Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

11 ம் வகுப்பு மாணவன் கோவில் பூசாரியா? சத்தியமங்கலம் அருகே வினோத திருவிழா..

Nandhinipriya Ganeshan October 10, 2022 & 14:12 [IST]
11 ம் வகுப்பு மாணவன் கோவில் பூசாரியா? சத்தியமங்கலம் அருகே வினோத திருவிழா..Representative Image.

சத்தியமங்கலத்தையடுத்த அரியப்பம்பாளையம் அருகே புதுகொத்துக்காடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற வீரமாத்தி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு 8 வருடத்திற்கு ஒருமுறை பூசாரி தேர்ந்தெடுக்கும் வினோத திருவிழா நடைபெறுவது வழக்கம். 

அந்தவகையில் தற்போதுள்ள பூசாரி தேர்ந்தெடுக்கப்பட்டு 8 ஆண்டுகள் முடிவந்ததையடுத்து, புது பூசாரியை தேர்ந்தெடுப்பதற்காக அந்த பகுதி மக்கள் முடிவு செய்தனர்.

இதையடுத்து பூசாரியை தேர்ந்தெடுக்க சில விதிமுறைகளை வழக்கம்போல் ஊர் பொதுமக்கள் அறிவித்தனர். அதன்படி, பூசாரி தேர்ந்தெடுக்கும் அந்த குறிப்பிட்ட நாளில் ஊர் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் கோவிலுக்கு வந்து விழாவில் கலந்து கொள்ள வேண்டும். 

அப்போது பக்தர்களில் யாருக்காவது சாமி வந்தால் அவர் தீச்சட்டியை எடுத்து கோவிலை வலம் வரவேண்டும். தீச்சட்டியை கையில் இருந்து கீழே போட்டுவிட்டால் கோவிலுக்கு 3 லட்சம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்பதும் கோவிலின் கட்டுப்பாடு. 

இதையடுத்து நேற்று மதியம் 1 மணியளவில் கோவில் பூசாரியை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் சாமி வந்துவிட்டது. பிறகு அச்சிறுவனுக்கு தீச்சட்டி கொடுக்கப்பட்டது. அச்சிறுவனும் கையில் தீச்சட்டியை எடுத்துக்கொண்டு கீழே போடாமல் கோவிலை சுற்றி வலம் வந்தார். 

இதைக்கண்ட அப்பகுதி மக்கள் வியந்த அந்த 16 வயது சிறுவனை பூசாரியாக ஏற்றுக் கொண்டனர். அடுத்த 8 வருடத்திற்கு கோவில் பூசாரியாக இச்சிறுவன் தான் இருப்பார் என கூறப்படுகிறது. இந்த வினோதமான நிகழ்ச்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்