Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் 11 – இன்றைய நடப்பு நிகழ்வுகள்....!

Gowthami Subramani August 18, 2022 & 12:30 [IST]
Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் 11 – இன்றைய நடப்பு நிகழ்வுகள்....!Representative Image.

Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் மாதம் 11 ஆம் நாளுக்கான நடப்பு நிகழ்வுகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம். மேலும், டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்களை விடைகளுடன் தெரிந்து கொள்ள நமது searcharoundweb பக்கத்தில் இணைந்திருங்கள்.

உயரமான இரயில்வே பாலம்

உலகளவில் மிகவும் உயரமான இரயில்வே பாலம் அமைந்துள்ள இந்திய மாநிலம் / யூனியன் பிரதேசம்?

விடை: ஜம்மு-காஷ்மீர்

ஜம்மு-காஷ்மீரில் உள்ள செனாப் பாலம் தான் உலகளவில் மிகவும் உயரமான இரயில் பாலமாகக் கருதப்படுகிறது. இந்த இரயில்வே பாலத்தில், எஃகு வளைவு 2021 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அதே சமயத்தில், மேம்பாலத்தளமும் கட்டி முடிக்கப்பட உள்ளது. இந்த செனாப் இரயில்வே பாலத்தில் மேல்தளம் பொன்னிணைப்புடன் கட்டி முடிக்கப்படும் போது, உலகில் உயரமான இரயில் பாலத்திற்கான சாதனையை எட்டும் எனக் கூறப்படுகிறது.

உலக உயிரி எரிபொருள் நாள்

உலக உயிரி எரிபொருள் நாள் கொண்டாடப்படும் தேதி?

விடை: ஆகஸ்ட் 10

உலகளவில் ஆகஸ்ட் 10 ஆம் நாள் உலக உயிரி எரிபொருள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கம், உயிரி எரிபொருளின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் அமைந்ததாகும். கடந்த 1893 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 10 ஆம் நாள் ஜெர்மன் கண்டுபிடிப்பாளரான சர் ருடால்ஃப் டீசல் தனது டீசல் இயந்திரத்தைக் கடலை எண்ணெய் கொண்டு வெற்றிகரமாக இயக்கினார்.

உயிரி எரிபொருள்கள் பொதுவாக, விலங்குகளின் கழிவுகள், பாசிகள், தொழிற்சாலைகள் மற்றும் வேளாண் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இவை புதைபடிவ எரிபொருள்கள் போல அல்லாமல், குறுகிய காலத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது திரவம் மற்றும் வாயு வடிவிலும் கிடைக்கப்பெறும். அது மட்டுமல்லாமல், இவை சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாகவும், புதுப்பிக்கத் தக்கவையாகவும், மக்கும் தன்மை கொண்டவையாகவும் உள்ளது. இந்த உயிரி எரிபொருள் தினம், கடந்த 2015 ஆம் ஆண்டிற்குப் பிறகு கொண்டாடத் தொடங்கப்பட்டது.

டிஜிட்டல் கொடுப்பனவு குறியீடு

Digital Payments Index என்ற டிஜிட்டல் கொடுப்பனவு குறியீட்டை வெளியிடுகிற இந்திய நிறுவனம் எது?

விடை: RBI (இந்திய ரிசர்வ் வங்கி)

இந்திய ரிசர்வ் வங்கி, டிஜிட்டல் கொடுப்பனவு குறியீட்டை வெளியிடுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் முறையே ஜூலை மற்றும் ஜனவரி மாதம், மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வெளியிடப்படும். சமீபத்திய பதிப்பான மார்ச் 2022 நிலவரப்படி, இந்த குறியீடு 349.30-ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முன்னரே, செப்டம்பர் 2021-ல் 304.06 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது, நாடு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை மிக விரைவாக ஏற்றுக் கொள்வதைக் குறிக்கிறது. RBI-DPI ஆனது, 2018 மார்ச்-ஐ அடிப்படைக் காலமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டதாகும்.

மார்த்தாண்டம் சூரியன் கோவில்

சமீபத்தில் கூறப்பட்டு வந்த மார்த்தாண்டம் சூரியன் கோவில் அமைந்துள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

விடை: ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாகில் இந்த மார்த்தாண்டம் சூரியன் கோவில் உள்ளது. முன்னதாக, துணை நிலை ஆளுநரான மனோஜ் சின்ஹா பங்கேற்ற விழாவில், இந்த பகுதியில் சிவப்புக் கொடி இந்திய தொல்லியல் துறையால் ஏற்றப்பட்டது. இந்த கோவிலுக்குள், யாத்திரீகர்கள், 1 மணி நேர பிரார்த்தனை அமர்வு நடைபெற்ரது. மேலும், இந்த தளம் உயிரற்ற பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாகவும், இந்தப் பகுதியில் அனுமதியின்று எந்த சடங்கும் நடத்தக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.

44 செஸ் ஒலிம்பியாட்

44 செஸ் ஒலிம்பியாட் போட்டியின் திறந்த நிலைப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற நாடு எது?

விடை: உஸ்பெகிஸ்தான்

இந்த 2022 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கப்பதக்கத்தை வென்றது. அதனைத் தொடர்ந்து ஆர்மேனியா வெள்ளிப்பதக்கத்தையு, இந்தியா-2 அணிகள் வெண்கலப்பதக்கத்தையும் வென்றது என சர்வதேச செஸ் கூட்டமைப்பு தெரிவித்தது.

மேலும், பெண்கள் பிரிவில் உக்ரைன் தங்கப்பதக்கமும், ஜார்ஜியா வெள்ளிப்பதக்கமும், முதலிடம் வகிக்கும் இந்தியா-1 அணி வெண்கலப் பதக்கத்தையும் வென்றது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Yesterday Current Affairs in Tamil | Current Affairs in Tamilnadu | Today Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | Current Affairs 2022 in Tamil | Current Affairs 2022 in Tamil | Exam Daily Current Affairs Tamil | Daily Current Affairs TNPSC | TN Current Affairs | Today Current Affairs in Tamilnadu | Current Affairs for TNPSC Group 4 | Exams Daily Current Affairs in Tamil | TNPSC Group 4 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்