Thu ,Apr 11, 2024

சென்செக்ஸ் 75,038.15
354.45sensex(0.47%)
நிஃப்டி22,753.80
111.05sensex(0.49%)
USD
81.57
Exclusive

Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் 29 – இன்றைய தினத்தின் நடப்பு நிகழ்வுகள்....!

Gowthami Subramani September 05, 2022 & 15:10 [IST]
Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் 29 – இன்றைய தினத்தின் நடப்பு நிகழ்வுகள்....!Representative Image.

Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் மாதம் 28 ஆம் நாளுக்கான நடப்பு நிகழ்வுகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம். மேலும், டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்களை விடைகளுடன் தெரிந்து கொள்ள நமது searcharoundweb பக்கத்தில் இணைந்திருங்கள்.

திறனூட்டுப் பயிற்சித் திட்டம்

‘சிறார்கள் பாதுகாப்பு கருவித் தொகுப்பு’ மற்றும் ‘இணையவெளிப் பாதுகாப்பு’ குறித்த திறனூட்டுப் பயிற்சித் திட்டத்தை எந்த தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்டுள்ளது?

விடை: கூகுள்

கூகுள் நிறுவனம் அதன் இரண்டாம் பதிப்பான, ‘Safer with Google’ முனைவு நிகழ்வில், சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதில் சில நாடு முழுவதும் உள்ள சுமார் 1,00,000 டெவலப்பர்கள், ஐடி மற்றும் துளிர் நிறுவல் நிபுணர்களுக்கான, ‘இணையவெளிப் பாதுகாப்பு’ மற்றும் ‘சிறார்கள் பாதுகாப்பு கருவித் தொகுப்பு’ குறித்த திறணுட்டுப் பயிற்சித் திட்டம் ஆகும்.

அடல் பாலம்

பாதசாரிகள் மற்றும் மிதிவண்டி ஓட்டுவோருக்காக 300 மீ நீளம் கொண்ட ‘அடல் பாலம்’ எந்த நகரத்தில் திறக்கப்பட்டுள்ளது?

விடை: குஜராத்

ஆமதாபாத்தில், சபர்மதி என்ற ஆற்றின் குறுக்கே பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுவோருக்காக அடல் பாலம் ஒன்றைத் திறந்து வைத்தார். இந்த அடல் பாலமானது, 300 மீ நீளம் கொண்டது. இந்த பாலம், சபர்மதி ஆற்றின் இரு கரைகளையும் புகழ்பெற்ற காத்தாடி திருவிழாவால் ஈர்க்கப்பட்ட வடிவமைப்பைக் கொண்டு இணைக்கிறது. ‘காதி உத்சவ்’ நிகழ்ச்சி நடைபெற்ற போது, இந்தப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

தேசிய மருந்து விலையிடல் ஆணையம்

எந்த நடுவண் அமைச்சகம், தேசிய மருந்து விலையிடல் ஆணையத்துடன் தொடர்புடையது?

விடை: நடுவண் இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம்

நடுவண் இரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சரான மன்சுக் மாண்டவியா, தேசிய மருந்து விலையிடல் ஆணையத்தின் வெள்ளிவிழா கொண்டாடங்களின் உரையாற்றினார். தேசிய மருந்து விலையிடல் ஆணையம் NPPA என்பது இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் மருந்தாக்கத் தொழிற்துறையின் ஓர் இணைக்கப்பட்ட அலுவலகமாகும். மேலும், இந்த ஆணையம் மருந்துகளின் விலை நிர்ணயம் மற்றும் மலிவு விலையில் மருந்துகள் கிடைப்பதை உறுதிப்படுத்தும் ஒரு தன்னாட்சி மிக்க கட்டுப்பாட்டாளராக செயல்படுகிறது.

அணுவாற்றல் சோதனைகளுக்கு எதிர்

அணுவாற்றல் சோதனைகளுக்கு எதிரான உலக நாளாக எந்த நாள் அனுசரிக்கப்படுகிறது?

விடை: ஆகஸ்ட் 29

ஐநா அவையானது, ஆகஸ்ட் மாதம் 29 ஆம் நாள், ‘அணுவாற்றல் சோதனைகளுக்கு எதிரான உலக நாளாக’ அனுசரிக்கிறது. இதன் முக்கிய நோக்கம், அணு ஆயுதங்களைச் சோதிப்பதால், ஏற்படும் பேரழிவு விளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதே ஆகும். அணுவாயுதப் பெருக்கத்தை நிறுத்துவதற்கும், இத்தகைய சோதனைகளை நிறுத்தவும் உலக அரசாங்கங்களை இந்த நிகழ்வு வலியுறுத்துகிறது. 1945 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் நாள் அமெரிக்காவால் ‘டிரினிட்டி’ எனப்படக் கூடிய முதல் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசிய விளையாட்டு நாள்

எந்த விளையாட்டு வீரரின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில், ‘தேசிய விளையாட்டு நாளானது’ கொண்டாடப்படுகிறது?

விடை: மேஜர் தியான் சந்த்

இந்தியாவின் ஹாக்கி மேதையாக விளங்கும் மேஜர் தியான் சந்தின் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில், ‘தேசிய விளையாட்டு நாள்’ கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29 ஆம் நாள் இது கொண்டாடப்படுகிறது. மேலும், இது விளையாட்டு மற்றும் உடலியல் செயல்பாடுகளை நமது அன்றாட வாழ்வில் இணைப்பதற்கான அவசியம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் 1928, 1932 மற்றும் 1936 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் மேஜர் தயான்சந்த் கலந்து கொண்டு இந்தியா தங்கப் பதக்கம் வென்றதில் முக்கிய பங்கு வகித்தவராக விளங்கினார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Yesterday Current Affairs in Tamil | Current Affairs in Tamilnadu | Today Current Affairs in Tamil | GK Today Current Affairs in Tamil | Yesterday Current Affairs | Current Affairs Today in Tamil | Current Affairs 2022 in Tamil | Current Affairs 2022 in Tamil | Exam Daily Current Affairs Tamil | Daily Current Affairs TNPSC | TN Current Affairs | Today Current Affairs in Tamilnadu | Current Affairs for TNPSC Group 4 | Exams Daily Current Affairs in Tamil | TNPSC Group 4 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்