Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

TNPSC Group 2 Exam Update News: குரூப் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஓர் முக்கிய அறிவிப்பு…

Gowthami Subramani May 21, 2022 & 09:20 [IST]
TNPSC Group 2 Exam Update News: குரூப் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஓர் முக்கிய அறிவிப்பு… Representative Image.

TNPSC Group 2 Exam Update News: இன்று தமிழ்நாடு முழுவதும், குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு நடைபெறுகிறது.

தமிழகத்தின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வுகள் நடத்தப்படும் (TNPSC group 2 2022 exam date). இதன்படி, ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு குறிப்பிட்ட பணிகள் என குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 என பல்வேறு வகையான துறைகளில் வேலை வாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்படும் (TNPSC Application Forms 2022 Tamil).

இன்று தமிழகம் முழுவதும் 4,012 மையங்களில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வின் மூலம், 5,529 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா சூழ்நிலை காரணமாக தேர்வு எதும் நடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டு அதிக அளவிலான நபர்கள் பங்கு கொள்கின்றனர். அதன் படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தும் குரூப் 2 (நேர்முக தேர்வுடன் கூடிய பதவி) 116 பணியிடமாகவும், குரூப் 2ஏ தேர்வின் (நேர்முகத் தேர்வு இல்லாத பதவிகள்) மூலம் 5,413 பதவியிடங்கள் நிரப்பப்படுகின்றன. எனவே, குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கான பதவியிடங்கள் மொத்தம் 5,529-ஐ நிரப்புவதற்கான வெளியிட்டிருந்த அறிவிப்பின் படி, இன்று தேர்வு நடத்தப்படுகிறது.

மேலும், இதற்கான முதல் நிலைத் தேர்வு இன்று அதாவது மே மாதம் 21 ஆம் நாள் நடைபெறுகிறது. மேலும், இந்தத் தேர்வை 11,78,175 நபர்கள் எழுதுகின்றனர். தேர்வுக்கான விதிமுறைகளின் படி, தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்வுக்கான கண்காணிப்பாளர்கள் 58,900 பேர் இருக்கின்றனர்.

இந்தத் தேர்வில் கேட்கப்படும் பொது அறிவுப் பிரிவில் 75 கேள்விகள், திறனறிவுத் தேர்வில் 25 கேள்விகள் இடம்பெறும். மேலும், தேர்வு நடைபெறும் இடங்களில் தேர்வு எழுதுபவர்களுக்கு உதவும் வகையில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்