Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Yesterday Current Affairs in Tamil: ஜூலை 21, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்....!

Gowthami Subramani July 25, 2022 & 16:35 [IST]
Yesterday Current Affairs in Tamil: ஜூலை 21, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்....!Representative Image.

Yesterday Current Affairs in Tamil: இந்தப் பதிவில், ஜூலை மாதம் 21 ஆம் நாளிற்கான நடப்பு நிகழ்வுகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

சர்வதேச நிலவு நாள்

ஆண்டுதோறும், சர்வதேச நிலவு நாள் கொண்டாடப்படும் தேதி

விடை: ஜூலை 20

ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 20 ஆம் நாள் சர்வதேச நிலவு நாளாகக் கொண்டாடப்படுவதற்கு ஐக்கிய நாடுகள் பொது அவை அறிவித்தது. கடந்த 1969 ஆம் ஆண்டில் நிலவில் மனிதர்கள் முதல் முறையாக இறங்கிய நாளைக் கொண்டாடுவதற்கே இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. 1969 ஜூலை 20 ஆம் நாள் 11 செயற்கைக்கோள்கள் நிலவில் தரையிரங்கியது. இதில், நீல் ஆம்ஸ்ட்ராங்கைப் பின் தொடர்ந்து 19 நிமிடங்கள் கழித்து எட்வின் ஆல்ட்ரின் நிலவில் தரையிரங்கினார். இவர்கள் சுமார் 2½ மணி நேரம் விண்கலத்திற்கு வெளியே இருந்தனர்.

ஒழுங்குமுறை கூட்டமைப்பு

ரிசர்வ் வங்கி, எந்த நிறுவனங்களுக்கான நான்கு அடுக்கு ஒழுங்கு முறை கட்டமைப்பை ஏற்றுக் கொண்டுள்ளது.

விடை: நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள்

இந்திய ரிசர்வ் வங்கி நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கு எளிமையான நான்கு அடுக்கு ஒழுங்குமுறை கட்டமைப்பை ஏற்பதற்கு முடிவு செய்துள்ளது. இது வைப்புத் தொகைகளின் அளவை அடிப்படையாகக் கொன்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் NS விஸ்வநாதன் தலைமையிலான நிபுணர் குழு, இந்த நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளை வலுப்படுத்த பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது.

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்

15 வயதுக்குட்பட்ட ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்-ல் இந்தியாவின் நிலை

விடை: 3-ஆவது

15 வயதுக்குட்பட்ட ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்-ல் ஈரான் ஆசிய பட்டத்தை வென்றது. கஜகஸ்தான் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இந்தியா 172 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் உள்ளது. இதில், இந்திய அணி 2 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை வென்றது.

உலக ஜீனோசிஸ் நாள்

ஒவ்வொரு ஆண்டும் எந்த தினம் உலக ஜீனோசிஸ் நாளாகக் கருதப்படுகிறது.

விடை: ஜூலை 06

ஜூனோடிக் என்பது நோய்கள் விலங்குகளில் தோன்றி மனிதர்களுக்குப் பரவுவதாகும். உலக ஜூனோசிஸ் நாள் ஆண்டு தோறும் ஜூலை 6 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவும் தொற்றுநோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகக் கடைபிடிக்கப்படுகிறது. 1885 ஜூலை 6 ஆம் நாள் முதன் முதலாக ரேபிஸ் தடுப்பூசியை வெற்றிகரமாக செலுத்திய பிரெஞ்சு உயிரியலாளர் லூயி பாஸ்டரின் நினைவாக இது கொண்டாடப்படுகிறது.

தேசிய தரநிர்ணயக் கூட்டமைப்பு

சமீபத்தில் திறன்மேம்பாட்டு ஆணையமானது எந்த நிறுவனங்களுக்காக தேசிய தரநிர்ணயக் கூட்டமைப்பை உருவாக்கியது?

விடை: குடிமைப்பணிகள் பயிற்சி நிறுவனங்கள்

தேசிய தரநிர்ணயக் கூட்டமைப்பு (National Standards of Civil Service Training Institutions - NSCSTI) குடிமைப் பணிகள் பயிற்சி நிறுவனகளுக்காக, தொடங்கப்பட்டது. இதனை நடுவண் அறிவியல் & தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் Dr.ஜிதேந்திர சிங் தொடக்கி வைத்தார். மேலும், இந்த பயிற்சி நிறுவனங்களுக்கான தரநிர்ணயித்தை உருவாக்க தரநிலைகள், திறன் மேம்பாட்டு ஆணையத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Yesterday Current Affairs in Tamil | Current Affairs in Tamilnadu | Today Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | Current Affairs 2022 in Tamil | Current Affairs 2022 in Tamil | Exam Daily Current Affairs Tamil | Daily Current Affairs TNPSC | TN Current Affairs | Today Current Affairs in Tamilnadu | Current Affairs for TNPSC Group 4 | Exams Daily Current Affairs in Tamil | TNPSC Group 4 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்