Fri ,May 24, 2024

சென்செக்ஸ் 75,418.04
1,196.98sensex(1.61%)
நிஃப்டி22,967.65
369.85sensex(1.64%)
USD
81.57
Exclusive

Today Current Affairs in Tamil: ஜூன் 20, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்….!

Gowthami Subramani June 20, 2022 & 15:45 [IST]
Today Current Affairs in Tamil: ஜூன் 20, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்….!Representative Image.

Today Current Affairs in Tamil: ஜூன் மாதம் 20 ஆம் நாளான இன்றைய நாளின் நடப்பு நிகழ்வுகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

திட்டமிட்டபடி அக்னி தேர்வு

அக்னிபாத் திட்டத்தில் சேர்வதற்கான அதிகபட்ச வயது வரம்பு 23 ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. 4 ஆண்டுகள் பணி முடித்த பிறகு, அரசி பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை என பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

செஸ் ஒலிம்பியட் தொடக்கி வைத்தார் பிரதமர்

“சென்னைக்கு பெருமை” - உலக செஸ் பேரவை முதல் முறையாகத் தொடங்கியுள்ள செஸ் ஒலிம்பியாட் சுடரின் தொடர் ஓட்டத்தை பிரதமர் தொடக்கி வைத்தார். இந்த வேளையில் இந்தியாவுக்கு வர வரலாற்றுச் சிறப்புமிகுந்த இத்தருணத்தின் பின்னணியில் இருப்பதில் சென்னை பெருமை கொள்கிறது. தொடர் ஓட்டத்தின் முடிவில் மாமல்லபுரத்தில் ஒலிம்பியாட் சுடரை வரவேற்க ஆவலுடன் உள்ளோம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார்.

ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை செஸ் ஒலிம்பியாட் தொடர் நடைபெறுகிறது.

Biography of Late V.P.Raman written by P.S.Raman

சென்னை சங்கீத வித்வத் சபையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19, 2022) நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மறைந்த விபி.ராமன் வாழ்க்கை வரலாறு குறித்து அவரது மகனும் மூத்த வழக்கறிஞருமான பி.எஸ்.ராமன் எழுதிய நூலை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உச்சநீதிமன்ற நீதிபதி வெ.இராமசுப்ரமணியன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநர் என்.சீனிவாசன் , கிரான்ட் மாஸ்டர் கே.ஆர்.என்.மேனன் ஆகியோர் வெளியிட்டனர்.

கடல் காற்றாலை மின் உற்பத்தி

கடல் காற்றாலை மின் உற்பத்தி இயங்கக் கூடிய தொழில்நுட்பம், மற்றும் அதன் செயல்பாடுகளைத் தெரிந்து கொள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்காட்லாந்து பயணம் செய்துள்ளார்.

தில்லியன் அடையாளத்தை மத்திய அரசு மேம்படுத்தி வருகிறது

தில்லியில் பல்வேறு விதமான திட்டங்களை அமல்படுத்தி அதை நவீனமயமாக மத்திய அரசு மேம்படுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்துள்ளார்.

தில்லியில் உள்ள பிரகதி மைதான ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தடத்தின் கீழ் 1.6 கி.மீ நீளம் கொண்ட சுரங்கச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவு ரூ.920 கோடி ஆகும்.

இதன் மூலம், எரிபொருள் சேமிக்கப்படும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

“தூய்மை இந்தியா” திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த சுரங்கச் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

அக்னிபாத் திட்டம் பிடிக்கவில்லை என்றால் பாதுகாப்புப் படைகளில் சேர வேண்டாம்

மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் கடந்த 1999 ஆம் ஆண்டு கார்கில் போர் நடைபெற்ற பொறகு, கார்கில் குழு அமைக்கப்பட்டது. அப்போது தான் அக்னிபத் திட்டத்தின் கருத்தாக்கம் உருவாக்கப்பட்டது.

இயல்பான பருவ மழையும், வட்டி உயர்வும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் – பொருளாதார நிபுணர்கள் கருத்து

நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகமாக உள்ள நிலையில் இயல்பான பருவ மழையும் வட்டி அதிகரிப்பு நடவடிக்கையும் பணவீக்கத்தைக்கட்டுப்படுத்த உதவும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பண வீக்கத்தை 2 முதல் 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இலக்கு நிர்ணயித்துள்ளது.

பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது

பருவநிலை மற்றும் எரிசக்தி குறித்த பெரிய பொருளாதார நாடுகளின் அமைப்பு கூட்டம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடைபெற்றது. காணொலி மூலம் நடந்த இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்றத்தலைவர் பூபேந்தர் யாதவ் கலந்து கொண்டார்.

சிஓபி 27-க்கான உத்வேகத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது. இந்தக் கூட்டத்தில் உலகெங்கிலும் உள்ள 23 முக்கிய பொருளாதார நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் கலந்து கொண்டனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Current Affairs in Tamilnadu | Today Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | Current Affairs 2022 in Tamil | Yesterday Current Affairs in Tamil | Current Affairs 2022 in Tamil | Exam Daily Current Affairs Tamil | Daily Current Affairs TNPSC | TN Current Affairs | Today Current Affairs in Tamilnadu | Current Affairs for TNPSC Group 4 | Exams Daily Current Affairs in Tamil | TNPSC Group 4 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்