Sun ,Mar 03, 2024

சென்செக்ஸ் 73,806.15
60.80sensex(0.08%)
நிஃப்டி22,378.40
39.65sensex(0.18%)
USD
81.57
Exclusive

Yesterday Current Affairs in Tamil: ஜூலை 15, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்….!

Gowthami Subramani [IST]
Yesterday Current Affairs in Tamil: ஜூலை 15, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்….!Representative Image.

Yesterday Current Affairs in Tamil: ஜூலை மாதம் 15 ஆம் நாளின் நடப்பு நிகழ்வுகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம். டிஎன்பிஎஸ்சி மற்றும் இன்னும் சில போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் சில வினாக்கள் மற்றும் விடைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள நமது searcharoundweb பக்கத்தில் இணைந்திருங்கள்.

I2U2 குழுமம்

I2U2 குழுமத்துடன் தொடர்புடைய நாடுகள் எவை?

விடை: இந்தியா-இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம்- அமெரிக்கா

கடந்த 2021 அக்டோபர் மாதம், நான்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பின் போது ‘I2U2’ (இந்தியா-இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம்-அமெரிக்க ஐக்கிய நாடுகள்) குழுவானது கருத்தாக்கப்பட்டது. பிரதமர் மோடி தனக்கு நிகரான இஸ்ரேலிய பிரதிநிதியான யாயர் லாபிட், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஆகியோருடன் முதல் ‘I2U2’ தலைவர்களின் மெய்நிகர் உச்சி மாநாட்டில் பங்கேற்றார்.

HEAT

DRDO-ஆல் சமீபத்தில் சோதனை செய்யப்பட்ட High-speed Expandable Aerial Target (HEAT)-ன் பெயர் என்ன?

விடை: அப்யாஸ்

இந்தியா, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ‘அப்யாஸ்’ என்னும் High-speed Expandable Aerial Target (HEAT)-ஐ வெற்றிகரமாக பரிசோதித்தது. ஒடிஸாவின் சந்திப்பூரில் இந்த சோதனை ஒருங்கிணைந்த சோதனை வரம்பில் இராணுவ ஆய்வு மற்றும் வளர்ச்சி அமைப்பால் (DRDO)  நடத்தப்பட்டது. இதற்கு முன், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையை இராணுவமும், DRDO-ம் வெற்றிகரமாக பரிசோதித்தது.

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2022

U23 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2022-ல் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் யார்?

தீபக் புனியா

U23 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2022, கிரிகிஸ்தானின் பிஷ்கெக்கில் நடைபெற்றது. இதில், 86 கிலோ ‘ப்ரீஸ்டைல்’ எடைப்பிரிவில் தீபக் புனியா வெண்கலம் வென்றார். இவருடைய வயது 23. இருபத்து மூன்று (23) வயதுக்கு உட்பட்டோருக்கான இந்தப் போட்டியில் இந்தியா 10 தங்கப்பதக்கங்கள் உட்பட மொத்தம் 25 பதக்கங்களை வென்றது.

நல்வாழ்வுத் துறைக்கு உதவுதல்

இந்தியாவின் நல்வாழ்வுத் துறைக்கு உதவும் நோக்கில் தலா $500 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான இரண்டு கடன்களை அறிவித்துள்ள நிறுவனம் எது?

விடை: உலக வங்கி

உலக வங்கி, இந்தியாவின் நல்வாழ்வுத்துறைக்கு உதவும் நோக்கத்தில் தலா 500 மில்லியன் டாலர்கள் மதிப்புகொண்ட இரண்டு கூடுதல் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. தலா $500 மில்லியன் டாலர்கள் அதாவது $1 பில்லியன் டாலர் நிதியுதவியின் மூலம், இந்தியாவின் முதன்மையான பிரதம மந்திரி-ஆயுஷ்மான் பாரத் சுகாதார உட்கட்டமைப்பு இயக்கத்திற்கு உதவ முடியும். இந்த இரண்டு கடன்களுள் ஒன்று தமிழ்நாடு, கேரளா, மேகாலயா, ஒடிசா, ஆந்திரப்பிரதேசம், பஞ்சாப், உத்திரபிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களுக்கு அளிக்கப்படும்.

தம்மசக்கா நாள்

நடுவண் கலாச்சார அமைச்சகமானது 2022 – ‘தம்மசக்கா நாள்’ கொண்டாட்டங்களை எந்த நகரத்தில் நடத்தியது?

விடை: சாரநாத்

உத்திரபிரதேசம் மாநிலம் சாரநாத்தில், 2022 ஆம் ஆண்டு தம்மசக்கா நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில், இந்திய குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அதில், இந்தியாவின் கலாச்சார அமைச்சகம், பன்னாட்டு பௌத்த கூட்டமைப்புடன் இணைந்து அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக ‘ஆஷாத பூர்ணிமா’ நாளைக் கொண்டாடுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Current Affairs in Tamilnadu | Today Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | Current Affairs 2022 in Tamil | Yesterday Current Affairs in Tamil | Current Affairs 2022 in Tamil | Exam Daily Current Affairs Tamil | Daily Current Affairs TNPSC | TN Current Affairs | Today Current Affairs in Tamilnadu | Current Affairs for TNPSC Group 4 | Exams Daily Current Affairs in Tamil | TNPSC Group 4 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்