Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் 18 & 19 – இன்றைய தினத்தின் நடப்பு நிகழ்வுகள்....!

Gowthami Subramani August 25, 2022 & 14:40 [IST]
Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் 18 & 19 – இன்றைய தினத்தின் நடப்பு நிகழ்வுகள்....!Representative Image.

Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் மாதம் 18 மற்றும் 19 ஆம் இரு தினங்களுக்கான நடப்பு நிகழ்வுகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம். மேலும், டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்களை விடைகளுடன் தெரிந்து கொள்ள நமது searcharoundweb பக்கத்தில் இணைந்திருங்கள்.

வானிலிருந்து மருத்துவம்

டிரோன் அடிப்படையிலான “வானிலிருந்து மருத்துவம்” என்ற மருத்துவ சேவையை அறிமுகப்படுத்திய மாநிலம் அல்லது யூனியம் பிரதேசம் எது?

விடை: அருணாச்சல பிரதேசம்

செப்பாவிலிருந்து, சாயாங் தாஜோவிற்கு ‘வானிலிருந்து மருத்துவம்’ என்ற டிரோன் அடிப்படையிலான மருத்துவ சேவையினை வெற்றிகரமாக அறிமுகப்படுத்திய மாநிலம் அருணாச்சல பிரதேசம் ஆகும். உலகப் பொருளாதார மன்றத்துடன் இணைந்து, உழவு, சுகாதாரம், பேரிடர் மேலாண்மை போன்றவற்றில் டிரோன் விமானங்களைப் பயன்படுத்துவதற்கான முன்னோடித் திட்டத்தை இந்த மாநில அரசு செயல்படுத்த முடிவு எடுத்துள்ளது.

பண வீக்கம்

2022 ஜூலை கணக்கின் படி, இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் எவ்வளவு?

விடை: 13.93%

கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்த ஜூலை மாதம், மொத்த விலை அடிப்ப்டையிலான பணவீக்கம் 13.93 ஆகக் குறைந்துள்ளது. அதன் படி, கடந்த ஜூன் மாதத்தில் 15.18% ஆகவும், மே மாதத்தில் 15.88% ஆகவும் பதிவானது. அதன் படி, காய்கறிகள், எரிபொருள், பால் ஆகியவற்றின் விலை குறைந்ததால், இந்த ஆண்டின் ஜூலை மாதத்தின் விலை குறைந்துள்ளது. இருந்தபோதிலும், 16 ஆவது மாதமாக, மொத்த விலை பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருந்தது.

இதற்கான காரணம் கனிம எண்ணெய்கள், கச்சா பெட்ரோலியம், அடிப்படை உலோகங்கள், இயற்கை எரிவாயு, உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றின் விலையேற்றமே காரணமாகக் கருதப்படுகிறது.

நடமாடும் பள்ளி

‘வித்யா இரதம் – நடமாடும் பள்ளி’ திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலை / யூபி எது?

விடை: அஸ்ஸாம்

அஸ்ஸாம் மாநில முதலமைச்சரான ஹிமந்த பிஸ்வா ஷர்மா, “வித்யா இரதம் – நடமாடும் பள்ளி” என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதில், சமுதாயத்தில் அடிநிலையில் உள்ள குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளுக்கு 10 மாதங்கள் தொடக்கக் கல்விக்கான அணுகலை வழங்குகிறது. மேலும் 10 மாதங்களுக்குப் பின், குழந்தைகள் வழக்கமான கல்வி முறையில் பயிற்றுவிக்கப்படுவார்கள். இந்த திட்டத்தில் மாணவர்களுக்கு இலவச மதிய உணவு, சீருடைகள், பாட நூல்கள் வழங்கப்படும்.

தேசிய பாதுகாப்பு உத்திகள் மாநாடு

தேசிய பாதுகாப்பு உத்திகள் மாநாடு – 2022 நடைபெறக்கூடிய இடம் எது?

விடை: புதுதில்லி

உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள், புது தில்லியில் இரண்டு நாள்களுக்கான தேசிய பாதுகாப்பு உத்திகள் மாநாடு – 2022-ஐத் தொடங்கி வைத்தார். இத்துடன் தேசிய தானியங்கி கைரேகை அடையாள அமைப்பையும் திறந்து வைத்தார். இதன் மூலம், தரவுத் தளத்தின் உதவியுடன் வழக்குகளை விரைவாகவும், எளிதாகவும் முடிக்கலாம்.

மந்தன் தளம்

சமீபத்தில் தொடங்கப்பட்ட மந்தன் தளத்துடன் தொடர்புடைய துறை எது?

விடை: ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம்

இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம், “மந்தன்” தளத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. தொழில்துறை மற்றும் அறிவியலாராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சுற்றுச்சூழல் அமைப்பு ஆகியவற்றுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதையே இந்த தளம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இந்தியாவில் தொழில்நுட்பம் சார்ந்த சமூக-தாக்க புத்தாக்கங்கள் மற்றும் தீர்வுகள் செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Tags:

Yesterday Current Affairs in Tamil | Current Affairs in Tamilnadu | Today Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | Current Affairs 2022 in Tamil | Current Affairs 2022 in Tamil | Exam Daily Current Affairs Tamil | Daily Current Affairs TNPSC | TN Current Affairs | Today Current Affairs in Tamilnadu | Current Affairs for TNPSC Group 4 | Exams Daily Current Affairs in Tamil | TNPSC Group 4 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்