Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் 12 – இன்றைய தினத்தின் நடப்பு நிகழ்வுகள்....!

Gowthami Subramani August 20, 2022 & 17:05 [IST]
Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் 12 – இன்றைய தினத்தின் நடப்பு நிகழ்வுகள்....!Representative Image.

Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் 12 ஆம் நாளிற்கான நடப்பு நிகழ்வுகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம். மேலும், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்களை விடைகளுடன் தெரிந்து கொள்ள நமது searcharoundweb பக்கத்தில் இணைந்திருங்கள்.

நெதன்னா பீமா

நெசவாளர்களுக்குப் பயன்பெறும் வகையில், ‘நெதன்னா பீமா’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய இந்திய மாநிலம்?

விடை: தெலுங்கானா

இந்த நெதன்னா பீமா என்ற திட்டம் தெலுங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் அவர்களால் நெசவாளர்களுக்காக தொடங்கப்பட்டது. இது தேசிய கைத்தரி நாளை முன்னிட்டு தொடங்கப்பட்டதாகும். இந்த திட்டத்தில், தகுதியான பயனாளிகள் எதிர்பாராத விதத்தில் இறந்தால், நெசவாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படும். இந்த திட்டத்திற்காக, தெலுங்கானா மாநில அரசு, “நெதன்னா பீமா” என்ற திட்டத்துடன் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான LIC கூட்டிணைந்துள்ளது.

வீட்டுக்கான காப்பீட்டு திட்டம்

பிரமரின் ஆவாஸ் யோஜனா திட்டம் (நகர்ப்புறம்) எந்த ஆண்டு வரை தொடர்வதற்கு, நடுவண் அரசிடம் இருந்து ஒப்புதல் அளிக்கப்பெற்றது? (ஆகஸ்ட் 2022 அறிக்கையின் படி)

விடை: 2024

2024 டிசம்பர் மாதம் வரை, பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு நடுவணரசு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமரி “அனைவருக்கும் வீடு” என்ற இத்திட்டம் 2015 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கான காலக்கெடு 2022 மார்ச் மாதம் வகை தகுதியுள்ள நகர்ப்புற பயனாளிகளுக்கு வீடுகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.

தேசியக்கொடி நாள்

இந்தியாவில் “தேசியக் கொடி நாள்” எந்த தினத்தில் கொண்டாடப்படுகிறது?

விடை: ஜூலை 22

ஆண்டுதோறும், இந்தியாவில் “தேசியக் கொடி நாள்” ஜூலை மாதம் 22 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. கடந்த 1947 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் நாள் இந்திய அரசியல் நிர்ணய சபை தேசியக் கொடியை ஏற்றுக் கொண்டது. அதன் படி, 1947 ஜூலை 22 ஆம் நாள் இந்திய அரசியலமைப்பு சபையில் உறுப்பினர்கள் டெல்லியில் உள்ள அரசியலமைப்பு மண்டபத்தில் கூடிய போது, சுதந்திர இந்தியாவுக்கான தேசியக் கொடியை ஏற்றுக் கொள்வதற்கான ஜவஹர்லால் நேருவின் தீர்மானம் முதன் முதலாக விவாதிக்கப்பட்டது.

CoWIN செயலி

NHA அறிவிப்பின் படி, இந்த CoWIN செயலி, எந்த திட்டத்திற்காக மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது?

விடை: உலகளாவிய நோய்த் தடுப்பு திட்டம்

தற்போது, உலகளாவிய நோய்த் தடுப்பு திட்டத்திற்காக, CoWIN செயலி மீண்டும் உருவாக்கப்படுகிறது. CoWIN தலைவரும், தேசிய நலவாழ்வு ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான டாக்டர் ஆர் எஸ் சர்மா, தாய்மார்கள் மற்றும் சிசுக்களுக்குத் தடுக்கக்கூடிய நோய்களுக்கான தடுப்பூசி மையங்கள் மற்றும் அடுத்தடுத்த தடுப்பூசிகளுக்கான நினைவூட்டல்களைக் கண்டறிய இந்த செயலி உதவும் என அறிவித்துள்ளார்.

டிஜிட்டல் வர்த்தகம்

எந்த ஒழுங்குமுறை அமைப்புடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், ONDC நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கப்பட்டது?

விடை: SIDBI வங்கி

டிஜிட்டல் வர்த்தகத்திற்கான கட்டற்ற வலையமைப்பு தொடர்புடைய நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காக SIDBI உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தக் கூட்டாண்மையின் கீழ், ONDC நெறிமுறை மற்றும் குறைந்தபட்ச சாத்தியமான தயாரிப்பு பற்றிய ONDC பேரமர்வுகள் MSME-களுக்கு நடத்தப்படும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Yesterday Current Affairs in Tamil | Current Affairs in Tamilnadu | Today Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | Current Affairs 2022 in Tamil | Current Affairs 2022 in Tamil | Exam Daily Current Affairs Tamil | Daily Current Affairs TNPSC | TN Current Affairs | Today Current Affairs in Tamilnadu | Current Affairs for TNPSC Group 4 | Exams Daily Current Affairs in Tamil | TNPSC Group 4 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்