Mon ,Feb 26, 2024

சென்செக்ஸ் 72,743.11
-399.69sensex(-0.55%)
நிஃப்டி22,096.25
-116.45sensex(-0.52%)
USD
81.57
Exclusive

Yesterday Current Affairs in Tamil: ஜூலை 13, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்….!

Gowthami Subramani July 14, 2022 & 19:45 [IST]
Yesterday Current Affairs in Tamil: ஜூலை 13, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்….!Representative Image.

Yesterday Current Affairs in Tamil: ஜூலை மாதம் 13 ஆம் நாளிற்கான நடப்பு நிகழ்வுகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம். மேலும், இத்துடன் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்குக் கேட்கப்படும் வினாக்கள் மற்றும் விடைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இது போன்ற போட்டித் தேர்வுக்குத் தயாராகும் நபர்கள் இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ளவற்றைப் படித்துக் கொள்ள வேண்டும். தினசரி நிகழ்வுகளுக்கான வினாக்கள் மற்றும் விடைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள நமது searcharoundweb பக்கத்தில் இணைந்திருங்கள்.

மிகப்பழமையான ஒளி

சமீபத்தில் வெளியிடப்பட்ட பிரபஞ்ச வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்ட மிகப்பழமையான ஒளியானது கீழ்க்காணும் எந்த தொலைநோக்கி மூலம் பிடிக்கப்பட்டது?

விடை: ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி

இந்த தொலைநோக்கி மூலம், எடுக்கப்பட்ட படத்தை அமெரிக்க அதிபர் பைடன் அவர்கள் வெளியிட்டார். இது 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்ச வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்ட மிகப்பழமையானதுமான ஒளியாகும். இந்தப் படம் ‘SMACS 0723’ என அழைக்கப்படுகிறது. இது பூமியின் தென் அரைக்கோளத்திலிருந்து தெரியும் வானின் ஒரு பகுதியாக உள்ளது.

ஆற்றல் பரிமாற்றகம்

சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்தியாவின் மூன்றாவது மற்றும் மிக சமீபத்திய ஆற்றல் பரிமாற்றகம் எது?

விடை: ஹிந்துஸ்தான் ஆற்றல் பரிமாற்றகம்

இந்த ஹிந்துஸ்தான் ஆற்றல் பரிமாற்றகம் (HPX), நாட்டில் 3-ஆவது ஆற்றல் பரிமாற்றகமாக தொடங்கப்பட்டது. இது. BSE மற்றும் ஆற்றல் வர்த்தக கழகத்தால் (PTC) ஆதரிக்கப்படுகிறது. PTC இந்தியா மற்றும் BSE முதலீடுகள் ஹிந்துஸ்தான் ஆற்றல் பரிமாற்றகத்தில் தலா 25%-ஐ வைத்திருக்கின்றன. அதே சமயத்தில் 9.9%-ஐ ஐசிஐசிஐ வங்கி வைத்திருக்கிறது. மேலும், நாட்டின் மற்ற இரண்டு பரிமாற்றகங்கள் பவர் எக்சேஞ்ச் ஆஃப் இந்தியா லிமிடெட் (PXIL) மற்றும் இந்திய எரிசக்தி பரிமாற்றகம் (IEX). IEX ஆனது மொத்த வர்த்தக ஆற்றலில் ஏறக்குறைய 98% அளவுக்கு ஏகபோக உரிமையைக் கொண்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை

‘உலகின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை’ என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

விடை: ஐக்கிய நாடுகள்

உலக உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை – 2022 அறிக்கையானது ஐநா முகமைகளான FAO, IFAD, UNICEF, WFP மற்றும் WHO போன்றவற்றால் வெளியிடப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை 2019-2021-ல் 224.3 மில்லியனாகக் குறைந்துள்ளது. மேலும், உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் இரத்த சோகை அதிக உள்ள பெண்கள் மற்றும் அதிக பருமனான பெரியவர்கள் அதிகமாக உள்ளனர் என்றும் இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

உச்சி மாநாடு

இந்த 2022 ஆம் ஆண்டு G-7 உச்சிமாநாட்டை நடத்தும் நாடு எது?

விடை: ஜெர்மனி

ஜி7 நாடுகளின் குழுவிடம் பிரதமர் நரேந்திர மோடி, தூய எரிசக்தி தொழில்நுட்பங்களுக்கான இந்தியாவின் வளர்ந்து வரும் சந்தையில் முதலீடு செய்வது குறித்து பரிசீலிக்குமாறு வலியுறுத்தினார். ஜெர்மனியில் நடந்த 2022 ஆம் ஆண்டின் உச்சி மாநாட்டில், வேர்மனியின் சான்சிலர் ஓலாஃப் ஸ்சகால்ஸால் அலைக்கப்பட்ட பின்னர், இந்தியாவின் சார்பாக நரேந்திர மோடி பங்கேற்றார். இதில், அர்வேன்டினா, வசனகல், இந்சதாசனசியா மற்றும் தென்னாப்பிரிக்க உள்ளிட்ட நாடுகளும் இந்த மாநாட்டில் பங்காளர் நாடுகளாக கலந்து கொண்டன.

வாழும் நிலங்கள் சாசனம்

சமீபத்தில் இடம்பெற்ற வாழும் நிலங்கள் சாசனம் என்பதுடன் தொடர்புடைய உலகளாவிய அமைப்பு?

விடை: காமன்வெல்த் நாடுகள்

இந்த 2022 ஆம் ஆண்டின் காமன்வெல்த் கூட்டமைப்பில் ருவாண்டாவின் கிகாலியில் காமன்வெல்த் தலைவர்கள் கூட்டத்தின் முடிவில், 54 காமன்வெல்த் உறுப்பினர்களும் “வாழும் நிலங்கள் சாசனத்தை” ஏற்றுக் கொண்டுள்ளனர். அதன் படி, நிலச்சீரழிலெத் தடுத்து நிறுத்துதல், காலநிலை மாற்றம், பல்லுயிர் இைப்பு மற்றும் நிலலயான சமலாண்லமக்கு எதிராகவும் உறுப்புநாடுகள் வசயல்பட செண்டும உள்ளிட்டவற்றிற்கு கட்டுப்பாடற்ற ஒப்பந்தம் கட்டளையிடுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Current Affairs in Tamilnadu | Today Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | Current Affairs 2022 in Tamil | Yesterday Current Affairs in Tamil | Current Affairs 2022 in Tamil | Exam Daily Current Affairs Tamil | Daily Current Affairs TNPSC | TN Current Affairs | Today Current Affairs in Tamilnadu | Current Affairs for TNPSC Group 4 | Exams Daily Current Affairs in Tamil | TNPSC Group 4 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்