தத் துறையுடன் தொடர்புடையது

விடை: எண்ணெய்

எண்ணெய் மற்றும் எரிவாயுவைக் கண்டுபிடித்து உற்பத்தி செய்வதற்கான புதிய கொள்கையான Hydrocarbon Exploration and Licensing Policy (HELP)  கடந்த 2016-ல் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால், வெளியிடப்பட்டது.

Open Acreage Licensing Programme (OALP)-ன் 7 ஏலச்சுற்றுகள் முடிவடைந்துள்ளன. இதுவரை 134 ஆய்வு மற்றும் உற்பத்தி தொகுதிகள் தரப்பட்டுள்ளது. சமீபத்திய 7 ஆவது ஏலச்சுற்றில், ONGC, OIL மற்றும் GAIL போன்றவை எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு மற்றும் உற்பத்திக்காக வழங்கப்பட்ட 8 தொகுதிகளில் பெரும்பாலானவற்றைப் பெற்றன.

முதல் இரஞ்சிக் கோப்பை வென்ற மாநிலம்

2022 ஆம் ஆண்டில் முதல் இரஞ்சிக் கோப்பையை வென்ற இந்திய மாநிலம் எது?

மத்திய பிரதேசம்

பெங்களூரு சின்னசாமி அரங்கில் நடைபெற்ற் இறுதிப்போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில், மத்திய பிரதேச அணி மும்பை அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் யாஷ் துபே, ஷூபம் சர்மா மற்றும் ரஜத் படிதார் போன்றோரின் சதங்கள் அடங்கும். 23 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய பிரதேச அணியின் கேப்டனாக இருந்த பிரபல கிரிக்கெட் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட்ட் இந்த இளம் அணியை வெற்றிப்பாதைக்குக் கொண்டு சென்றுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Current Affairs in Tamilnadu | Today Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | Current Affairs 2022 in Tamil | Yesterday Current Affairs in Tamil | Current Affairs 2022 in Tamil | Exam Daily Current Affairs Tamil | Daily Current Affairs TNPSC | TN Current Affairs | Today Current Affairs in Tamilnadu | Current Affairs for TNPSC Group 4 | Exams Daily Current Affairs in Tamil | TNPSC Group 4 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்