Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் 20 & 21 – இன்றைய தினத்தின் நடப்பு நிகழ்வுகள்....!

Gowthami Subramani August 26, 2022 & 12:40 [IST]
Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் 20 & 21 – இன்றைய தினத்தின் நடப்பு நிகழ்வுகள்....!Representative Image.

Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் மாதம் 20 மற்றும் 21 ஆம் இரு தினங்களுக்கான நடப்பு நிகழ்வுகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம். மேலும், டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்களை விடைகளுடன் தெரிந்து கொள்ள நமது searcharoundweb பக்கத்தில் இணைந்திருங்கள்.

மின்-பேருந்து

இந்தியாவின் முதல், இருதளங்களைக் கொண்ட குளிர்பதன வசதி கொண்ட மின்-பேருந்து அறிமுகப்படுத்தப்பட்ட இடம்?

விடை: மும்பை

இந்தியாவின், முதல் இருதள குளிர்பதன வசதி கொண்ட மின்-பேருந்தை நடுவண் போக்குவரத்து அமைச்சர், நிதின் கட்கரி அவர்கள் மும்பையில் வைத்து அறிமுகம் செய்தார். அசோக் லேலண்டின் துணை நிறுவனமான சுவிச், சுவிச் EiV 22 என்ற இந்தியாவின் முதல் இருதள குளிர்பதன வசதி கொண்ட மின்-பேருந்தை அறிமுகம் செய்தது. இது அரை-தாழ்தளம், குளிரூட்டப்பட்ட, இருதளங்களைக் கொண்ட முதல் மின்-பேருந்து ஆகும்.

கிராமிய தொழிற்பூங்கா

கிராமிய ஆஜிவிகா பூங்காக்களை (கிராமிய தொழிற்பூங்காக்கள்) அமைப்பதாக அறிவித்துள்ள மாநில அரசு?

விடை: சத்தீஸ்கர்

சத்தீஸ்கர் மாநிலத்தில், கிராமப்புற தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும் என இந்த மாநில அரசு அறிவித்துள்ளது. காந்தி ஜெயந்தி அன்று இந்த திட்டம் தொடங்கப்படும் என முதல்வர் பூபேஷ் பாகேல் தெரிவித்துள்ளார். மேலும், இது கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்துவதையும், ‘கௌ-தான்’ (கால்நடை) வாழ்வாதார மையமாக மாற்றுவதையு நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தின் கீழ் முதல் ஆண்டில் 300 கிராமப்புற தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும். சத்தீஸ்கரில் இது போன்ற பூங்கா முதலில் கான்கர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. இதற்கு காந்தி கிராமம் எனப் பெயர் சூட்டப்பட்டது.

சர்வதேச பழங்குடிகள் நாள்

ஆண்டுதோறும் சர்வதேச பழங்குடிகள் நாள் கொண்டாடப்படும் தேதி எது?

விடை: ஆகஸ்ட் 09

ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 09 ஆம் நாள் அன்று சர்வதேச பழங்குடிகள் தினம் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டில் இந்த நாளுக்கான கருப்பொருள் “The Role of Indigenous Women in the Preservation and Transmission of Traditional Knowledge” என்பதாகும். உலகம் முழுவதும் 90 நாடுகளில் 476 மில்லியனுக்கும் அதிகமான பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த அளவு உலக மக்கள் தொகையில் 6.2% ஆகும். பழங்குடி மக்கள் தனித்துவமான கலாச்சாரம் மரபுகள் மற்றும் மொழிகள் ஆகியவற்றில் பரந்த பன்முகத் தன்மையைக் கொண்டவர்கள் ஆவார்.

உலக யானைகள் நாள்

உலக யானைகள் நாள் கடைபிடிக்கப்படும் நாள் எது?

விடை: ஆகஸ்ட் 12

உலக யானைகள் நாள் ஆகஸ்ட் 12 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினம் யானைகள் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன் படி, யானைகளுக்குச் சிறந்த பாதுகாப்பை வழங்குதல், தந்தம் சார்ந்த வணிதகத்தைத் தடுப்பது, யானைகளின் வாழ்விடத்தைப் பாதுகாப்பது, சட்டத்துக்குப் புறம்பான வேட்டையைத் தடுத்தல் உள்ளிட்ட முயற்சிகள் மேற்கொள்வதை இந்த தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

‘ஹர் கர் ஜல்’

இந்தியாவின் முதல் ‘ஹர் கர் ஜல்’ சான்று பெற்றது எந்த மாநிலம்?

விடை: கோவா

‘ஹர் கர் ஜல்’ சான்று பெற்ற நாட்டில் முதல் மாநிலமாக இருப்பது கோவா ஆகும். மேலும், தாத்ரா நகர் ஹவேலி, மற்றும் டாமன் மற்றும் டையூ போன்றவை ‘ஹர் கர் ஜல்’ சான்று பெற்ற யூனியன் பிரதேசமாக மாறியது. கடந்த 2019 ஆம் ஆண்டின் ஹல் ஜீவன் இயக்கமானது அறிவிக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் ஒவ்வொரு கிராமப்புற குடும்பங்களுகும் போதுமான அளவு, பரிந்துரைக்கப்பட்ட தரம் மற்றும் வழக்கமான மற்றும் நீண்ட கால அடிப்படையில் குடிநீர் குழாய் வழி நீரை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், நாட்டின் 10 கோடி கிராமப்புற குடும்பங்கள், குழாய்கள் மூலம் தூய நீர் வழங்கும் வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Tags:

Yesterday Current Affairs in Tamil | Current Affairs in Tamilnadu | Today Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | Current Affairs 2022 in Tamil | Current Affairs 2022 in Tamil | Exam Daily Current Affairs Tamil | Daily Current Affairs TNPSC | TN Current Affairs | Today Current Affairs in Tamilnadu | Current Affairs for TNPSC Group 4 | Exams Daily Current Affairs in Tamil | TNPSC Group 4 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்