Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் 25 – இன்றைய தினத்தின் நடப்பு நிகழ்வுகள்....!

Gowthami Subramani September 01, 2022 & 16:10 [IST]
Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் 25 – இன்றைய தினத்தின் நடப்பு நிகழ்வுகள்....!Representative Image.

Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் மாதம் 25 ஆம் நாளுக்கான நடப்பு நிகழ்வுகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம். மேலும், டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்களை விடைகளுடன் தெரிந்து கொள்ள நமது searcharoundweb பக்கத்தில் இணைந்திருங்கள்.

இத்தாலி கி உடான்

நடுவண் கலாச்சார அமைச்சகம் எந்த நிறுவனத்துடன் இணைந்து, ‘இந்தியா கி உடான்’ என்ற முனைவைத் தொடங்கியது?

விடை: கூகுள்

கடந்த 75 ஆண்டுகளில், இந்தியா அதன் சாதனைகளைக் கொண்டாடும் வகையில், கலாச்சார அமைச்சகம் மற்றும் கூகுள் இணைந்து, ‘இந்தியா கி உதான்’ என்ற முனைவைத் தொடங்கியது. இந்த கொண்டாட்டம், புது தில்லியில் தொடங்கியது. இது விடுதலை அமுதப் பெருவிழாவின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டதாகும். மேலும், கடந்த 75 ஆண்டுகளில் இந்தியாவில் உருவாகிய சாதனையாளர்களைக் கௌரவிப்பதற்காக, உருவாக்கப்பட்ட கண்காட்சியை கூகுள் கலை மற்றும் கலாச்சார பிரிவு வெளியிட்டது.

மிக உயரமான இரயில்வே பாலம்

உலகில் மிக உயரமான இரயில்வே பாலம் உள்ள இந்திய மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் எது?

விடை: ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீரில் உள்ள செனாப் பாலம், உலகின் மிக உயரமான இரயில் பாலம் ஆகும். உலகின் மிக உயரமான இந்த ரயில்வே பாலத்தின் எஃகு வளைவு 2021 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அதே சமயம் மேம்பாலத்ததளம் கட்டி முடிக்கப்பட்ட உள்ளது. மேலும், இந்த செனாப் ரயில்வே பாலத்தின் மேல்தளம் பொன்னிணைப்புடன் கட்டி முடிக்கப்படும் போது, அது உலகின் மிக உயரமான இரயில் பாலத்திற்கான சாதனையை அடையும்.

குடிமக்கள் விருது

லடாக்கின், இந்த ஆண்டு மிக உயரிய குடிமக்கள் விருதான ‘dPal rNgam Duston’ விருதை யார் பெற்றார்?

விடை: தலாய் லாமா

திபெத்திய ஆன்மீகத் தலைவரான தலாம் லாமாவுக்கு மிக உயரிய குடிமக்கள் விருதான, ‘dPal rNgam Duston’ விருது வழங்கப்பட்டது. லேவில் உள்ள லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சிலால், 6-ஆம் முறையாக இந்த விருது வழங்கப்படுகிறது. மனித குலத்திற்கு, அதிலும் குறிப்பாக லடாக் யூனியன் பிரதேசத்திற்கு தலாய் லாமா மகத்தான பங்களிப்பை ஆற்றியதற்காக இந்த விருது வழங்கப்பட்டது.

இராணுவப் பயிற்சி பெயர்

‘வஜ்ர பிரஹார் – 2022’ என்பது இந்தியாவுக்கும், எந்த நாட்டிற்கும் இடையே நடக்கும் இராணுவப் பயிற்சியாகும்?

விடை: அமெரிக்கா

அமெரிக்காவும், இந்தியாவும் தங்களது சிறப்புப் படைகளுக்கு இடையேயான இயங்கு திறனை மேம்படுத்துவதற்காக, ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள பக்லோவில், ‘வஜ்ர பிரஹார் – 2022’ என்ற இராணுவப் பயிற்சியை தொடங்கியது. அதன் படி, இந்த இந்திய மற்றும் அமெரிக்கா நாடுகளின் கூட்டு சிறப்புப் படைகளின் 13-வது பதிப்பான, ‘வஜ்ர பிரஹார் - 2022’ என்ற பயிற்சியானது, இந்திய இராணுவத்தின் கூற்றுப் படி, பக்லோவில் உள்ள சிறப்புப் படைகள் பயிற்சிப்பள்ளியில் தொடங்கியது.

முதல் பெண் தலைவர்

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கவுன்சிலின் (CSIR) முதல் பெண் தலைவராக யார் நியமிக்கப்பட்டவர்?

விடை: Dr. N. கலைச்செல்வி

CSIR எனப்படும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கவுன்சிலின் முதல் பெண் தலைவராக நியமிக்கப்பட்டவர் Dr. N. கலைச்செல்வி ஆவார். ஆற்றல் ஆராய்ச்சியாளரான இவர், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சித் துறையின் செயலாளராக இருப்பார். நடுவண் அரசின் அறிவியல் துறையின் செயலாளராக பதவி வகிக்கும் நான்காவது பெண் அறிவியலாளர் இவரே ஆவார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Tags:

Yesterday Current Affairs in Tamil | Current Affairs in Tamilnadu | Today Current Affairs in Tamil | GK Today Current Affairs in Tamil | Yesterday Current Affairs | Current Affairs Today in Tamil | Current Affairs 2022 in Tamil | Current Affairs 2022 in Tamil | Exam Daily Current Affairs Tamil | Daily Current Affairs TNPSC | TN Current Affairs | Today Current Affairs in Tamilnadu | Current Affairs for TNPSC Group 4 | Exams Daily Current Affairs in Tamil | TNPSC Group 4 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்