Tue ,Nov 05, 2024

சென்செக்ஸ் 78,782.24
-941.88sensex(-1.18%)
நிஃப்டி23,995.35
-309.00sensex(-1.27%)
USD
81.57
Exclusive

Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் 9 & 10 – இன்றைய நடப்பு நிகழ்வுகள்....!

Gowthami Subramani August 17, 2022 & 15:30 [IST]
Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் 9 & 10 – இன்றைய நடப்பு நிகழ்வுகள்....!Representative Image.

Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் மாதம் 9 மற்றும் 10 ஆம் நாட்களுக்கான நடப்பு நிகழ்விகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம். மேலும், டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்களை விடைகளுடன் தெரிந்து கொள்ள நமது searcharoundweb இணையதளத்துடன் இணைந்திருங்கள்.

போர் விமானம்

இந்திய ராணுவத்திற்கு, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட விரைவாக எதிர்வினையாற்றக் கூடிய போர் விமானத்தை வழங்கிய நிறுவனம் எது?

விடை: TATA அதிநவீன அமைப்பு

டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ், இந்திய ராணுவத்திற்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட விரைவாக எதிர்வினையாற்றக்கூடிய போர் விமானத்தை வழங்கியுள்ளது. இந்த இராணுவ வாகங்கள், அனைத்து நிலப்பரப்பு மர்றும் அனைத்து வானிலைகளிலும் தேசத்தின் போர்திறனை அதிகரிக்கும் வகையில் உள்ளது. அது மட்டுமல்லாமல், இந்த வாகனம் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பை வழங்கக் கூடியவையாக அமையும். இந்த வாகனத்தின் அறிமுகம், இந்திய இராணுவத்தின் செயல்பாட்டு திறனை அதிகரிக்கும் என என கூறப்படுகிறது.

இளையோர் திறன்கள் நாள்

இந்த 2022 ஆம் ஆண்டின் உலக இளையோர் திறன்கள் நாளிற்கான கருப்பொருள்?

விடை: Transforming Youth Skills for the Future

கடந்த 2004 ஆம் ஆண்டு ஐ.நா பொதுச்சபையின் பேரறிவுக் கூட்டத்திற்குப் பிறகு, ஆண்டு தோறும் ஜூலை மாதம் 15 ஆம் நாள் உலக இளையோர் திறன்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. “Transforming Youth Skills for Future” என்பது இந்த 2022 நடப்பு ஆண்டிற்கான உலக இளையோர் திறன்கள் நாளிற்கான கருப்பொருளாகும். இதன் முக்கிய நோக்கம் வேலைவாய்ப்பு, நல்ல வேலை மற்றும் தொழில் முனைவு உள்ளிட்ட திறன்களுடன் கூடிய இளைஞர்களை உருவாக்குவதாகும்.

இயற்கை பாதுகாப்பு நாள்

உலக இயற்கை பாதுகாப்பு நாள் கொண்டாடப்படும் நாள் எது?

விடை: ஜூலை 28

இயற்கை வளங்களின் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு குறித்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த இயற்கை பாதுகாப்பு நாள் கொண்டாடப்படுகிறது. அதன் படி, உலகளவிலான இந்த இயற்கை பாதுகாப்பு நாள் ஆண்டுதோறும் ஜூலை 28 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. “Forests and Livelihoods: Sustaining People and Planet” என்பதே இந்த நடப்பு 2022 ஆம் ஆண்டிற்கான கருப்பொருளாகும். மேலும், ICN ஆனது மனித நடவடிக்கைகள் மற்றும் சுற்றுச்சூழலில் அவற்றின் தாக்கத்தைக் கண்காணித்து வருகிறது.

பன்னாட்டு நடுவர் மையம்

புது தில்லி பன்னாட்டு நடுவர் மையத்தின் புதிய பெயர்?

விடை: இந்திய பன்னாட்டு நடுவர் மையம்

மக்களவையில், நடுவணரசு “புது தில்லி பன்னாட்டு நடுவர் மையம் (திருத்த) மசோதா, 2022”-ஐ முன் வைத்தது. புது தில்லி பன்னாட்டு நடுவர் மையச் சட்டம், 2019-ஔ திருத்துவதற்கான மசோதாவை சட்ட அமைச்சரான கிரண் ரிஜ்ஜி முன்வைத்தார். இது நகர அளவிலான நோக்கத்திற்குப் பதில், பரந்த நாடு அளவிலான நோக்கத்தை வழங்குவதற்கு இந்த நடுவர் மையம், “இந்திய பன்னாட்டு நடுவர் மையம்” என மறுபெயரிடுவதற்காக எண்ணுகிறது.

5ஜி அலைக்கற்றை

ரூ. 4.3 லட்சம் கோடி மதிப்பிலான 5G அலைக்கற்றைகளின் எத்தனை ஹெர்ட்ஸ்-க்கான இந்தியாவின் மிகப்பெரிய அலைக்கற்றை ஏலம் தொடங்கியது?

விடை: 72 ஜிகா ஹெர்ட்ஸ் அல்லது 72 GHz

72GHz, ரூ.4.3 லட்சம் கோடி மதிப்புடைய 5ஜி அலைக்கற்றைகளுக்கான ஏலம், இந்தியாவில் சமீபத்தில் தொடங்கியது. அதன் படி, இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும் கௌதம் அதானியின் அதானி நிறுவனத்தின் ஒரு பிரிவு போன்றவை பங்கேற்றது. பல்வேறு மிகக் குறைந்த (600 MHz, 700 MHz, 800 MHz, 900 MHz, 1800 MHz, 2100 MHz, 2300 MHz), நடு அளவில் (3300 MHz) மற்றும் அதிக (26GHz) அலைவரிசையில் இந்த 5ஜி அலைக்கற்றை ஏலம் நடத்தப்பட்டது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Yesterday Current Affairs in Tamil | Current Affairs in Tamilnadu | Today Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | Current Affairs 2022 in Tamil | Current Affairs 2022 in Tamil | Exam Daily Current Affairs Tamil | Daily Current Affairs TNPSC | TN Current Affairs | Today Current Affairs in Tamilnadu | Current Affairs for TNPSC Group 4 | Exams Daily Current Affairs in Tamil | TNPSC Group 4 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்