Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Yesterday Current Affairs in Tamil: ஜூலை 22, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்....!

Gowthami Subramani July 26, 2022 & 16:20 [IST]
Yesterday Current Affairs in Tamil: ஜூலை 22, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்....!Representative Image.

Yesterday Current Affairs in Tamil: ஜூலை 22, 2022 ஆம் நாளிற்கான நடப்பு நிகழ்வுகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம். மேலும், போட்டித்தேர்வு தொடர்பான வினாக்களை, விடைகளுடன் தெரிந்து கொள்ள நமது searcharoundweb தளத்துடன் இணைந்திருங்கள்.

பாந்தியா ஆணைய அறிக்கை

பாந்தியா ஆணைய அறிக்கையுடன் தொடர்புடைய துறை எது?

விடை: உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு

மகாராஷ்டிர மாநில தேர்தல் ஆணையம் பாந்தியா ஆணையத்தின் அறிக்கையை ஏற்று அந்த அறிக்கையின் படி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் படி, இது மாநிலத்தில் நடக்ககூடிய உள்ளாட்சித் தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு அரசியல் ரீதியான இட ஒதுக்கீட்டிற்கு வழிவகுக்கிறது. மேலும், அந்த மாநிலத்தின் உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களுக்கு 27% அரசியல் இட ஒதுக்கீடு கிடைக்கும்.

வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) சட்டம்

வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) சட்டம், 2021 – உடன் தொடர்புடைய நடுவண் அமைச்சகம் எது?

விடை: சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

செயற்கைக் கருத்தரிப்பு நுட்ப (ஒழுங்குமுறை) சட்டம், 2021 மற்றும் வாடகைத்தாய் (ஒழுங்குமுறை) சட்டம், 2021 போன்றவற்றின் படி, மனித கருமுட்டைகள் இறக்குமதி செய்வதை அரசாங்கம் தடைசெய்துள்ளது. இதனை, அயல் நாட்டு வர்த்தக இயக்குநரகம் அறிவித்துள்ளது.

ஹரியாலி மகோத்சவம்

நடுவன் சுற்றுச்சூழல் அமைச்சகம் எந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் ஹரியாலி மகோத்சவத்தை ஏற்பாடு செய்தது?

விடை: புதுதில்லி

புதுதில்லியில் அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக ஹரியாலி மகோத்சவம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த மகோட்சவம் மரங்களில் முக்கியத்துவம் மற்றும் வனப் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்த மர விழா ஆகும். ஹரியாலி மகோத்சவம், மாநில அரசுகள், காவல்துறை அமைப்புகள் மற்றும் தில்லியில் பள்ளிகளுடன் இணைந்து நடவுசார் இயக்கங்களை மேற்கொள்வதற்காக வனம், சுற்றுச்சூழல் மாற்ற அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நியூ இனிஷியேட்டிவ் இந்தியா ட்ரெயினிங் நெட்வொர்க்

இது எந்த நிறுவனத்தின் முனைவாகும்?

விடை: கூகுள்

கூகுள் 5 புதிய இந்திய மொழிகளை உள்ளடக்கும் வகையில், கூகுள் செய்திகள் முனைவு இந்தியா பயிற்சி வலையமைப்பை விரிவுபடுத்தியுள்ளது. இந்த முனைவின் மூலம், இணையதளத்தின் மூலம் பரவக்கூடிய போலிச்செய்திகளைக் கையாளத் தேவையான டிஜிட்டல் திறன்களை செய்தி நிறுவனகள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு கற்பிக்க உதவுகிறது. இது, பஞ்சாபி, ஒடியா, அஸ்ஸாமி, குஜராத்தி, மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் கிடைக்கும். 4 ஆண்டுகளுக்கு முன், Data Leads உடன் கூகுள் இணைந்து “Google News Initiative India Training Network” தொடங்கப்பட்டது. மேலும், கூகுள் Data Leads உடன் இணைந்து, Fact-Check அகாதமியைத் தொடங்கவுள்ளது.

குடியரசுத் தலைவர்

இந்தியாவின் 15 ஆவது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்

விடை: திரௌபதி முர்மு

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு 64.03% வாக்குகளைப் பெற்று வென்றுள்ளார். இந்திய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பழங்குடி சார்ந்த அரசியல் தலைவர் என்ற வரலாற்றைப் பெற்றவர் இவர் தான்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Yesterday Current Affairs in Tamil | Current Affairs in Tamilnadu | Today Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | Current Affairs 2022 in Tamil | Current Affairs 2022 in Tamil | Exam Daily Current Affairs Tamil | Daily Current Affairs TNPSC | TN Current Affairs | Today Current Affairs in Tamilnadu | Current Affairs for TNPSC Group 4 | Exams Daily Current Affairs in Tamil | TNPSC Group 4 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்