Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கெங்கவல்லி அருகே 3,000 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

Surya Updated:
கெங்கவல்லி அருகே 3,000 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி கண்டுபிடிப்புRepresentative Image.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே தெடாவூரில் 3000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி, போர்க்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கெங்கவல்லி அருகே உள்ள தெடாவூர் மலை அடிவாரத்தில் உள்ள நிலப்பகுதியில் பொக்லைன் வண்டி மூலம் வாய்க்கால் அமைக்கும் பணியின் போது 3,000 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி மற்றும் கலயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு முதுமக்கள் தாழி உடைந்த நிலையிலும், அதனுள் சில மண் கலயங்கள், மண்ணால் ஆன தட்டுகள், இரும்பால் ஆன இரண்டு குறுவாட்கள் ஆகியவை இருந்தன. கருப்பு, சிகப்பு வண்ணங்களில் இந்த கலயங்கள் காணப்பட்டன. கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி சேலம் தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டால், மேலும் பல அரிய தகவல்கள் கிடைக்கும் என கல்வெட்டு ஆராய்ச்சியாளர் பொன் வெங்கடேசன் என்பவர் தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்