Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் 8 – இன்றைய நடப்பு நிகழ்வுகள்....!

Gowthami Subramani August 16, 2022 & 11:40 [IST]
Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் 8 – இன்றைய நடப்பு நிகழ்வுகள்....!Representative Image.

Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் 8 அன்று நடந்த நிகழ்வுகளுக்கான குறிப்புகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம். மேலும், டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்களை, விடைகளுடன் தெரிந்து கொள்ள நமது searcharoundweb பக்கத்தில் இணைந்திருங்கள்.

டோனி போலோ வானூர்தி நிலையம்

சமீபத்தில், இடம்பெற்ற டோனி போலோ வானூர்தி நிலையம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

விடை: அருணாச்சல பிரதேசம்

அருணாச்சல பிரதேச மாநில அரசு இட்டாநகரில் கட்டப்பட்டு வரும் 3-ஆவது வானூர்தி நிலையத்திற்கு “டோனி போலோ வானூர்தி நிலையம்” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது தலைநகரில் உள்ள ஒரே விமான நிலையமாகக் கருதப்படுகிறது. அதே போல, அருணாச்சல பிரதேச மாநிலத்தைப் பொறுத்த வரை பாசிகாட் மற்றும் தேசு விமான நிலையங்களுக்குப் பிறகு, 3 ஆவது விமான நிலையமாக உள்ளது.

இந்த மாநிலத்தின் பழங்குடிகள் மொழியில் டோனி என்பதன் பொருள் ஞாயிறு என்றும், போலோ என்பதன் பொருள் திங்கள் என்பதும் ஆகும்.

கார்கில் போர்

இந்தியாவில் கார்கில் வெற்றி நாள் கொண்டாடப்படும் நாள் எது?

விடை: ஜூலை 26

பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரின் வெற்றியினை 23 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கு ஆண்டு தோறும், இந்தியா ஜூலை 26 அன்று காரில் வெற்றி நாளைக் கொண்டாடுகிறது. மேலும், 1998 ஆம் ஆண்டு எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு (LoC) வழியாக இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானியர்களுக்கு எதிராக கார்கில் போர் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, 1999 ஆம் ஆண்டு, ஜூலை 26 ஆம் நாள், இந்தியப் பகுதியில் இருந்து பாகிஸ்தான் படைகள் வெளியேற வேண்டிய கட்டாயத்தை இந்திய இராணுவம் ஏற்படுத்தியது.

 

NITI ஆயோக்

NITI ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்திற்கு தலைமை தாங்குபவர் யார்?

விடை: இந்திய பிரதமர்

NITI ஆயோக்கின் 7 ஆவது நிர்வாகக் குழு கூட்ட்டம் புது தில்லியில், பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த திட்டத்தில், பிரதமர் அதிகாரப்பூர்வ தலைவராக உள்ளார். இந்தக் கூட்டம் மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த கூட்டத்தில், மாற்றுப் பயிற்கள், எண்ணெய் வித்துக்கள், வேளாண் சமூகங்களின் தன்னிறைவை எட்டுதல், தேசிய கல்விக் கொள்கை, பருப்பு வகைகள் உள்ளிட்டவை விவாதம் பொருளில் இடம் பெற்றவையாகும்.

பால ரக்ஷா

எந்த நடுவண் அமைச்சகம் "பால ரக்ஷா" என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது?

விடை: ஆயுஷ் அமைச்சகம்

அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில், சிறார்களுக்கு தடுப்பூசி மையம், நடுவண் அமைச்சகத்தால் திறந்து வைக்கப்பட்டது. அதன் படி, நடுவண் ஆயுஷ் அமைச்சர் சர்பானந்தா சோனோ இதனைத் திறந்து வைத்தார். ஆயுர்வேதத்தின் மூலம், சிறார்களுக்கான தடுப்பு நலவாழ்வு குறித்து, பெற்றோர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த “பால ரக்ஷா” என்ற செயலியை அமைச்சர் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்த செயலி சிறார்களின் நலம் மற்றும் நோயெதிர்ப்பு ஆற்றலில் ஏற்படும் தாக்கம் குறித்து பெற்றோர்களிடமிருந்து பெறப்படும் கருத்துக்களைச் சேகரிக்க உதவுகிறது.

GST வரி விதிப்பு

பதப்படுத்தப்பட்ட மற்றும் தூய பாலுக்கு விதிக்கப்பட்டுள்ள GST எவ்வளவு?

விடை: 0%

தூய பால் மற்றும் பதப்படுத்தப்பட்ட பாலுக்கான சரக்கு மற்றும் சேவைகள் வரியில் முழுமையான விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அரசு சமீபத்தில் தெளிவுபடுத்தியது. பெட்டியில் அடைக்கப்பட்டவை தவிர வேறு வடிவங்களில் விற்கப்படும் தயிர் மற்றும் மோர் உள்ளிட்ட பிற பால் பொருள்களுக்கு GST-யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே போல, உயர் வெப்பநிலை கொண்டு பதப்படுத்தப்பட்ட, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பால் பொருள்களுக்கு 5% GST உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Yesterday Current Affairs in Tamil | Current Affairs in Tamilnadu | Today Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | Current Affairs 2022 in Tamil | Current Affairs 2022 in Tamil | Exam Daily Current Affairs Tamil | Daily Current Affairs TNPSC | TN Current Affairs | Today Current Affairs in Tamilnadu | Current Affairs for TNPSC Group 4 | Exams Daily Current Affairs in Tamil | TNPSC Group 4 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்