Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Yesterday Current Affairs in Tamil: ஜூலை 14, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்….!

Gowthami Subramani July 15, 2022 & 19:00 [IST]
Yesterday Current Affairs in Tamil: ஜூலை 14, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்….!Representative Image.

Yesterday Current Affairs in Tamil: ஜூலை மாதம் 14 ஆம் நாளின் நடப்பு நிகழ்வுகளைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம். மேலும், போட்டித் தேர்வுகளில் கேட்கப்பட்டும் வினாக்கள், விடைகளுடன் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

தொழில்துறை உற்பத்தி குறியீடு

தொழில்துறைக்கான உற்பத்திக் குறியீட்டு வெளியீட்டுத் தரவை வெளியிடுகிற நிறுவனம் எது?

விடை: தேசிய புள்ளியியல் அலுவலகம்

தேசிய புள்ளியியல் அலுவலகம், புள்ளியியல், மட்டும் திட்ட செயலாக்க அமைச்சகத்தின் கீழ், தொழில்துறைக்கான உற்பத்தி குறியீட்டு (IIP) வளர்ச்சித் தரவை வெளியிடுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 7.1% ஆக இருந்த IIP வளர்ச்சி, மே மாதத்தில் 19.6% ஆக உயர்ந்துள்ளது.  

வாழ்க்கைச் செலவு நெருக்கடி

“வளரும் நாடுகளில் வாழ்க்கைச் செலவு நெருக்கடி” என்ற அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

விடை: UNDP

“வளரும் நாடுகளில் வாழ்க்கைச் செலவு நெருக்கடி” என்ற அறிக்கையை ஐ.நா வளர்ச்சித் திட்டம் வெளியிட்டது. இது இந்தியாவில் வறுமையின் மீது பணவீக்கம் மிகக்குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தும் என்பதை காட்டுகிறது. இந்த அறிக்கையின் படி, இலக்கு வழங்கல்கள் விலைவாசி உயர்வைச் சமாளிக்க ஏழைக்குடும்பங்களுக்கு உதவுவதாக உள்ளன. இந்தியாவில் PMGKY மற்றும் PMGKAY மூலம் பாதிக்கப்பட கூடியவர்களுக்கு உணவு மற்றும் ரொக்கத்தினை சரியான நேரத்திற்குள்ளாக வழங்கியுள்ளது.

புதிய வர்த்தக வழித்தடம்

புதிய வர்த்தக வழித்தடத்தைப் பயன்படுத்தி, ரஷ்ய பொருள்களை இந்தியாவுக்குக் கொண்டு வரத் தொடங்கிய நாடு எது?

விடை: ஈரான்

ரஷ்ய பொருள்களை இந்தியாவுக்குப் பரிமாற்றம் செய்ய புதிய வர்த்தக வழித்தடத்தைப் பயன்படுத்தும் நாடு ஈரான் ஆகும். இது, வட ஐரோப்பா, காசகஸ் முதல் கனிமவளம் நிறைந்த மத்திய ஆசியா வரை பாகிஸ்தானைத் தொடாமல் இந்தியா எளிதாகக் கடந்து செல்வதற்கு இது வழிவகுக்கிறது. அதன் படி, ஈரான் வழியாக 7,200 கி.மீ நீள நிலுவையில் உள்ள இந்த போக்குவரத்து வழித்தடம் ரஷ்ய-இந்தியா இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுத்துறை நிறுவனங்கள்

இந்தியாவில், பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

விடை: V. கிருஷ்ணமூர்த்தி

சமீபத்தில் இந்திய எஃகு கழகம் (SAIL), தற்போது மாருதி சுசுகி என அழைக்கப்படும் மாருதி உத்யோக், மற்றும் பாரத் மிகுமின் நிறுவனம் போன்ற பொதுத் துறை நிறுவனங்களின் முன்னாள் தலைவராக இருந்த டாக்டர் V. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சமீபத்தில் காலமானார். இவர் பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை எனக் கருதப்படுகிறார். மேலும், இவர் இந்திய அரசாங்கத்தின் தொழில்துறை செயலர் மற்றும் திட்டக்குழு உறுப்பினர் மற்றும் பல பிரதமரின் குழுக்களிலும் பணியாற்றினார். இவரது சேவைகளுக்காக பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகளும் வழங்கப்பட்டன.

விவசாய மற்றும் தோட்டக்கலை அமைச்சர்களின் தேசிய மாநாடு

மாநில விவசாய மற்றும் தோட்டக்கலை அமைச்சர்களின் தேசிய மாநாடு நடைபெறும் இடம் எது?

விடை: பெங்களூரு

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 2 நாட்கள் நடைபெறும் ‘மாநில விவசாய மற்றும் தோட்டக்கலை அமைச்சர்களின் தேசிய மாநாடு’ தொடங்கியது. மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்டிர சிங் தோமர், இ-நாம் கீழ், “Platform of Platforms (PoPs)” தொடங்கினார். ‘விடுதலை அமுதப் பெருவிழாவின்’ ஒரு பகுதியாக வேளாண்மை மற்றும் விவசாயிகளின் நலத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

சில்லறை பணவீக்க விகிதம்

இந்த ஜூன் 2022-ல் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட சில்லறை பணவீக்க விகிதம் எவ்வளவு?

விடை: 7.01%

சமீபத்தில் NSO வெளியிட்டுள்ள தரவுகளின் படி, உணவுப் பணவீக்கத்தின் மிதமான காரணத்தால் மே 2022-ல் 7.04% ஆக இருந்த சில்லறை பணவீக்கம் ஜூன் மாதத்தில் 7.01% ஆக குறைந்துள்ளது. அதன் படி, பணவீக்க விகிதம் தொடர்ந்து 3-ஆவது மாதமாக 7% மேல் தொடர்ந்து இருந்தது. மேலும், இது இந்திய ரிசர்வ் வங்கியின் இலக்கான 2+/-4%-ஐ விட அதிகமாகும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Current Affairs in Tamilnadu | Today Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | Current Affairs 2022 in Tamil | Yesterday Current Affairs in Tamil | Current Affairs 2022 in Tamil | Exam Daily Current Affairs Tamil | Daily Current Affairs TNPSC | TN Current Affairs | Today Current Affairs in Tamilnadu | Current Affairs for TNPSC Group 4 | Exams Daily Current Affairs in Tamil | TNPSC Group 4 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்