Thu ,Nov 07, 2024

சென்செக்ஸ் 80,378.13
901.50sensex(1.13%)
நிஃப்டி24,484.05
270.75sensex(1.12%)
USD
81.57
Exclusive

Yesterday Current Affairs in Tamil: ஜூலை 25, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்....!

Gowthami Subramani July 31, 2022 & 20:20 [IST]
Yesterday Current Affairs in Tamil: ஜூலை 25, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்....!Representative Image.

Yesterday Current Affairs in Tamil: ஜூலை மாதம் 25 ஆம் நாளிற்கான நடப்பு நிகழ்வுகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம். மேலும், டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளுக்கு எதிர்பார்க்கப்படும் வினாக்களை விடைகளுடன் தெரிந்து கொள்ள நமது searcharoundweb பக்கத்தில் இணைந்திருங்கள்.

உலக தடகள சாம்பியன்ஷிப்

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் எந்தப் பதக்கம் வென்றார்?

விடை: வெள்ளி

2022 ஆம் ஆண்டு ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா, உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்ற 2-ஆவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்று மற்றொரு வரலாற்றைப் படைத்துள்ளார். மூத்த நீளந்தாண்டுதல் வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்பதால், நீரஜ் சோப்ரா முதல் தடகள வீரர் ஆனார். ஈட்டியெறிதல் இறுதிப் போட்டியில் நீரஜ் 88.13மீ தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

இ-FIR அமைப்பு

எந்த மாநில காவல்துறை இ-FIR அமைப்பை அறிமுகப்படுத்தியது?

விடை: குஜராத்

குஜராத் மாநில காவல்துறையின் இ-FIR அமைப்பை காந்திநகரில் நடுவண் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இந்த அமைப்பு, குடிமக்கள், காவல் நிலையங்களுக்குச் செல்லாமல், இணைய முறையிலே FIR பதிவு செய்ய உதவும். அதன் படி, குஜராத் மாநில காவல்துறையின் அனைத்து முக்கிய சேவைகளும் இணைய வழியில் கிடைக்கப்பெறும். FIR பதிவு செய்த 48 மணி நேரத்திற்குள்ளேயே, புகார் கொடுத்த நபரை காவல்துறை நேரடியாக தொடர்பு கொள்ளும்.

பன்னாட்டு செலவாணி நிதியம்

‘முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர்களின் குழுமத்தில்’ இடம்பெற்ற முதல் பெண்மணி யார்?

விடை: கீதா கோபிநாத்

பன்னாட்டு செலவாணி நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநரான கீதா கோபிநாத், IMF-ன் “முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர்களின் குழுமத்தில்” இடம்பெற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவர் 2003-2006 ஆம் ஆண்டின் இடையில் பொருளாதார நிபுணராகவும், ஆராய்ச்சி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இரகுராம் இராஜனுக்குப் பிறகு இந்தச் சாதனையை நிகழ்த்திய இரண்டாவது இரண்டாவது இந்தியர் ஆவார்.

ஸ்த்ரீ நிதி

“ஸ்த்ரீ நிதி” என்பது எந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்துடன் தொடர்புடைய திட்டம்?

விடை: தெலுங்கானா

ஸ்திரீ நிதி மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுமார் ரூ.3700 கோடி கடன் வழங்கும் திட்டத்தை தெலுங்கானா மாநிலத்தில் உள்ளது. இது கடந்த ஆண்டை ஒதுக்கீட்டை விட சுமார் ரூ.600 கோடி அதிகம் ஆகும். அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிட்டுள்ள படி, கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ.14,750 கோடியை மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தொழில்களை அமைப்பதற்காக தெலுங்கானா மாநில அரசாங்கம் செலவிட்டுள்ளது.

தேசிய மீன் விவசாயிகள் நாள்

எந்த தினத்தில் தேசிய மீன் விவசாயிகள் நாள் கொண்டாடப்படுகிறது?

விடை: ஜூலை 10

நாடு முழுவதும், மீனவர்கள் மற்றும் மீன் விவசாயிகளுக்கிடையேயான ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக ஆண்டு தோறும் ஜூலை மாதம் 10 ஆம் நாள் தேசிய மீன் விவசாயிகள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Yesterday Current Affairs in Tamil | Current Affairs in Tamilnadu | Today Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | Current Affairs 2022 in Tamil | Current Affairs 2022 in Tamil | Exam Daily Current Affairs Tamil | Daily Current Affairs TNPSC | TN Current Affairs | Today Current Affairs in Tamilnadu | Current Affairs for TNPSC Group 4 | Exams Daily Current Affairs in Tamil | TNPSC Group 4 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்