Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,563.59
567.28sensex(0.78%)
நிஃப்டி22,313.45
189.80sensex(0.86%)
USD
81.57
Exclusive

Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் 30 & 31 – இன்றைய தினத்தின் நடப்பு நிகழ்வுகள்....!

Gowthami Subramani September 06, 2022 & 17:40 [IST]
Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் 30 & 31 – இன்றைய தினத்தின் நடப்பு நிகழ்வுகள்....!Representative Image.

Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் மாதம் 30 மற்றும் 31 ஆம் நாட்களுக்கான நடப்பு நிகழ்வுகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம். மேலும், டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்களை விடைகளுடன் தெரிந்து கொள்ள நமது searcharoundweb பக்கத்தில் இணைந்திருங்கள்.

‘இந்தியா @100’

‘இந்தியா @100’ என்ற அறிக்கை எந்த நிறுவனம் அல்லது கவுன்சிலால் வெளியிடப்பட்டது?

விடை: பொருளாதார ஆலோசனைக் குழு

‘இந்தியா @100’ என்ற போட்டித்தன்மை பெருந்திட்டம், பிரதம அமைச்சரின் பொருளாதார ஆலோசனைக் குழுவால் வெளியிடப்பட்டது. மேலும், இந்த குழுவின் தலைவராக, Dr பிபேக் தெப்ராய் இருந்தார். வரும் 2047 ஆம் ஆண்டுக்குள், அதிக வருவாய் ஈட்டக் கூடிய நாடாக இந்தியாவை திகழச் செய்வதற்கான வழிவகைகள் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போட்டித் தன்மை பெருந்திட்டம் எனக் குறிப்பிடுவது, போட்டித் தன்மைக்கான நிறுவனமான, EAC – PM மற்றும் ஹார்வர்டு வணிகப் பள்ளியின் Dr கிறிஸ்டியன் கெட்டல்ஸ் போன்றோரின் கூட்டு முனைவாக உள்ளது.

ஐ.நா கூட்டத்தொடர்

பல்லுயிர்களைக் காப்பதற்கான ஐநா கூட்டத்தொடர் எந்த நகரத்தால் நடத்தப்பட்டது?

விடை: நியூயார்க்

நியூயார்க் நகரத்தில் உள்ள ஐநா அவையின் தலைமையகத்தில், ‘பல்லுயிர்களைக் காப்பதற்கான ஐநா அமர்வு’ நடைபெற்றது. இருந்தபோதிலும், ஐநா-வின் உறுப்பு நாடுகள் 2 வார காலம் நீண்ட இந்த பேச்சு வார்த்தையை, ஆழ்கடல்களில் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கான ஒப்பந்தம் ஏதுமின்றி முடித்துக் கொண்டது. இது வளர்ந்து வரக்கூடிய சுற்றுச் சூழல் மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் ஓர் ஒப்பந்தமாகும்.

உள்நாட்டு தடுப்பூசி

கால்நடைகளில் காணப்படக் கூடிய தோல் கழலை நோய்க்கு உள்நாட்டிலேயே தடுப்பூசி ஒன்றை எந்த நிறுவனம் உருவாக்கியது?

விடை: ICAR

ICAR அல்லது இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் உழவு ஆராய்ச்சி அமைப்பின் இரண்டு நிறுவனங்கள், கால்நடைகளில் காணப்படக் கூடிய தோல் கழலை நோய்க்கு, தடுப்பூசி ஒன்றை உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே, இந்த நோய் பல்வேறு மாநிலங்களில் பரவி வந்தது. இதனால், நடுவணரசு வணிக ரீதியாக LSD தடுப்பூசியான ‘Lumpi-ProVaclnd’ என்பதை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த நோய் காரணமாக, 2000 கால்நடைகள் இராஜஸ்தான் மாநிலத்தில் இறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும், இதன் பாதிப்பு காணப்பட்டது.

வந்தே மாதரம்

‘பூரண சுயராஜ்யம்’ என்ற கொள்கை மற்றும் வந்தே மாதரம் என்ற நாளிதழுடன் தொடர்புடைய இந்திய தலைவர் யார்?

விடை: அரவிந்த கோஷ்

இந்திய தேசிய காங்கிரஸின் பிரகடனத்திற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே, 1930 ஆம் ஆண்டில், ‘பூரண சுயராஜ்யம்’என்ற கொள்கை அரவிந்த் கோஷ் என்பவரால் முதன் முதலில் பரவப்பட்டது. இவர் கடந்த 1872 ஆகஸ்ட் 15 –ல் பிறந்தார். இவருக்கு சமீபத்தில் 150 ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இவர் தனது செய்தித்தாளான, ‘வந்தே மாதரத்தில்’ விடுதலை பற்றிய எண்ணியத்தைப் பரப்பினார்.

தொற்று நோய் பரவல்

எந்த நாட்டில் லாங்யா ஹெனிபா வைரஸ் அல்லது ‘LayV’ என்ற புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது?

விடை: சீனா

சீனாவின் இரு கிழக்கு மாகாணங்களில், லாங்யா ஹெனிபா என்ற விலங்கினத்தில் இருந்து, மனிதர்களுக்குப் புதிய வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டது. அறிவியலாளர்கள் கூற்றுப் படி, இந்த வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. இத்தகைய புதிய வகை வைரஸை, லாங்யா ஹெனிபா வைரஸ் அல்லது ‘LayV’ என அழைக்கலாம். அதே சமயம், இந்த வைரஸ் ஒரு மனிதரிடம் இருந்து, இன்னொரு மனிதருக்குப் பரவுவதாக இதுவரை கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Yesterday Current Affairs in Tamil | Current Affairs in Tamilnadu | Today Current Affairs in Tamil | GK Today Current Affairs in Tamil | Yesterday Current Affairs | Current Affairs Today in Tamil | Current Affairs 2022 in Tamil | Current Affairs 2022 in Tamil | Exam Daily Current Affairs Tamil | Daily Current Affairs TNPSC | TN Current Affairs | Today Current Affairs in Tamilnadu | Current Affairs for TNPSC Group 4 | Exams Daily Current Affairs in Tamil | TNPSC Group 4 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்