Sun ,Mar 03, 2024

சென்செக்ஸ் 73,806.15
60.80sensex(0.08%)
நிஃப்டி22,378.40
39.65sensex(0.18%)
USD
81.57
Exclusive

Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் 17 – இன்றைய தினத்தின் நடப்பு நிகழ்வுகள்....!

Gowthami Subramani August 24, 2022 & 13:40 [IST]
Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் 17 – இன்றைய தினத்தின் நடப்பு நிகழ்வுகள்....!Representative Image.

Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் மாதம் 17 ஆம் நாளிற்கான நடப்பு நிகழ்வுகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம். மேலும், டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்களை விடைகளுடன் தெரிந்து கொள்ள நமது searcharoundweb பக்கத்தில் இணைந்திருங்கள்.

அனுபிரத பயிற்சி யோஜனா

“முதலமைச்சர் அனுபிரத பயிற்சி யோஜனா” வைச் செயல்படுத்தும் இந்திய மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் எது?

விடை: இராஜஸ்தான்

2021-22 ஆம் ஆண்டில் இராஜஸ்தான் மாநில அரசாங்கம், “முதல்வர் அனுபிரதி பயிற்சி யோஜனா” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், மாணாக்கர்களுக்கு மிகப் புகழ்பெற்ற பயிற்சி நிறுவனங்களின் மூலம் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன் படி, நடப்பு நிதியாண்டில் இராஜஸ்தான் மாநில அரசு ரூ.17.15 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. அதன் படி, இதன் கீழ் உள்ள இடங்களின் எண்ணிக்கையை 15,000 ஆக உயர்த்தியது. இது, பட்டியலினம், பட்டியல் பழங்குடியினர், சிறுபான்மையினர், பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை உள்ளடக்கியதாகும்.

தொழில்நுட்பத் தகவல்

முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தில் அடிப்படையில் இயங்கக் கூடிய நடுவணரசின் பயணிகள் செயலாக்க அமைப்பின் பெயர்?

விடை: டிஜியாத்ரா

டெல்லி பன்னாட்டு வானூர்தி நிலைய லிமிடெட், நடுவண் அரசின், “டிஜியாத்ரா” முனைவை அறிவித்தது. இந்த டிஜியாத்ரா என்ற அமைப்பு முகத்தை அடையாளம் காணக்கூடிய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பயணிகளுக்கான செயலாக்க அமைப்பாகும். இந்த டெக்னாலஜியின் மூலம், அனைத்து சோதனைச் சாவடிகளும் முகத்தை அடையாளம் காணக்கூடிய அமைப்பின் அடிப்படையில் பயணிகளின் உள்ளீடுகளைத் தாமாகவே செயல்படுத்தும்.

இரயில்வே சேவையுடன் கூட்டணி

எந்த மிகப்பெரிய மின்னணு வணிக நிறுவனம், அதன் டெலிவரி சேவைகளை அதிகரிப்பதற்கு இந்திய இரயில்வேயுடன் கூட்டு சேர்ந்துள்ளது?

விடை: அமேசான்

அமேசான் இந்தியா தனது ஒப்படைப்பு சேவைகளை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்திய இரயில்வே சேவையுடன் கூட்டிணைந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில், ரயில்வே வலையமைப்புகள் மூலமாக, விரைவுச் சேவைகளை உருவாக்க, இந்திய ரயில்வேயுடன் இணைந்தது. இவ்வாறு விரைவுச் சேவை நோக்கத்திற்காக, இந்திய ரயில்வேயுடன் இணைந்த முதல் இணைய வழி டெலிவரி நிறுவனம் இதுவே ஆகும். அமேசான் இந்தியா மற்றும் இந்திய ரயில்வே கூட்டிணைப்பு மூலம், அமேசான் 110-க்கும் அதிகமான நகரங்களுக்கு இடையே வழித்தடங்களில் பொருள்களைக் கொண்டு செல்ல முடிகிறது.

தண்ணீர் தட்டுப்பாடு

வழக்கத்திற்கு மாறாக, மிகவும் வறண்ட கோடைக் காலம் நிலவுவதால், சமீபத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை அறிவித்த நாடு எது?

விடை: நெதர்லாந்து

வழக்கத்திற்கும் அதிகமாக, கோடை நிலவுவதால், எதிர்காலத்தில் மழை பொழிவதற்கான எந்த கணிப்பும் இல்லாததை அடுத்து, அண்மையில் தண்ணீர் தட்டுப்பாட்டை டச்சு அரசாங்கம் (நெதர்லாந்து) அறிவித்துள்ளது. கடந்த மாதம், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பெரும் பகுதிகள் கடுமையான வெப்ப அலைகளால் தாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, புவி வெப்பமடைதலைக் கையாள்வதற்கான முனைவுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. மேலும், நெதர்லாந்தில் வறட்சி ஏற்படுவது ஒரு கடுமையான சிக்கலாக மாறக்கூடும். இதன் காரணமாக, ஆறுகளில் வறண்ட மண் படியும். இதனால், நீர் போக்குவரவுக்கு இடையூறு ஏற்படக்கூடியவையாக அமையும்.

தடுப்பூசிக்கு ஒப்புதல்

ஒமைக்ரான் திரிபுக்கான தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த முதல் நாடு?

விடை: ஐக்கிய பேரரசு (UK)

ஒமைக்ரான் திரிபுக்கு சிகிச்சையளிக்கக் கூடிய COVID தடுப்பூசியை அங்கீகரிக்கும் முதல் நாடாக UK மாறியுள்ளது. ஐக்கிய பேரரசுவின் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருள்கள் ஒழுங்குமுறை ஆணையமும், இதற்கு ஒப்புதல் அளிப்பதற்கான உலகின் முதல் நிறுவனமாகவும் ஆனது. இந்த தடுப்பூசி 18 வயது முதல் அதற்கு மேற்பட்டோருக்கு பயன்படுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்டதாகும். இது கொரோனா வைரஸின் அசல் திரிபு மற்றும் ஒமைக்ரான் BA.1 இரண்டிற்குமான தடுப்பூசியாக உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Tags:

Yesterday Current Affairs in Tamil | Current Affairs in Tamilnadu | Today Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | Current Affairs 2022 in Tamil | Current Affairs 2022 in Tamil | Exam Daily Current Affairs Tamil | Daily Current Affairs TNPSC | TN Current Affairs | Today Current Affairs in Tamilnadu | Current Affairs for TNPSC Group 4 | Exams Daily Current Affairs in Tamil | TNPSC Group 4 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்