Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Yesterday Current Affairs in Tamil: ஜூலை 23 & 24, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்....!

Gowthami Subramani July 29, 2022 & 10:05 [IST]
Yesterday Current Affairs in Tamil: ஜூலை 23 & 24, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்....!Representative Image.

Yesterday Current Affairs in Tamil: ஜூலை 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாள்களிற்கான நடப்பு நிகழ்வுகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம். மேலும், டிஎன்பிஎஸ்சி மற்றும் போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்கள், விடைகளுடன் தெரிந்து கொள்ள நமது searcharoundweb என்ற பக்கத்தில் இணைந்திருங்கள்.

பிரதமர் வய வந்தனா யோஜனா

பிரதமரின் வய வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகள் யார்?

விடை: மூத்த குடிமக்கள்

இந்தத் திட்டம் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 21 அன்று தொடங்கப்பட்டது. இந்த ஆண்டுடன் இந்த திட்டம் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்தது. இத்திட்டத்தின் கீழ், 60 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் மொத்தமாக முதலீடு செய்வதோடு மாதாந்திர அல்லது ஆண்டு முறையில் ஓய்வூதியம் பெறலாம். PMVVY ஆனது 2023 மார்ச் 31 ஆம் நாள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டின் திருத்தமானது, 2020-21 ஆம் ஆண்டிற்கு ஆண்டுக்கு 7.40% என நிச்சயமான வருவாய் விகிதத்தை அனுமதிக்கிறது.

வளர்ச்சி கணிப்பு

ஆசிய வளர்ச்சி வங்கியின் சமீபத்திய மதிப்பீட்டின் படி, 2022-23 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் வளர்ச்சி கணிப்பு என்ன?

விடை: 7.2%

ஆசிய வளர்ச்சி வங்கி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 7.2% ஆக கணித்துள்ளது. எதிர்பாராத வகையில் ஏற்பட்ட அதிக அளவிலான பண வீக்கம் மற்றும் பண இறுக்கமே இதற்கு முக்கிய காரணங்களாக அமையும். 2023-24 ஆம் ஆண்டிற்கான GDP வளர்ச்சி மதிப்பீடு முன்னராக மதிப்பிடப்பட்ட மதிப்பான 8%-லிருந்து, 7.8% ஆக குறைத்துள்ளது.

தேசிய கொடி நாள்

இந்தியாவில் ‘தேசிய கொடி நாள்’ என கொண்டாடப்படும் நாள் எது?

விடை: ஜூலை 22

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 22 ஆம் நாள் அன்று இந்தியா தேசிய கொடி நாளைக் கொண்டாடுகிறது. கடந்த 1947 ஆம் ஆண்டு இதே நளில் நமது தேசிய கொடியை இந்திய அரசியலமைப்பு அவையின் உறுப்பினர்கள், கூடிய போது, தேசியக் கொடியை ஏற்றுக்கொள்வதற்கான தீர்மானத்தை ஜவஹர்லால் நேருவின் தீர்மானத்தை அந்த அவையின் சட்டசபை முதலில் விவாதித்தது.

டிஜிவானி கால் சென்டர்

நாஸ்காம் அமைத்த ‘டிஜிவானி கால் சென்டருக்கு’ நிதியளிக்கும் தொழில்நுட்ப நிறுவனம் எது?

விடை: கூகுள்

பெண் விவசாயிகள் தங்கள் வணிகத்தை அதிகரிக்க உதவ, நாஸ்காம் அறக்கட்டளை, “டிஜிவானி கால் சென்டர்” என்ற அழைப்பு மையத்தை அமைத்துள்ளது. இது இலாப நோக்கமற்ற இந்திய வேளாண் வணிக வல்லுநர் சங்கத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், உத்தரபிரதேசம், பீகார், ஹரியானா, மற்றும் இராஜஸ்தான் போன்ற 6 மாநிலங்களிலுள்ள 20,000 கிராமப்புற பெண் தொழில்முனைவோரைச் சென்றடைவதற்கான திட்டமாகும். இத்திட்டத்திற்கு கூகுள் நிறுவனம் நிதியளிக்கிறது.

தேசிய மாநாடு

சமீபத்தில் இந்திய அரசாங்கம் எந்தப் பழம் குறித்து, ‘தேசிய மாநாட்டை’ ஏற்பாடு செய்தது?

விடை: டிராகன் பழம்

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் “டிராகன் பழ தேசிய மாநாட்டை” ஏற்பாடு செய்தது. நடுவணரசு இதற்கான தேசிய மாநாட்டை ஏற்பாடு செய்ததற்கான காரணம் டிராகன் பழத்தை சாகுபடி செய்ய ஊக்குவிப்பதாகும். இது சூப்பர் பழம் எனவும் அழைக்கப்படுகிறது. இதற்கான சாகுபடியை ஐந்தாண்டுகளில் 50,000 ஹெக்டேராக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், குஜராத், ஹரியானா மாநில அரசுகள் இந்த டிராகன் பழங்களைப் பயிரிடுவதற்கு ஏற்கனவே ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Yesterday Current Affairs in Tamil | Current Affairs in Tamilnadu | Today Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | Current Affairs 2022 in Tamil | Current Affairs 2022 in Tamil | Exam Daily Current Affairs Tamil | Daily Current Affairs TNPSC | TN Current Affairs | Today Current Affairs in Tamilnadu | Current Affairs for TNPSC Group 4 | Exams Daily Current Affairs in Tamil | TNPSC Group 4 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்