Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

64 பைரவர்களும் ஒரே இடத்தில்.. ஆசியாவிலேயே பெரிய பைரவர் கோவில் நம்ம ஈரோட்டில்.. 

Nandhinipriya Ganeshan Updated:
64 பைரவர்களும் ஒரே இடத்தில்.. ஆசியாவிலேயே பெரிய பைரவர் கோவில் நம்ம ஈரோட்டில்.. Representative Image.

ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள ராட்டை சுற்றிபாளையத்தில் பிரம்மாண்டமான பைரவர் கோவில் கட்டுமான பணிகள் சுமார் 7 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தற்போது, திருப்பணிகள் முடிவடையும் நிலையில் உள்ள இந்த கோவிலில் உலகில் எங்கும் இல்லாதவாறு 64 பைரவர்களும் ஒரே இடத்தில் இருப்பதோடு மட்டுமல்லாமல், 39 அடி உயர காலபைரவர் சிலையும் பிரம்மாண்டமாக நிறுவப்பட்டு உள்ளது. 

இந்த சிலை யுனிக்யூ புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் எனும் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில், கோவிலின் மகா கும்பாபிஷேக விழா வருகின்ற 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10.15 மணிக்கு நடைபெற உள்ளதாக ஸ்வர்ண பைரவ பீடம் அறக்கட்டளை நிர்வாகி விஜயசாமிகள் தெரிவித்துள்ளார். 

கோவிலில் அமைக்கப்பட்டுள்ள 650 கிலோ பஞ்சலோக சிலைக்கு நெய் ஆரோக்கியத்தின் வடிவமாகவும், நாணயங்கள் செல்வத்தின் வடிவமாகவும் அர்ப்பணிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது. இதையொட்டி 10.3.2023 ஆம் தேதி மாசி மாதம் 26 ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு சுவர்ண ஆகர்ஷண பைரவ பஞ்சலோக சிலைக்கு பொதுமக்களால் நெய் அபிஷேகம் செய்யப்படுகிறது. மறுநாள் சனிக்கிழமை காலை 10 மணிக்கு கணபதி ஹோமத்திற்கு பிறகு முதற்கால பூஜை தொடங்கப்படுகிறது.

மதியம் 2.30 மணிக்கு அவல்பூந்துறை ஈஸ்வரன் கோவிலில் இருந்து பைரவர் ஆலயத்திற்கு பொதுமக்களால் தீர்த்தம் எடுத்து வரப்படுகிறது. தீர்த்த ஊர்வலம் யானை, குதிரை கிராமிய நிகழ்ச்சி மற்றும் வாண வேடிக்கையுடன் சிறப்பாக நடைபெறும். மாசி மாதம் 28 ஆம் நாள் (12.3.2023) காலை 10 மணிக்கு 2 ஆம் கால பூஜை, மாலை 5 மணிக்கு 3 ஆம் கால பூஜை, இரவு 7 மணிக்கு மேல் பாரம்பரிய கும்மி திருவிழா நடைபெறும்.

13.3.2023 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 6 மணிக்கு 4 ஆம் கால பூஜை மற்றும் 10.15 மணிக்கு மகா கும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெற உள்ளது. 10.3.2023 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் 13.3.2023 ஆம் தேதி திங்கட்கிழமை வரை கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும். மேலும் பக்தர்கள் தங்களது வேண்டுகோள்களை 98425 99006 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்