Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் 5 – இன்றைய நடப்பு நிகழ்வுகள்....!

Gowthami Subramani August 11, 2022 & 18:50 [IST]
Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் 5 – இன்றைய நடப்பு நிகழ்வுகள்....!Representative Image.

Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் மாதத்தின் 5 ஆம் நாளிற்கான நடப்பு நிகழ்வுகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம். மேலும், டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் நபர்களுக்கான வினாக்கள் மற்றும் விடைகள் பற்றித் தெரிந்து கொள்ள நமது searcharoundweb பக்கத்தில் இணைந்திருங்கள்.

மிதவை சூரிய மின்னுற்பத்தி நிலையம்

எந்த மாநிலத்தில் உலகின் மிகப்பெரிய மிதவை சூரிய மின்னுற்பத்தி நிலையம் கட்டப்பட உள்ளது?

விடை: மத்திய பிரதேசம்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் அண்மையில் உலகின் மிகப்பெரிய மிதவை சூரிய மின் உற்பத்தி நிலையம் கட்டப்பட உள்ளதாக அறிவித்தது. அதன் படி, இது மத்திய பிரதேச மாநிலத்தின் கந்துவாவில் கட்டப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இதற்கான மதிப்பீட்டுத் தொகை ரூ.3,000 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது, இந்தியாவின் மிகப்பெரிய மிதவை சூரிய மின் உற்பத்தி திட்டம், NTPC ஆல், இயங்கப்பட்டு வருவதாகவும், இது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள இராம குண்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தேசிய ஒலிபரப்பு நாள்

இந்தியாவில் தேசிய ஒலிபரப்பு நாள் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

விடை: ஜூலை 23

தேசிய ஒலிபரப்பு நாள் இந்தியாவில் ஆண்டு தோறும் ஜூலை 23 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம் நம் வாழ்வில் வானொலியின் முக்கியத்துவத்தையும், அதன் தாக்கத்தையும் நினைவூட்டுவதாகும். அதிகாரப்பூர்வ நிறுவனமாக “பிரசார் பாரதி” அகில இந்திய வானொலி (AIR) மற்றும் தூர்தர்ஷன் உள்ளது. மேலும், ஆங்கிலேயர்களால் கையகப்படுத்தப்பட்ட இந்தியன் பிராட்காஸ்டிங் கம்பெனி லிட் (IBC) அகில இந்திய வானொலியாக (AIR) மாற்றப்பட்டது.

MASI

அண்மையில் இடம்பெற்ற Monitoring App for Seamless Inspection (MASI) உடன் தொடர்புடையது?

விடை: குழந்தை பராமரிப்பு நிறுவனங்களைக் கண்காணித்தல்

கடந்த 2014 ஆம் ஆண்டு, சிறப்பு தத்தெடுப்பு அல்லது காப்பு நிறுவனங்களில் 2000 குழந்தைகள் இறந்துள்ளனர் என மக்களவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சராக விளங்கிய ஸ்மிருதி இராணி பதிலளித்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு 27,085 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஒரு செயலியை உருவாக்கியது. இந்த செயலியின் பெயர் தான் குழந்தை பராமரிப்பு நிறுவனங்களைக் கண்காணிக்கும் செயலியாகும்.

E-AMIRT செயலி

இந்த செயலி தொடர்புடைய துறை எது?

விடை: மின்-வாகப் போக்குவரவு

நிதி ஆயோக் (NITI Aayog). ஐக்கிய இராஜ்ஜியத்துடன் இணைந்து மின்-வாகனப் போக்குவரவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு செயலியை அறிமுகப்படுத்தியது. அந்த செயலியே e-AMRIT ஆகும். இந்தியாவில் அதிநவீன வேதியியல் மின்கல மறு பயன்பாடு மற்றும் மறுசுழற்சி சந்தை பற்றிய அறிக்கையையும் இந்த செயலி வெளியிட்டது. நிதி ஆயோக் இந்திலாந்து அரசாங்கத்துடன் சேர்ந்து மின்-வாகனங்கள், மின்கல சேமிப்பு உள்ளிட்ட துறைகளில் கூட்டாக இணைந்து செயல்பட்டு வருகிறது.

Payment Gateway

முதன்முறையாக எந்த வங்கியின் கொடுப்பனவு நுழைவு வாயில் (Payment Gateway), வருமான வரித்துறையின் TIN 2.0 தளத்தில் இடம்பெற்றது?

விடை: பெடரல் வங்கி

வருமான வரித்துறையின் TIN 2.0 தளத்தில் பெடரல் வங்கி, அதன் கொடுப்பணவு நுழைவு வாயில் பட்டியலிட்ட இந்தியாவின் முதல் வங்கியாக மாறியுள்ளது. இது வரி செலுத்துவோர் பணம் செலுத்துவதற்கு கடன்/ பற்றட்டை, UPI, NEFT/RTGS மற்றும் இணையவழி வங்கிச் சேவை முறைமை போன்ற முறைகளைப் பயன்படுத்துகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Yesterday Current Affairs in Tamil | Current Affairs in Tamilnadu | Today Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | Current Affairs 2022 in Tamil | Current Affairs 2022 in Tamil | Exam Daily Current Affairs Tamil | Daily Current Affairs TNPSC | TN Current Affairs | Today Current Affairs in Tamilnadu | Current Affairs for TNPSC Group 4 | Exams Daily Current Affairs in Tamil | TNPSC Group 4 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்