Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் 13 & 14 – இன்றைய தினத்தின் நடப்பு நிகழ்வுகள்....!

Gowthami Subramani August 22, 2022 & 13:30 [IST]
Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் 13 & 14 – இன்றைய தினத்தின் நடப்பு நிகழ்வுகள்....!Representative Image.

Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் மாதம் 13 மற்றும் 14 ஆம் நாளிற்கான நடப்பு நிகழ்வுகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம். மேலும், டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்களை விடைகளுடன் தெரிந்து கொள்ள நமது searcharoundweb பக்கத்தில் இணைந்திருங்கள்.

விண்வெளி தொழில்நுட்ப பூங்கா

SPARK எனப்படும் மெய்நிகர் விண்வெளி தொழில்நுட்ப பூங்காவை அறிமுகப்படுத்திய நிறுவனம்?

விடை: ISRO

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சமீபத்தில், மெய்நிகர் விண்வெளி தொழில்நுட்ப பூங்கா எனப்படும் SPARK-ஐ அறிமுகம் செய்தது. இது, இஸ்ரோ தலைவரான S. சோம்நாத் அவர்களால் தொடங்கப்பட்டது. மேலும், இந்த மெய்நிகர் விண்வெளி அருங்காட்சியகத்தில் உள்ள செயற்கைக்கோள்கள், அறிவியல் திட்டங்கள், ஏவுகலங்கள், மற்றும் இந்தியாவின் விண்வெளித் துறையின் முன்னோடிகள் தொடர்பான பல்வேறு ஆவணங்கள், படங்கள், காணொளிகள் போன்றவை உள்ளன.

டிஜிட்டல் கடன் வழங்கும் நடவடிக்கைகள்

இந்தியாவில், “டிஜிட்டல் கடன் வழங்கும் நடவடிக்கைகளை” ஒழுங்குபடுத்தும் நிறுவனம்?

விடை: இந்திய ரிசர்வ் வங்கி

டிஜிட்டல் கடன் வழங்கும் நடவடிக்கைகளுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை வலுப்படுத்துவதற்குத் தேவையான வழிகாட்டு நெறிமுறைகள் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. மத்திய வங்கியால், கட்டுப்படுத்தப்படும் அல்லது சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களால், மட்டுமே கடன் வழங்குதலை மேற்கொள்ள முடியும் என ஆர்பிஐ குறிப்பிட்டுள்ளது. மேலும், இணையவழி கடன் வழங்கும் முறைமைகள் மூலம் கடன் வழங்குவதால், வரக்கூடிய சிக்கல்களைத் தவிர்க்கும் முயற்சியாக இது வெளியிடப்பட்டுள்ளது.

NIPAM

சமீபத்தில் இடம் பெற்ற NIPAM எந்த துறையுடன் தொடர்புடையது?

விடை: அறிவுசார் சொத்து

தேசிய அறிவுசார் சொத்து விழிப்புணர்வு இயக்கம் (National Intellectual Property Awareness Mission - NIPAM) என்பது அறிவுசார் சொத்து விழிப்புணர்வை பரப்புவதற்கு மட்டும் அடிப்படைப் பயிற்சிகளை வழங்குவதற்கான ஒரு திட்டமாகும். ஆகஸ்ட் 15, 2022 வரையிலான காலக்கெடுவிற்கு முன்னதாகவே, ஜூலை 31, 2022 அன்று ஒரு மில்லியன் மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கும் இலக்கை இந்தத் திட்டம் பூர்த்தி செய்துள்ளது.

போக்குவரத்து உமிழ்வுத் தரவு

கூகுளுடன் இணைந்து, போக்குவரத்து உமிழ்வுத் தரவை வெளியிட்ட முதல் இந்திய நகரம்?

விடை: ஔரங்காபாத்

கூகுளிலிருந்து, Environmental Insights Explorer தரவை வெளியிடும் நாட்டின் முதல் நகரம் ஔரங்காபாத் ஆகும். இந்த EIE அம்சத்தின் கீழ், நகரங்கள் CO2 உமிழ்வு மூலங்களை அளவிடும் மற்றும் பகுப்பாய்வு நடத்தும். மேலும், அந்த உமிழ்வைக் குறைப்பதற்கான உக்திகளையும் அடையாளம் காணுகின்றன. இந்தியாவில் EIE அம்சமானது ஔரங்காபாத், சென்னை, பெங்களூர் மற்றும் புனே ஆகிய நகரங்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. அதன் படி, இந்த போக்குவரத்து உமிழ்வுத் தரவை பொதுவில் வெளியிடும் முதல் நகரம் ஔரங்கபாத் ஆகும்.

அடல் ஓய்வூதியத் திட்ட விதிகள்

சமீபத்தில் அடல் ஓய்வூதியத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட மாற்றங்களின் படி, இதில் எந்த பயனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது?

விடை: வருமான வரி செலுத்துவோர்

2022 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் நாள் முதல், அடல் ஓய்வூதியத் திட்ட விதிகளில் அரசு சில மாற்றங்களைச் செய்துள்ளது. நிதி அமைச்சகத்தின் அறிவிப்பின் படி, வருமான வரி செலுத்துபவராக இருக்கும் எந்தவொரு குடிமகனும், இந்த திட்டத்தில் சேர தகுதி பெற மாட்டார்கள். அதன் படி, அக்டோபர் 1 அல்லது அதற்குப் பிறகு இத்திட்டத்தில் சேரும் வருமான வரி செலுத்து முதலீட்டாளர்கள் சேர்ந்தால், அவர்களின் கணக்கு மூடப்படும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Yesterday Current Affairs in Tamil | Current Affairs in Tamilnadu | Today Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | Current Affairs 2022 in Tamil | Current Affairs 2022 in Tamil | Exam Daily Current Affairs Tamil | Daily Current Affairs TNPSC | TN Current Affairs | Today Current Affairs in Tamilnadu | Current Affairs for TNPSC Group 4 | Exams Daily Current Affairs in Tamil | TNPSC Group 4 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்